பெந்தெகொஸ்தே எங்கே தவறியது என்று நான் நினைக்கிறேன் என்றால் WHERE I THINK PENTECOST FAILED 55-1111 வெள்ளிக்கிழமை மாலை, நவம்பர் 11, 1955 கூடாரக் கூட்டம், சான் பெர்னாண்டோ, கலிபோர்னியா, அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் பெந்தெகொஸ்தே எங்கே தவறியது என்று நான் நினைக்கிறேன் என்றால் (55-1111) கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென். அது பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன் [சகோதரர் பிரன்ஹாம் சபையினரைக் கைதட்டச் செய்கிறார்] மிகவும் அருமை. ஓ, நான்-நான் இரவு முழுவதும் இதுபோன்று பாடுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். இந்த கூடாரத்தின் பின்புறத்தில் அவர்களுடைய இசைத்தட்டுகள் (records) இருப்பதாக ஒரு சகோதரர் சற்றுமுன் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். நான் உங்களுக்குச் சொல்கிறேன்; இந்த நாட்டில் உள்ள இந்த இசைத்தட்டுகள், எனக்கு எப்படி என்று தெரியவில்லை... சரி, அங்கு திரைப்படத் துறையில் பிங் கிராஸ்பி (Bing Crosby) எவ்வளவு பிரபலமானவரோ, அதே அளவுக்கு சுவிசேஷ மக்களிடையே இங்கு இவர்கள் பிரபலமானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த சகோதரர்களுடைய, இவர்கள் பாடிய அந்த இசைத்தட்டுகளில், என்னால் வாங்க முடிகிற எல்லாவற்றையும் எனக்காக வாங்கிக்கொள்ள நான் எண்ணியிருக்கிறேன். நீங்கள் பரலோகத்திற்குச் சென்று, அங்கே என்னை நீங்கள் தேட விரும்பினால், என்னை எங்கு கண்டுபிடிக்கலாம் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். அங்கே ஜீவத்தண்ணீருள்ள ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது. புரிகிறதா? மேலும் உங்களுக்குத் தெரியும், அங்கே சில பசுமையான மரங்கள் நிற்கின்றன, ஜாதிகளைக் குணமாக்குவதற்காக அந்த மரங்களின் இலைகளை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். அங்கே மறுபக்கத்தில், சதா காலமும் தேவ தூதர்களின் பாடகர் குழு பாடிக் கொண்டிருக்கிறது, வேர்மோ (Waermo), ஐனார் (Einar), சாங்கி (Sankey) போன்ற சிறந்த குரல்கள், மேலும் உங்களுக்குத் தெரியும், இங்கிருந்து கடந்து சென்ற மற்ற சிறந்த மனிதர்களும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். 2 சரி, இந்த மலையின் மறுபக்கத்தில் ஒரு சிறிய மரம் நிற்கிறது, நான் அந்த மரத்தின் அடியில் சாய்ந்துகொண்டு அவர்கள் பாடுவதைக் கேட்டுக்கொண்டிருப்பேன். புரிகிறதா? அங்கே தான் நீங்கள் என்னைக் கண்டுபிடிப்பீர்கள்... ஓ, என்னால் பாட முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நான்-நான் எப்போதுமே பாட விரும்புகிற, நான் மிகவும் நேசிக்கிற ஒரு பாடல் இருக்கிறது என்று நான் சொன்னேன், அதுதான் "அமேசிங் கிரேஸ்" (Amazing Grace). ஆனால் என்னால்-என்னால் ஒருபோதும் பாட முடியவில்லை. ஓ, என் தேவனே. ஆகையால், நீங்கள் அனைவரும் நம்முடைய வீட்டைச் சென்றடையும்போது, உங்களில் அநேகர், ஒருவேளை, எனக்கு முன்பாகவே அங்கே சென்று, உங்கள் பெரிய, அருமையான அரண்மனையில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம், அப்போது எங்கேயோ மலையின் குறுக்கே ஒரு எதிரொலி வருவதை நீங்கள் கேட்கும்போது, மலையின் மறுபக்கத்தைப் பாருங்கள், அங்கே அந்தப் பசுமையான மரங்களுக்கு நடுவே என் சிறிய குடிசையை நீங்கள் காண்பீர்கள், நான் முகப்பில் நின்றுகொண்டு, "வியக்கத்தக்க கிருபையே, எவ்வளவு மதுரமான சத்தம்" (Amazing Grace, How Sweet the Sound) என்று பாடிக்கொண்டிருப்பேன், நீங்கள் சொல்வீர்கள், "சரி, தேவனுக்கு ஸ்தோத்திரம், வயதான சகோதரர் பிரன்ஹாம் ஒருவழியாக அங்கு வந்துவிட்டார்." எனவே, நான் அந்த மறுபக்கத்தில், "அமேசிங் கிரேஸ்" பாடலுடன் அங்கிருப்பேன். நான் ஒருவேளை அங்கே சென்றால், அது வியக்கத்தக்க கிருபையாகத்தான் இருக்கும், நான்... அவருடைய கிருபைதான் அதை எனக்காக விலைக்கு வாங்கியது. நான் அவருடைய கிருபையினால் மட்டுமே செல்கிறேன். அப்படித்தான் நான் இன்றிரவு விசுவாசிக்கிறேன், நீங்களும் அப்படியே செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும். நாம் நல்ல பாடல்களை எவ்வளவு நேசிக்கிறோம். இப்போது, இது... நான் இங்கே வந்ததால்தான் இந்தக் குளிர் காலம் வந்ததாக நான் நினைக்கவில்லை. நான்-நான் அப்படி நினைக்கவில்லை. 3 இன்று காலை இந்த நகரத்தின் சில கிறிஸ்தவ வியாபாரிகளோடு, ஒரு சிறிய ஐக்கியத்தில், பாப்டிஸ்டுகள், மெத்தடிஸ்டுகள், பிரஸ்பிடீரியன்கள், மருத்துவர்கள், வழக்கறி ஞர்கள், மற்றும் பலருடன் எனக்கு ஒரு கூட்டம் இருந்தது. கேளுங்கள், பெந்தெகோஸ்தே மக்களாகிய நீங்கள் கொஞ்சம் சீக்கிரமாக முந்திக்கொள்வது நல்லது. அவர்கள் வேகமாக முன்னேறி வந்துகொண்டிருக்கிறார்கள். கிளைண் டேல் (Glendale) என்ற சிறிய நகரத்தில் உள்ள மிகச் சிறந்த கிறிஸ்தவ சகோதரர்களோடு ஒரு உண்மையான ஐக்கியத்தின் நேரத்தை நிஜமாகவே நாங்கள் கொண்டிருந்தோம். இப்போது, நாளை காலை நாம் முழு சுவிசேஷ வியாபாரிகளின் ஐக்கியத்தில் (Full Gospel Business Men's Fellowship) இருக்கப் போகிறோம், அது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கிளிஃப்டன்ஸ் (Clifton's) என்ற இடத்தில் என்று நினைக்கிறேன். (கிளிஃப்டன்ஸா, அப்படித் தானே?) கிளிஃப்டன்ஸ். இந்த கூட்டங்களில் நாம் நிஜமாகவே தேன் ஜாடியில் நம் கைகளை விட்டுவிடுகிறோம். ஒவ்வொரு போதகருக்கும், வியாபாரிக்கும் அது தெரியும் என்று நான் நினைக்கிறேன். தேன் ஜாடியில் கைகளை விடுவது என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? சரி, நான் உங்களுக்குச் சொல்கிறேன். இங்குள்ளவர்களில் எத்தனை பேருக்கு மீன்பிடிக்கப் பிடிக்கும்? பார்ப்போம், இதை நான் சொல்வதற்கு முன், மீனவர்கள். சரி, அது நல்லது. அப்படியானால் சரிதான். ஒரு பிரசங்கியார் மீன்பிடிப்பது ஒன்றும் தவறில்லையே, அப்படித்தானே? 4 ஆகவே, ஒருமுறை நான் நியூ ஹாம்ப்ஷயரில் (New Hampshire) இருந்தேன், எனக்கு மீன்பிடிக்க மிகவும் பிடிக்கும், குறிப்பாக ட்ரவுட் (trout) மீன், தூண்டில் மூலம் மீன்பிடிப்பது (fly fish). நான் ஒருநாள் அங்கே சென்றிருந்தேன், என்னிடம் ஒரு சிறிய கூடாரம் இருந்தது, நான் அங்கே திரும்பிச் சென்று, ஓ, மூன்று நாட்கள் இருக்கும் என்று நினைக்கிறேன், ஒரு சிறிய பழைய பப் கூடாரத்தில் (pup tent) தங்கியிருந்தேன். அது வசந்த காலத்தின் துவக்க காலம், அந்த பெரிய ஓடை ட்ரவுட் மீன்கள் அருமையாகச் சிக்கிக்கொண்டிருந்தன. எனவே ஒருநாள் காலையில் நான் விடியற்காலையில் புறப்பட்டு, வில்லோ மரங்களின் வழியே கீழே சென்றேன்; என்னிடம் ஒரு சிறிய பழைய கைக்கோடாரி இருந்தது, என் தூண்டில் முள் சிக்கித் தொலைந்து விடாதபடி வெட்டிக்கொண்டே சென்றேன். அந்த கோச்மேன் (coachman) முட்களை அந்த மலைப்பகுதியில் அவ்வளவு எளிதாக வாங்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே நான் மீன்பிடித்துக்கொண்டிருந்தேன். நான் சுமார் ஒன்பது மணியளவில் திரும்பி வந்தேன், நான் சொன்னேன், "சரி, நான் இப்போது திரும்பிச் சென்று என் பான்கேக்குகளைச் (pancakes) சமைப்பேன் என்று நினைக்கிறேன்." நான் அவ்வளவு சிறந்த சமையல்காரன் இல்லை, ஆனால் நீங்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும், அது உங்களுக்குத் தெரியும். 5 எனவே நான் கூடாரத்திற்குத் திரும்பி வந்தபோது, அங்கே கூடாரம் இருந்த இடம் ஒரே நாசமாகப் போயிருந்தது. அங்கே ஒரு முதிர்ந்த தாய் கரடியும் அதன் இரண்டு குட்டிகளும் உள்ளே நுழைந்து, அந்தக் கூடாரத்தை சுக்குநூறாகக் கிழித்துப் போட்டிருந்தன. அவை எதைத் தின்றதோ அது ஒரு விஷயமல்ல; ஆனால் அவை எதையெல்லாம் கிழித்துப் போட்டன என்பதே விஷயம். அவை சும்மா... அவை ஒரு அடுப்புக்குழாயைப் பார்த்தால், வெறும் விஷமத்தனத்திற்காக அதை நொறுக்கிப் போட்டுவிடும், அது உடைவதைக் கேட்பதற்காகவே, உங்களுக்குத் தெரியும். எனவே நான்... நான் வந்தபோது, அந்தத் தாய் கரடி உடனே என் வாசனையை உணர்ந்து ஓடிவிட்டது. அது தன் குட்டிகளைக் கூப்பிட்டது, ஒரு சின்ன குட்டி அதோடு சேர்ந்து ஓடிவிட்டது. எல்லாம் தரையில் தட்டையாகக் கிடந்தது. அந்தத் தாய் கரடி கொஞ்சம் தூரம் ஓடிச் சென்று, ஒருவாறு உட்கார்ந்துகொண்டு மற்ற குட்டியைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தது. ஆனால் அந்தச் சிறியவன் நகரவே-நகரவே இல்லை. அவன் எனக்குப் பின்பக்கமாக, இப்படி, முழுவதும் வளைந்துகொண்டு உட்கார்ந்திருந்தான். அந்தச் சிறியவன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று பார்க்க நான் கொஞ்சம் அருகில் நடந்து சென்றேன். அந்தத் தாய் கரடி பிராண்டிக் கிழித்துவிடும் என்பதால் நான் மிகவும் அருகில் செல்ல விரும்பவில்லை, குட்டிகள் விஷயம் உங்களுக்குத் தெரியும். எனவே... அங்கே எங்கேயோ ஒரு பழைய, உடைந்த .22 ரைபிள் துப்பாக்கி என்னிடம் இருந்தது, ஆனால் எப்படிப் பார்த்தாலும் அவளை சுட்டுக் கொன்றுவிட்டு காட்டில் இரண்டு அனாதைகளை விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை. எனவே நான் விரும்பினேன்... அங்கே ஒரு மரம் கூட இல்லை. என்னைக் காட்டிலும் அவள் நன்றாக மரமேறுவாள், அவளுடைய வழியிலிருந்து என்னால் தப்ப முடியாது, எனவே அவளை கோபப்படுத்த நான் விரும்பவில்லை. 6 எனவே நான் சுற்றிலும் நடந்து கொண்டிருந்தேன். அந்தச் சின்னக் கரடிக்கு என்ன ஆனது என்று நான் ஆச்சரியப்பட்டேன். அவன் நகரவே இல்லை; அவன் சும்மா அங்கே உட்கார்ந்திருந்தான். அவன் தன் பாதத்தை ஏதோ ஒருவிதமாக அசைத்துக்கொண்டிருப்பதை என்னால் காண முடிந்தது. அவன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்போதுமே, உங்களுக்குத் தெரியும், தேன் நிரம்பிய ஒரு கேலன் வாளி அல்லது அரை கேலன் வாளியை எடுத்துச் செல்வேன். உங்களுக்குத் தெரியும், எப்படியும் பாப்டிஸ்டுகளைச் சரிசெய்வதற்குத் தேன் தேவை, அது உங்களுக்குத் தெரியும். எனவே... நான் பான்கேக்குகளைச் சமைக்கும்போது, நான்-நான் நிஜமாகவே என் பாப்டிஸ்ட் தன்மையை வெளிப்படுத்துவேன்; நான் அவற்றின் மேல் தெளிப்பதில்லை (sprinkle); நான் அவற்றுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன் (baptize), சகோதரரே. நான் நிஜமாகவே அதை அதன்மேல் ஊற்றுகிறேன்; அவற்றில் நிறைய தேன் இருப்பதை நான் விரும்புகிறேன். எனவே அங்கே இந்த-இந்தத் தேன் நிரம்பிய ஒரு பெரிய பழைய டப்பாவை நான் வைத்திருந்தேன். இந்தச் சிறியவன் (கரடிகளுக்குத் தேன் மிகவும் பிடிக்கும்), அவன்-அவன் அதற்குள் புகுந்துவிட்டான். அவன் அதன் மூடியைத் திறந்துவிட்டான். அவன் அதைத் தன் சின்னக் கைகளில், இப்படி, நன்றாக அணைத்துக்கொண்டிருந்தான். அவன் தன் சின்னப் பாதத்தை வாளிக்குள் விட்டு, நக்கிக்கொண்டே, நக்கிக்கொண்டே இருந்தான். நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் திரும்பி என்னைப் பார்த்தபோது, அவனால் கண்களைத் திறக்க முடியவில்லை, அது அவ்வளவு முழுமையாக ஒட்டிக்கொண்டிருந்தது, உங்களுக்குத் தெரியும். அவன் தலையின் உச்சியிலிருந்து அவனுடைய சின்ன வயிறு வரைக்கும், பாதம் வரைக்கும் முழுமையாகத் தேன் வழிந்துகொண்டிருந்தது, அந்த வாளியைத் தன் பாதத்தால் துடைத்து, அப்படியே நக்கிக்கொண்டிருந்தான். அவன் திரும்பி என்னைப் பார்த்தான், நான் நினைத்தேன், "பையா, நீ தேனை நக்கிக்கொண்டிருக்கும் வரை உனக்கு எந்த ஆக்கினைத்தீர்ப்பும் இல்லை," உங்களுக்குத் தெரியும். நான் நினைத்தேன், "அது ஒரு நல்ல பழைய காலத்து முகாம் கூட்டத்தைப் போல, தேவன் அனுப்பிய பழைய பெந்தெகோஸ்தே கூட்டத்தைப் போல இல்லையா. தேனை நக்கிக்கொண்டிருப்பவர்களுக்கு எந்த ஆக்கினைத்தீர்ப்பும் இல்லை; அவர்கள் நக்கிக்கொண்டே இருப்பார்கள்." கொஞ்ச நேரம் கழித்து, அவனுடைய சின்ன வயிறு நிறைந்த பிறகு, ஏன், அவன் வாளியைக் கீழே போட்டுவிட்டான். அவனுடைய தாய் அவனைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தது. என்ன நடந்தது தெரியுமா? அவன் அங்கே சென்றபோது, அவனுடைய தாயும் சின்னச் சகோதரனும் அவனை நக்கத் தொடங்கினார்கள், ஏனென்றால் அவன் மீது தேன் இருந்தது. 7 ஓ, என்னே. அதனால்தான் நான் சொல்கிறேன், தேன் ஜாடியில் உங்கள் கையை விட்டு (புரிகிறதா?) அதை அப்படியே நக்குங்கள். தேனை நக்கிக் கொண்டிருப் பவர்களுக்கு எந்த ஆக்கினைத்தீர்ப்பும் இல்லை. மேலும் என்ன... ஒரு கேமரா அருகில் இல்லாதபோதுதான் எப்போதுமே இதுபோன்று நடப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள், உங்களுக்குத் தெரியும். தேன் ஜாடியில் நம் கைகளை விடுகிறோம் என்று நான் இதையே கூறுகிறேன், உங்களுக்குத் தெரியும்: ஆக்கினைத்தீர்ப்பு இல்லை, தேனை நக்கிக்கொண்டே இருங்கள், ஒரு நல்ல நேரத்தைக் கொண்டாடுங்கள். எனவே இன்றிரவு நாமும் அதே மாதிரியான ஒரு கூட்டத்தை இங்கே கொண்டிருக்க முடியும், அல்லவா? ஆக்கினைத்தீர்ப்பை எல்லாம் அகற்றிவிட்டு, கர்த்தரை நம் முழு இருதயத்தோடும் நேசித்து, அவருக்கு ஊழியம் செய்வோம், மெத்தடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடீரியன்கள் என அனைவரும் ஒன்றுசேர்ந்து, கைகுலுக்கி, ஒருவரோடொருவர் ஐக்கியம் கொண்டிருப்போம், அதேவேளையில் தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறது. 8 இப்போது, சற்றுமுன் நாங்கள் சகோதரர் ஆர்கன்பிரைட்டிடம் (Arganbright) பேசிக்கொண்டிருந்தோம். ஞாயிற்றுக்கிழமை மதியம் நாம் நம்முடைய ஆராதனையைக் கொண்டிருக்கப் போகிறோம். சபை ஆராதனைகளுக்கு-ஆராதனைகளுக்கு நாங்கள் இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக இதை நாங்கள் முடித்துவிடுகிறோம். நேரம் வரும்போது, ஒவ்வொருவரும் உங்களுடைய சொந்த சபையில், உங்கள் கடமையின் ஸ்தானத்தில் இருக்க வேண்டும் என்பதே எப்போதுமே என் எண்ணமாக இருக்கிறது. நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள், இப்போது இங்குள்ள சில நல்ல சபைகளைக் கண்டுகொள்ளுங்கள், அவற்றின் போதகர்கள் இங்கே மேடையில் இருக்கிறார்கள், ஒருவேளை அவர்கள் உங்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டி ருக்கலாம்... வார இறுதியில் அவர்களின் சபைகளுக்குச் செல்லுங்கள். ஞாயிற்றுக்கிழமை மதியம் இங்கே கூடாரத்தில் நம்முடைய ஆராதனை நடைபெறும். பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவில் அனைவரும் தங்கள் சொந்த சபைகளுக்கும் தங்கள் கடமையின் ஸ்தானத்திற்கும் செல்வதற்காக நாங்கள் ஆராதனையை முடித்துவிடுவோம். இப்போது, தேவனுக்குச் சித்தமானால், ஞாயிற்றுக்கிழமை மதியம்தான் நம்முடைய முதல் குணமாக்கும் ஆராதனையாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மதியம் குணமாக்கும் ஆராதனையை நாம் தொடங்குவோம். சிறுவர்கள் சுமார் ஒன்றரை மணிக்கு ஜெப அட்டைகளைக் (prayer cards) கொடுப்பார்கள், மேலும் ஆராதனைகள் சுமார் இரண்டரை மணிக்குத் தொடங்கும். இயேசுகிறிஸ்துவின்-இயேசுகிறிஸ்துவின் சவாலைப் பற்றிய சுவிசேஷப் பகுதியிலிருந்து நாம் பேசப் போகிறோம், மேலும் அவருடைய வார்த்தை இன்று குற்றவாளியாக இருக்கிறது. தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதற்கும்-காப்பதற்கும் அவர் கடமைப்பட்டிருக்கிறார். 9 எனவே தேவனுக்குச் சித்தமானால், ஞாயிற்றுக்கிழமை மதியம் தொடங்கி வியாதியஸ்தர்களுக்காக நான் ஜெபிக்கப் போகிறேன், அதன் பிறகு அடுத்த வாரம் முழுவதும் அது நடைபெறும். எனவே இப்போது, நான் தங்கியிருக்கும் வீட்டிற்குப் பலரும் தொடர்புகொண்டு... "வியாதியஸ் தர்களுக்காக நீங்கள் எப்போது ஜெபிக்கப் போகிறீர்கள்... வியாதிப்பட்டவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் எப்போது கொண்டு வருவது?" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சரி, தேவனுக்குச் சித்தமானால், ஞாயிற்றுக்கிழமை மதியம்தான் நாம் தொடங்கும் நேரமாக இருக்கும். இப்போது அக்கம் பக்கமெல்லாம் சென்று வியாதியுள்ளவர்களையும், பாதிக்கப் பட்டவர் களையும், அவர்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டு பிடியுங்கள். உள்ளே வரும் ஒவ்வொருவரையும் கர்த்தராகிய இயேசு குணமாக்கப் போகிறார் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்து வாருங்கள். அவர் அதைச் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் விசுவாசிக்கவில்லையா? 10 நாம் விசுவாசிக்கிறோம்... இப்போது, அவர் அதைச் செய்துவிட்டார், அவர்களை அதை விசுவாசிக்கச் செய்தால் மட்டும் போதும்; அதுதான் காரியம். பாருங்கள், உங்கள் இரட்சிப்பைப் போலவே, குணமாக்குதலும் ஏற்கனவே முடிந்துவிட்டது. பாருங்கள், நான் கேட்கிறேன், "நீங்கள் எப்போது இரட்சிக்கப்பட்டீர்கள்?" நீங்கள் சொல்வீர்கள், "ஓ, இரண்டு வருடங்களுக்கு முன், ஐந்து வருடங்களுக்கு முன், அல்லது இருபது வருடங்களுக்கு முன்." இல்லை, அது தவறு. ஆயிரத்துத் தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்பு கல்வாரியில் இயேசு மரித்தபோதே நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்கள். நீங்கள் அதை இரண்டு வருடங்களுக்கு முன்போ அல்லது பத்து வருடங்களுக்கு முன்போ ஏற்றுக்கொண்டீர்கள். புரிகிறதா? தேவனுடைய நிபந்தனைகள் விதிக்கப்படுவதற்கு முன்பாகவே, பாவத்திற்கான கேள்வி அங்கேதான் தீர்த்துவைக்கப்பட்டது, கல்வாரியில் அதற்கான முழுக்கிரயமும் செலுத்தப்பட்டுவிட்டது. இப்போது, இயேசு எதற்காக மரித்தாரோ அந்த எல்லா மீட்பின் ஆசீர்வாதங்களிலிருந்தும் வரும் ஒவ்வொன்றும், விசுவாசிகளாகிய உங்களுடைய தனிப்பட்ட சொத்தாக இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதை விசுவாசித்து, அதை ஏற்றுக்கொண்டு, அது உங்களுடையது என்று உரிமை கொண்டாடுவது மட்டுமே. ஒரு மனிதன் தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறக்கும்போது, வாழ்க்கைப் பயணம் முழுவதும் அவனுக்குப் பயன்படக்கூடிய ஒரு காசோலைப் புத்தகத்தை (checkbook) தேவன் அவனுக்குக் கொடுக்கிறார். ஒவ்வொரு காசோலையின் கீழ்ப்பகுதியிலும் இயேசுவின் நாமம் கையொப்ப மிடப்பட்டுள்ளது, எந்தவொரு மீட்பின் ஆசீர்வாதத்திற்காகவும் நீங்கள் அதை நிரப்பிக்கொள்ளலாம். அது உங்களுடையது, அதற்கான விலை ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது. இப்போது, நிச்சயமாக, அது பணமாக மாற்றப்படாது என்று நீங்கள் பயப்பட மாட்டீர்கள். உங்களுக்குப் பயமாக இருந்தால், அந்தப் புத்தகத்தை உங்கள் பாக்கெட்டிலேயே வைத்துக்கொள்ளுங்கள். 11 உங்களுக்குத் தெரியும், சுவிசேஷப் பணியில் என்னுடைய பத்து வருடப் பயணங்களில்... கர்த்தருடைய ஊழியத்தில் நான் இருபத்திமூன்று வருடங்களாக இருக்கிறேன், இரண்டு வகையான மக்களை நான் பார்த்திருக்கிறேன், ஒன்று அடிப்படைவாதிகள் (fundamentalist), மற்றொன்று பெந்தெகோஸ்தே மக்கள். அடிப்படைவாதிகளுக்கு ஸ்தான ரீதியாகத் தாங்கள் எங்கே நிற்கிறோம் என்பது தெரியும், ஆனால் அதோடு அவர்களுக்கு அதிக விசுவாசம் இல்லை. பெந்தெகோஸ்தே மக்களுக்கு நிறைய விசுவாசம் இருக்கிறது, ஆனால் தாங்கள் யார் என்பதும் தாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இது வங்கியில் பணம் வைத்திருக்கிற ஒரு மனிதனுக்கு, எப்படி காசோலை எழுதுவது என்று தெரியாமல் இருப்பதைப் போன்றது. மற்ற மனிதனால் காசோலை எழுத முடியும், ஆனால் அவனிடம் வங்கியில் பணம் இல்லை. ஆகையால் இந்த இருவரையும் நீங்கள் ஒன்றிணைக்க முடிந்தால், நிஜமாகவே உங்களிடம் எல்லாம் இருக்கும். ஹா. 12 எனவே பெந்தெகோஸ்தே மக்களிடையே நீங்கள் எப்போதாவது ஒரு உண்மையான நல்ல அடிப்படை விசுவாசத்தை, அல்லது பெந்தெகோஸ்தே மக்களோடு அடிப்படை உபதேசத்தைக் கொண்டுவர முடிந்தால், மற்றும்... அல்லது இதை அப்படியே மாற்றிச் செய்தால், அந்தக் கூட்டம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க நான் விரும்புகிறேன். தாங்கள் தேவனுடைய குமாரர்கள் மற்றும் குமாரத்திகள் ஆகப்போவதில்லை, ஆனால் நிகழ்காலத்தில், இப்போதே, தேவனுடைய குமாரர்கள் மற்றும் குமாரத்திகளாக இருக்கிறீர்கள் என்பதை மக்கள் உணரும்போது. நீங்கள் அதை ஆயிரம் வருட அரசாட்சிக்குத் (Millennium) தள்ளிப்போடுகிறீர்கள், எல்லா ஆசீர்வாதங்களையும் ஆயிரம் வருட அரசாட்சிக்குத் தள்ளிவிடுகிறீர்கள். ஏன், அது இப்போதே இருக்கிறது. ஆயிரம் வருட அரசாட்சியில் நமக்கு தெய்வீக சுகமளித்தல் தேவையில்லை. நாம்... இப்போதே அதை நாம் கொண்டிருக்கிறோம். நாம் தேவனுடைய குமாரர்களாக ஆகப்போவதில்லை, இப்போதே நீங்கள் தேவனுடைய குமாரர்களாகவும், சுதந்தரவாளிகளாகவும், இயேசுவோடே சுதந்தரவாளிகளாகவும் இருக்கிறீர்கள். ஆமென். மேலும் இயேசு கல்வாரியில் எதற்காக மரித்தாரோ அது எல்லாமே உங்களுடைய சொத்து. ஆமென். சகோதரரே, சாத்தானுக்கு இது பிடிப்பதில்லை, ஏனென்றால்... மக்கள் இதை உணர்ந்து, தேவனை அவருடைய வார்த்தையின்படியே ஏற்றுக்கொள்ள மனதுள்ளவர்களாக இருந்தால், நீங்கள்-நீங்கள் மிகவும்... சரி, அது அளவற்றது. 13 கொஞ்ச நாட்களுக்கு முன்பு இங்கே ஒரு மருத்துவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன், அவர்-அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார், அவர் சொன்னார், "ஓ, நீங்கள் ஒரு போதகர்." நான் சொன்னேன், "ஆம், ஐயா." அவர் சொன்னார், "உங்களுக்குத் தெரியுமா, நான் அந்த விஷயங்களை சுமார் நான்கு வருடங்கள் படித்தேன்." நான் சொன்னேன், "நீங்கள் நன்றாய் ஓடினீர்கள். உங்களை தடைசெய்தது எது?" அவர் சொன்னார், "ஓ, அதில் ஒன்றும் இல்லை என்று நான் கண்டுகொண்டேன்." அவர் சொன்னார், "நீங்கள்... நான் உங்களுக்குச் சொல்கிறேன்," என்று கூறி, "ஒரு போதகராக ஆவதற்காக நான் அதை நான்கு வருடங்கள் படித்தேன்," என்றார். மேலும் அவர் சொன்னார், "அதன் பிறகு, ஏனோ, நான் முழுவதுமாகக் குழம்பிப்போனேன் என்பதை உணர்ந்துகொண்டேன், நான்... மேலும் நான்..." நான் சொன்னேன், "இப்போது, விஷயம் இதுதான்." நான் சொன்னேன், "இப்போது, உங்களிடம் ஒரு எக்ஸ்-ரே (x-ray) இயந்திரம் இருக்கிறது. நீங்கள் ஒரு மனித உடலின் ஊடுருவிப் பார்க்க முடியும் மற்றும் பலவற்றைச் செய்யலாம். சரி, அது அருமையானது. அது அறிவாக்க மரமாக இருக்கிறது. அது ஏதேன் தோட்டத்தில் இருந்தது, ஏதேன் காலம் முதல் மனிதன் அந்த மரத்திலிருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்." ஆனால் நான் சொன்னேன், "அதற்கு ஒரு எல்லை இருக்கிறது." ஆனால் நான் சொன்னேன், "தேவனுடைய விசுவாசம் என்ற மரம் எல்லையற்றது." நான் சொன்னேன், "அறிவியல் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் நீங்கள் அறிவியலை நம்புகிறீர்கள், அதன் பிறகு உங்களால்-உங்களால் அறிவியல் ரீதியாக அதைத் தேட முடியாதபோது, அங்கிருந்து விலகி, அதன்பின் விசுவாசிக்கத் தொடங்குங்கள்." நான் சொன்னேன், "அப்படித்தான் நீங்கள் அதைச் செய்ய வேண்டும்." 14 தேவன் ஒருபோதும்... தேவன் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் இரக்கத்தையும் நீங்கள் ஒருபோதும் தீர்த்துவிட முடியாது. நீங்கள் சொல்கிறீர்கள், "சரி, பிதாவே, உங்களை இவ்வளவு தொந்தரவு செய்ய எனக்குப் பிடிக்கவில்லை." அவர் அப்படித் தொந்தரவு செய்யப்படுவதையே விரும்புகிறார். அப்படித் தான். தேவனிடம் அதிகமாகக் கேட்டுவிட்டோம் என்று நீங்கள் ஒருபோதும் நினைக்க வேண்டாம். வேதம் இப்படியாகச் சொல்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன், "நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே உங்களுக்குக் கிடைக்கிறதில்லை. நீங்கள் விசுவாசியாமலிருக்கிறதினாலே நீங்கள் விண்ணப்பம்பண்ணுகிறதில்லை." நம்முடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும் படி, நாம் கேட்டு விசுவாசிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நீங்கள் நிறைவாகக் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். பெரிய காரியங்களைக் கேளுங்கள்; உங்கள் விசுவாசத்தை ஒரு சிறிய கடுகு விதைக்குக் கட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள். இதிலிருந்து வெளிவந்து வேறு விதமான விசுவாசத்திற்குச் செல்லுங்கள், பெரிய காரியங்களுக்குள் நுழையுங்கள். கேளுங்கள்... சிறிய காரியங்களைப் பெற்றுக்கொள்வது எவ்வளவு எளிதோ அதே அளவு பெரிய காரியங்களைப் பெற்றுக்கொள்வதும் எளிது. நீங்கள் விசுவாசிக்க வேண்டும்; அவ்வளவுதான். உங்களுக்கு விசுவாசம் இருக்கிறது, அதை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்று மட்டும் தெரிந்துகொள்ளுங்கள், எல்லாம் சரியாகிவிடும். நீங்கள் அதைச் சரியாகச் செயல்படுத்துங்கள், அது நன்றாக இருக்கும். 15 தேவனுடைய அன்பு, வல்லமை, மற்றும் உங்களுக்கான நன்மைகளைத் தீர்த்துவிடுவதைக் குறித்துப் பேசுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா. கடலின் நடுவே இருக்கும் இவ்வளவு நீளமுள்ள ஒரு சின்னஞ்சிறு மீன் இப்படியாகச் சொல்வதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா, "இப்போது, ஒரு நிமிடம் பொறுங்கள். நான் இந்த விஷயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தத் தண்ணீரை நான் அளவாகக் குடிப்பது நல்லது, ஏனென்றால் என்றாவது ஒருநாள் தண்ணீர் தீர்ந்துபோய்விடலாம்." இங்குள்ள இந்த கடலின் நடுவே, இவ்வளவு பெரிய ஒரு சின்ன மீன்... சரி, தேவனிடம் நீங்கள் அதிகமாகக் கேட்பதைவிட, அது மிக எளிதாகவே நடந்துவிடும். அவர் வற்றாத ஜீவ ஊற்றாக இருக்கிறார். உங்களுக்கு என்ன தேவையோ, அதை அவரிடம் கேட்டு விசுவாசியுங்கள். கல்வாரியில் அவர் மரித்தபோது மீட்பின் ஆசீர்வாதங்களில் அவர் அதை ஆயத்தம் செய்து, இந்தப் பயணத்தில் உங்களுக்குத் தேவையான எல்லாவற்றிற்கும் ஒரு வாக்குத்தத்தத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். நீங்கள் கேட்டு விசுவாசித்தால், அது உங்களுடையது. அது முற்றிலும் சரி. 16 எகிப்தின் பெரிய களஞ்சியங்களுக்குக் கீழே இருக்கும் இவ்வளவு நீளமான ஒரு சிறிய எலி, "இப்போது, ஒரு நிமிடம் பொறுங்கள். குளிர்காலம் முடிவதற்குள் தானியம் தீர்ந்துவிடக்கூடும் என்பதால், நான் ஒரு நாளைக்கு இரண்டு தானியங்களை மட்டுமே சாப்பிடுவது நல்லது," என்று சொல்வதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்கி றவர்களும் அப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். காலையில் எழுந்ததும், "தேவனே, இன்று என் குடும்பத்தை ஆசீர்வதியும், எங்களை உமக்கு நெருக்கமாக வைத்துக்கொள்ளும். ஆமென். சரி, இன்றைய நாளுக்கான என் மார்க்கக் கடமையை நான் முடித்துவிட்டேன்" என்று சொல்கிறார்கள். ஓ, நான் உண்மையிலேயே அப்படியே சாய்ந்து படுத்துக்கொண்டு குடிக்க விரும்புகிறேன் (நீங்கள் விரும்பவில்லையா?), உண்மையான ஆவிக்குரிய சுவையான உணவின் பெருவிழாவைக் கொண்டாடி, இனி குடிக்கவே முடியாது என்ற நிலை வரும்வரை குடிக்க விரும்புகிறேன். 17 கலிபோர்னியாவில் உள்ள நீங்கள் அனைவரும் சிறந்த பழங்களை விளைவிப் பவர்கள். உங்களுக்குத் தெரியும்... நீங்கள் ஆரஞ்சு பழங்களை வளர்க்கிறீர்கள். அந்தச் சிறிய ஆரஞ்சு மரம் சுமார் அரை அங்குல உயரத்தில் இருக்கும்போதே, அதிலிருந்து நீங்கள் பறிக்கப்போகும் ஒவ்வொரு கூடை ஆரஞ்சு பழங்களும், அப்போதே அந்த மரத்தின் மீது அல்லது அந்த மரத்திற்குள் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது உங்களுக்குத் தெரியுமா? அப்படி இல்லையென்றால், அது எங்கிருந்து வந்தது? எங்கே... அதில் ஆரஞ்சு பழங்களை வைத்தது யார்? அது மரத்தில்தான் இருக்கிறது. அந்தச் சிறிய மரத்திற்கு நீங்கள் செய்வதெல்லாம், அதை நடுவதே. அதன்பிறகு நீங்கள் அதற்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். அது அதைக் குடிக்கிறது, அது தனக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாகக் குடிக்க வேண்டும். அது எந்த அளவுக்கு அதிகமாகக் குடிக்கிறதோ, அந்த அளவுக்கு அது வெளியே தள்ளத் தொடங்குகிறது. அது இலைகளை வெளியே தள்ளுகிறது, கிளைகளை வெளியே தள்ளுகிறது, பூக்களை வெளியே தள்ளுகிறது, பின்பு அது ஆரஞ்சு பழங்களை வெளியே தள்ளுகிறது. பின்னர் அது தொடர்ந்து குடித்து, மேலும் ஆரஞ்சு பழங்களையும், இலைகளையும், பூக்களையும் வெளியே தள்ளுகிறது; குடிக்கிறது, குடிக்கிறது, குடிக்கிறது, குடிக்கிறது. 18 ஒரு விசுவாசி கிறிஸ்து இயேசுவுக்குள் வைக்கப்படும்போது, வற்றாத ஜீவ ஊற்றில் நீங்கள் நடப்படுகிறீர்கள், நீங்கள் எவ்வளவு அதிகமாகக் குடிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக வெளியே தள்ளுவீர்கள். அது சரிதான். உங்களால் விசுவாசிக்க முடியாவிட்டால்... "சரி, இயேசு என்னை இரட்சிக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்." அது நல்லது. அப்படியானால் பரிசுத்த ஆவியானவரைக் குறித்து என்ன சொல்வீர்கள்? அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைத் தருவார் என்று விசுவாசியுங்கள்; அவர் அதை உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். தெய்வீக சுகமளிப்பதைக் குறித்து, அதை விசுவாசியுங்கள்; அவர் அதை உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். ஒவ்வொரு மீட்பின் ஆசீர்வாதமும் உங்களுடையதே; குடித்து, குடித்து, வெளியே தள்ளுங்கள். அவ்வளவுதான். உங்களுக்குத் தேவையான அனைத்தும் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெறும்போது, இங்கிருந்து மகிமைக்குச் செல்வதற்குள் உங்களுக்குத் தேவையான அனைத்தும் அப்போதே உங்களுக்குள் இருக்கிறது. உங்களுக்குத் தேவையானது விசுவாசம் அல்ல. நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருந்தால், உங்களிடம் விசுவாசம் இருக்கிறது, ஏனெனில் அவரே உங்கள் விசுவாசமாக இருக்கிறார். ஆனால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த விசுவாசத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிவதே. நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா? அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், அதைத்தான் வரும் வாரத்தில் நாங்கள் விளக்க முயற்சிப்போம், நீங்கள் கர்த்தருக்காகச் செய்யக்கூடிய அல்லது-அல்லது நினைப்பதற்கும் மிகவும் அதிகமாக, அபரிமிதமாக நடப்பதைக் காண்பீர்கள். 19 நாம் ஜெபம் செய்வோம். எங்கள் பரலோகப் பிதாவே, நீர் மிகவும் நல்லவர், பிதாவே, உம்முடைய நன்மைக்காக உமக்குத் துதி செலுத்த நாங்கள் எங்கள் தலைகளை அப்படியே வணங்குகிறோம். சில நேரங்களில் எங்கள் இருதயங்கள் எங்களை விட்டே சென்றுவிடுகின்றன. நாங்கள் உம்மோடு பேசும்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம், மேலும் நாங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் உம்மோடு ஒரு-ஒரு உரையாடலை நடத்த முடியும் என்பதை அறிந்திருக்கிறோம். தொலைபேசியைப் போல, ரிசீவரை எடுத்து, சென்ட்ரலை அழைத்து, தேசங்கள் முழுவதும் எங்கும் அதை இணைப்பதுபோல... தொலைபேசி எவ்வளவு அற்புதமான ஒரு விஷயம். கவிஞர் எழுதியது போல, நம்மிடம் ஒரு ராஜரீகமான தொலைபேசி இருக்கிறது. ரிசீவரை எடுத்து, முழங்கால்படியிட்டு, சென்ட்ரலாகிய கிறிஸ்து இயேசுவை அழைப்போம், "என் நாமத்தினாலே நீங்கள் பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை நான் செய்வேன்" என்று அவர் சொன்னார். அதன்பிறகு நாம் எதற்காகவும் இணைப்பை ஏற்படுத்தலாம். மீட்பின் ஆசீர்வாதங்கள் அனைத்தும் நம்முடையவை, அதற்காக நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இப்போதும், பிதாவே, உமது பரிசுத்த ஆவியானவரால் எங்கள் இருதயங்களை இப்போதே இடைக்கட்டிக்கொள்ளும்படியும், நாங்கள் உணர்ந்துகொள்ளவும், வார்த்தைக்குள் செல்லவும், மக்களுக்கு வார்த்தையைக் கொண்டுவரவும் எங்கள் ஆவிகளை மென்மையாக்கும்படியும் நாங்கள் ஜெபிக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் எடுத்து ஒரு விதையாகிய இருதயத்தில் வைப்பாராக. அது எஜமானருக்காக விலையேறப்பெற்ற கதிர்களைக் கொண்டுவரும் பெரிய இரட்சிப்பின் மரங்களாக வளருவதாக. எங்கள் இரட்சகராகிய கர்த்தராகிய இயேசு என்னும் அவருடைய நேச குமாரனின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். 20 இப்போது, இந்தச் சில இரவுகள் வார்த்தையைக் குறித்த போதனையில் என்னோடு பொறுமையாயிருந்ததற்காக நான் உங்களுக்கு அன்புடன் நன்றி கூறுகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவோடு இந்த ஆராதனையை நான் நிறைவு செய்கிறேன், நாளை இரவு. உங்களால் முடிந்தால், வருவீர்களா? நாளை இரவு வாருங்கள், ஏனென்றால் அதற்கடுத்த நாள் நான் தொடங்க வேண்டும்... நான் உபவாசிக்கத் தொடங்கி, வரப்போகும் சுகமளிக்கும் ஆராதனைக்காக ஆயத்தமாவேன். நீங்கள் மிகச் சிறந்த கூட்டமாக இருந்தீர்கள். நீங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இல்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் நம்மோடு இருந்து நம்மை ஆசீர்வதித்தார். உங்களுடன் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், வார்த்தையைச் சுற்றி உங்களோடு ஐக்கியம் கொள்ளவும் உங்களோடு சேர்ந்து களிகூரவும் இந்தச் சிறு நேரத்தை எனக்கு அளித்ததற்காக நான் நன்றி கூறுகிறேன். 21 இப்போது, "பெந்தெகோஸ்தே எங்கே தோற்றுப்போனது என்று நான் நினைக்கிறேன்" என்பதைப் பற்றி நான் நேற்று இரவு உங்களுக்கு வாக்களித்த ஒரு தலைப்பைக் குறித்து இன்று இரவு பேச விரும்புகிறேன். நான் சொல்வது தவறாக இருந்தால், தேவன் என்னை மன்னிப்பாராக, நீங்களும் மன்னிப்பீர்கள் என்று நான் ஜெபிக்கிறேன். ஆனால் நான் இந்த உண்மைகளைச் சுட்டிக்காட்ட மட்டுமே முயற்சிக்கிறேன், எங்கே என்று நாம் அறியும்படி... நாம் எங்கே தவறு செய்தோம் என்பதை நாம் அறிந்தால், செய்யக்கூடிய சிறந்த விஷயம் என்னவென்றால், மீண்டும் அங்கே திரும்பிச் சென்று மறுபடியும் புதிதாகத் தொடங்குவதே, நேராகத் திரும்பி வாருங்கள். ஏதோ நடந்திருக்கிறது என்பது நமக்குத் தெரியும். இன்று தேசமெங்கும் கடந்துசெல்லும் மனிதர்களை, தேவன் நமக்கு அனுப்பிய சிறந்த மனிதர்களாகிய பில்லி கிரஹாம், ஜாக் ஷூலர், ஓரல் ராபர்ட்ஸ், ஓ, டாமி ஹிக்ஸ், மற்றும் திரு. ஆலன், மற்றும்-மற்றும் இப்படிப்பட்ட பல மனிதர்கள் இன்று தேசத்தில் இந்த மாபெரும் தேசளாவிய எழுப்புதல்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இருந்தபோதிலும், அது எந்த நன்மையையும் செய்வது போலத் தெரியவில்லை. அது சரியாக உள்ளே இறங்குவதில்லை. 22 ஒரு குறிப்பிட்ட சுவிசேஷகர்... நான் அவர் பெயரைக் குறிப்பிடமாட்டேன், ஏனென்றால் அவர் ஒரு பிரபலமான மற்றும் அற்புதமான சகோதரர். அநேகமாக அவரும் நானும் இங்கே காரில் ஏறி இறையியலைப் பற்றி பேசிக்கொண்டு போனால், இரண்டு சிறிய செல்லப்பிராணி ரக்கூன்களைப் போல நாங்கள் வாக்குவாதம் செய்வோம். ஆனால் நாங்கள்... ஆனால் நான் அந்த மனிதரை நேசிக்கிறேன். அவர் ஒரு அற்புதமான சகோதரர், அவர் தேவனுடைய ஊழியக்காரர். ஆனால் அவர் கொஞ்ச காலத்திற்கு முன்பு இங்கே ஒரு குறிப்பிட்ட எழுப்புதலை நடத்தினார். பல மக்கள், சுமார்... பல ஆயிரம் மக்கள், பத்து, பதினைந்தாயிரம் மக்கள், ஒருவேளை அதற்கு மேலும், வந்து தங்கள் இருதயங்களைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்தார்கள். அதைக் குறித்து ஆராய்ந்தபோது (பின்தொடர்ந்து பார்த்தபோது), சில வாரங்களுக்குள், இன்னும் தொடர்ந்து நிலைத்திருக்கும் ஒரு சிலரை மட்டுமே, வெறும் கைப்பிடி அளவிலான மக்களை மட்டுமே அவர்களால் காண முடிந்தது என்பதை அவர்கள் கண்டறிந்தார்கள். 23 இப்போது, அது எங்கே இருக்கிறது என்று நான் நினைக்கிறேனென்றால், நண்பரே, கிறிஸ்தவ நண்பரே, முதலாவது... நாம் நெருக்கமாக கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று அறிவுப்பூர்வமான மதம், அறிவுப்பூர்வமான விசுவாசம். மற்றொன்று மறுபடியும் பிறக்கும் அனுபவம். அவற்றில் ஒன்று தலையில் இருக்கிறது, மற்றொன்று இருதயத்தில் இருக்கிறது. இப்போது, நிச்சயமாக, கடந்த ஆண்டு வரை அறிவியல் அதற்கு எதிராகப் போராடியது. ஆனால் சிகாகோ செய்தித்தாளில், நான் அதைப் பெற்றபோது, நான் அப்படியே சத்தமிட்டேன். வேதம், "அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்" என்று சொல்வது உங்களுக்குத் தெரியும். ஒரு மனிதன் தன் இருதயத்தில் நினைப்பது போல... சரி இப்போது, அறிவியல் சொன்னது, "தேவன் எல்லாவற்றையும் குழப்பிவிட்டார்." அது சொன்னது, "ஏனென்றால் இருதயத்தில் சிந்திப்பதற்கு எந்த மனத் திறன்களும் இல்லை." அது ஒரு பம்ப் மட்டுமே, சிலிண்டர் வழியாக வருவது போல, இரத்தத்தைப் பம்ப் செய்து, இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. ஆனால், "மனத் திறன்கள் தலையில் இருக்கின்றன" என்று அது சொன்னது. ஆனால், உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் இப்போது அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, தேவன் சொன்னதே சரி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, மனித இருதயத்தில் ஒரு சிறிய அறை, மிகச்சிறிய அறை இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள், அதில் ஒரு இரத்த அணு கூட இருப்பதில்லை. அது விலங்கின் இருதயத்தில் இல்லை; அது மனித இருதயத்தில் மட்டுமே உள்ளது. ஆத்துமா குடியிருக்கும் இடம் அதுதான் என்று அவர்கள் கண்டுபிடித்தார்கள். எப்போதாவது ஒரு விஷயம் நடக்கப்போகிறது என்று நீங்கள் திட்டவட்டமாக அறிந்தும், அதற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியாமலும், ஆனால் ஏதோவொன்று எப்படியும் அது நடக்கப்போகிறது என்று உங்களிடம் சொன்னதுண்டா? அதை நீங்கள் உங்கள் இருதயத்தில் விசுவாசிக்கிறீர்கள். அது கீழே இங்கே உள்ள ஒன்று. 24 இப்போது, இயேசு எப்போது... நீங்கள் வைதீகமாக இருக்க முடியும் என்பதால் அல்ல, உங்கள் மார்க்கத்தை உங்களால் விளக்க முடியும் என்பதால் அல்ல, மனிதன் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று அவர் சொன்னதன் அர்த்தம் உண்மையில் அதுவல்ல. ஒரு மனிதன்... அது அவ்வளவு அறிவுப்பூர்வமானது அல்ல, ஆனால் இங்கே கீழே ஏதோவொன்று நடந்திருக்கிறது, அது அந்த மனிதனை மாற்றியிருக்கிறது. அது அவனுடைய நோக்கங்களை மாற்றியிருக்கிறது. அது அவனுடைய எண்ணங்களை மாற்றியிருக்கிறது. அது அவனுடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. நான் நேற்று இரவு பேசிக்கொண்டிருந்தது போல, அவன் உள் பிரகாரத்திற்கு வந்திருக்கிறான். அவனைச் சுற்றி திரைகள் விழுகின்றன; அவன் அனுதினமும் தேவனுக்காக வாழ்கிறான். அவனை எங்கும், எந்த நேரத்திலும் சந்தியுங்கள், அவன் இன்னும் அந்த சாட்சியைத் தன் இருதயத்தில் கொண்டிருக்கிறான். எந்தவொரு சோதனையிலும் அவன் இன்னும் நன்மையாகவே நிலைத்துநிற்கிறான். அது செயல்படுகிறது, நண்பரே. அனுபவபூர்வமாக அதை நான் அறிவேன். 25 கொஞ்ச காலத்திற்கு முன்பு உங்களுக்கு நினைவிருக்கும், நான்-அவர்கள் என்னை ஜெப வரிசையில் அதிக நேரம் இருக்க விட்டுவிட்டார்கள், அது சுமார் எட்டு மாதங்கள் என்னை உடைத்துப்போட்டது. அவர்கள் எனக்காக ஏறக்குறைய எல்லாவற்றையும் செய்தார்கள். மேலும் நான்... தரிசனங்கள்... பாருங்கள், அவர்கள் அப்படியே-அவர்கள் என்னை அதிக நேரம் இருக்க விட்டுவிட்டார்கள். சுகமளிப்பதைக் குறித்து நாம் பேசும்போது அதை நாம் பின்னர் விளக்குவோம். ஆனால் இதில் ஒரு பகுதி என்னவென்றால், ஒரு மனிதர் என்னைச் சந்தித்து, "ஹே, போதகர் பிரன்ஹாம்" என்றார். நான், "ஆம், ஐயா" என்றேன். அவர், "உங்களுடைய வியாதி நாட்களின்போது உங்களுடைய மார்க்கத்தை நீங்கள் காத்துக்கொண்டீர்களா?" என்று கேட்டார். நான் சொன்னேன், "இல்லை, அது என்னைக் காத்துக்கொண்டது." நான் பிடித்துக்கொண்டிருக்கிறேனா என்பது முக்கிய மல்ல; அவர் பிடித்துக்கொண்டிருக்கிறாரா இல்லையா என்பதே முக்கியம். அது... வேலை முடிக்கப்பட்டுவிட்டது. 26 இப்போது, இன்று இரவு எபேசியர் புத்தகத்தில் காணப்படும் ஒரு தலைப்பைப் பற்றி நாம் பேசப்போகிறோம், இது மிகவும் அபாயகரமான ஒரு விஷயமாகும். அது-அது விசுவாசியாதவருக்கு அனுப்பப்படவே இல்லை; இது அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது, இது, முற்றிலுமாக விசுவாசிக்காகவே உள்ளது. இப்போதும், எபேசியர் 1-ம் அதிகாரத்தின் ஒரு பகுதியை, எபேசியர் 1-ம் அதிகாரத்தின் 3-ம் வசனத்திலிருந்து நான் வாசிக்கிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்த முள்ளவர்களும் குற்றமில்லாதவர் களுமாயிருப் பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார். அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின் படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. இப்போது, ஒரு அழகான வேதபகுதி, இப்போது, என்னால் முடியாமல் போகலாம், பரிசுத்த ஆவியானவரின் கிருபையில்லாமல் நான் இங்கே காண்பதை உங்களுக்குப் புரியவைக்கவோ, அதை பெந்தெகோஸ்தே சபைக்குப் பொருத்திக்காட்டவோ முடியாது. ஆனால் நீங்கள் இங்கிருக்கும் 1-ம் வசனத்தைக் கவனித்தால்: தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல்,... பரிசுத்தவான்களுக்கு... (வெளியே உள்ள உலகத்தினருக்கு அல்ல. இந்தப் புத்தகம் பரிசுத்தவான்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. "பரிசுத்தவான்" என்ற வார்த்தை "பரிசுத்தமாக்கப்பட்ட, அல்லது புனிதமான நபர்" என்பதிலிருந்து வருகிறது.) ...எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது: இது யாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்? வெளியாட்களுக்கு அல்ல, ஆனால் எபேசுவில் உள்ள பரிசுத்தவான்களுக்கு. இப்போது, நீங்கள் கொரிந்தியர் புத்தகத்தில் கவனித்தால்... ஓ, இந்தக் கொரிந்தியர்களிடம் பவுலுக்கு எவ்வளவு கடினமான நேரம் இருந்தது. அவர்கள் அனைவரும் வெவ்வேறு ஆசீர்வாதங்களையும், ஆவிக்குரிய வரங்களையும் தேடிக்கொண்டிருந்தார்கள். பவுல் அவர்களிடம் குழந்தைகளிடம் பேசுவதுபோல பேச வேண்டியிருந்தது. ஆனால் அவர் எபேசிய சபைக்கு வரும்போது, அவர் அவர்களிடம் வித்தியாசமான முறையில் பேசுகிறார். எபேசு சபை, அவர்கள் ஒரு உறுதியான சுவிசேஷ சபையாக இருக்கிறார்கள். 27 இப்போது, உலகத் தோற்றத்திற்கு முன்பாக தேவன் நமக்காக என்ன செய்தார் என்பதைப் பற்றி அவர் இங்கே பேசுகிறார். இப்போது, நான் கால்வினிஸ்டுகளிடமும் அர்மீனியர்களிடமும் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை உணர்கிறேன். கால்வின் வேதாகமத்தில் நிலைத்திருக்கும் வரை நான் ஒரு கால்வினிஸ்ட், அதன்பிறகு, நான் ஒரு அர்மீனியன். விசுவாசியைக் காத்துக்கொள்ளும் தேவனுடைய கிருபையில்-கிருபையில் நான் விசுவாசிக்கிறேன். ஆனால் விசுவாசி தேவனோடு நிலைத்திருக்கப் போதுமான தேவனுடைய கிருபையைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். சபையின் பாதுகாப்பில் நான் விசுவாசிக்கிறேன். சபை-சபைக்குப் பாதுகாப்பு இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் சபைக்குள் இருந்தால், நீங்கள் சபைக்குள் இருக்கும்வரை சபையோடு கூட பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள். உள்ளேயே இருங்கள். எல்லாவற்றினாலும் அலைக் கழிக்கப்பட்டு, சுற்றித் திரியாதீர்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் நிலைத்திருங்கள். சபை தமக்கு முன்பாகப் பரிசுத்தமும், குற்றமில்லாததும், கறையோ திரையோ இல்லாததுமாய் நிற்க வேண்டும் என்று தேவன் முன்குறித்திருக்கிறார். நீங்கள் அதில் நுழைந்தாலும் அல்லது நான் அதில் நுழைந்தாலும் சரி, தேவன் கறையோ பிழையோ இல்லாத ஒரு சபையைக் கொண்டிருக்கப் போகிறார். நாம் அனைவரும் அங்கே இருப்போம் என்று நான் நம்புகிறேன். ஆனால் நாம் ஒவ்வொருவரும் பயத்தோடும் நடுக்கத்தோடும் நம்முடைய சொந்த இரட்சிப்பைக் காத்துக்கொள்ள வேண்டும். 28 ஆனால் தேவன் தமது முதல் மனிதனை எப்போது உண்டாக்கினார் என்பதை அறிந்துகொள்ள நாம் பின்னோக்கிச் சென்றால், அவர் மனிதனைத் தமது சொந்த சாயலில் உண்டாக்கினார். தேவன் ஆவியாக இருக்கிறார், எனவே அவர் ஆவி-மனிதனை உண்டாக்க வேண்டியிருந்தது. இப்போது, 5-ம் வசனத்தில் "முன்குறித்தல்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, முன்குறிக்கப்பட்டது, ஒரு சுவிசேஷகரோ அல்லது ஊழியரோ பயன்படுத்துவதற்கு இது அவ்வளவு நல்ல வார்த்தையல்ல, ஏனென்றால் நீங்கள் "முன்குறித்தல்" என்று கூறும்போது அது மக்களைச் சற்று குழப்புகிறது. முன்குறித்தல் என்பது பேசுகிறது-முன்னறிவைப் பின்னோக்கிப் பார்க்கிறது; முன்னறிவு சேருமிடத்தைப் பார்க்கிறது. முன்குறித்தல் முன்னறிவுக்குத் திரும்பிச் செல்கிறது; முன்னறிவு சேருமிடத்திற்குச் செல்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன், "இப்போது, நான் இந்த மனிதனை இப்படி இருக்கச் செய்வேன், இந்த மனிதனை அப்படி இருக்கச் செய்வேன்" என்று சொல்லவில்லை. ஆனால் தேவனாக இருப்பதற்கு, அவர் ஆதிமுதல் அந்தம் வரை அறிந்திருக்க வேண்டும். எனவே அவர் அறிந்திருந்த முன்னறிவின் காரணமாக, "இது நடக்கும், அது நடக்கும்" என்று அவரால் சொல்ல முடிந்தது, ஏனென்றால் அவர் தேவனாக இருந்தார், எல்லாமே எங்கே வைக்கப்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே, சில காலங்களுக்காகச் சில காரியங்களை அவரால் நியமிக்க முடிந்தது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது-அது உண்மையிலேயே வேதாகமத்தின்படியானது. 29 இப்போது, நான் இந்தத் தலைப்பிலேயே இருக்கும்போது, இதை நாம் மிக நெருக்கமாகக் கவனிப்போம். "தேவனுடைய கிருபை வரங்களும் அழைப்பும் மனமாறுதல் இல்லாதவைகளாம்." அவை தேவனுடைய முன்னறிவாக இருக்கின்றன. உங்களால் ஒரு முழம் கூட்டவோ குறைக்கவோ முடியாது. கவலைப்படுவதினால், உங்கள் அளவோடு, அல்லது உங்கள் வளர்த்தியோடு ஒரு அங்குலம் கூட உங்களால் கூட்ட முடியாது. ஆனால் தேவன் முன்னறிந்து, அவர் உங்களை எப்படி விரும்புகிறாரோ அப்படியே உங்களை உருவாக்கியிருக்கிறார். அவர் உங்களை உருவாக்கியிருக்கிறார். அவர் உங்களை நிலைநிறுத்தி உங்களுக்கு ஒரு இடத்தைக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொருவரும்... எனக்கு என்ன பிடிக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மக்கள் தங்களது அசல் தன்மையோடு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மற்றவர்களைப் போலப் பாசாங்கு செய்வதை நான் விரும்புவதில்லை, நீங்கள் விரும்புவீர்களா? எனக்குப் பிடிக்கும்... இன்று உலகில் அப்படிப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்: நடிகர்கள். "பரிசேயன்" என்ற வார்த்தைக்கு "நடிகன்" என்று அர்த்தம் என்பது உங்களுக்குத் தெரியும். இன்று நம்மிடம் ஏராளமான நடிகர்கள் இருக்கிறார்கள், மக்கள் வேறு யாரையோ போல நடிக்க முயற்சிக்கிறார்கள், வேறு யாரையோ போலப் பாசாங்கு செய்ய முயற்சிக்கிறார்கள். நீங்கள் நீங்களாகவே இருந்தால் மக்கள் உங்களை இன்னும் அதிகமாக நேசிப்பார்கள். அவர்கள் உங்களை எப்படி எடுத்துக்கொள்வது என்பதை அதிகம் அறிந்துகொள்வார்கள். ஆண்களும் பெண்களும் தாங்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே இருக்கும் அந்த நாளை தேவன் துரிதப்படுத்துவாராக. நான் கிறிஸ்துவுக்கு எதிரானவனாக இருந்திருந்தால், இன்று இரவு நான் இங்கே அவருக்கு எதிராகப் பேசிக்கொண்டிருப்பேன். எனக்காக அவருக்காக எந்த நேரமும் இருந்திருக்காது. அப்போது நான் அவருக்கு எதிராக விரிவுரை ஆற்றியிருப்பேன். ஆனால் நான் அவரை நேசிப்பதாலும், நான் அவரை விசுவாசிப்பதாலும், நான் அவரை விசுவாசிப்பதன் காரணமாகவே ஒவ்வொரு வரையும் அவரை விசுவாசிக்கும்படிச் செய்ய நான் இங்கே முயற்சிக்கிறேன். 30 ஆகவே, மக்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும்போது, அல்லது கிறிஸ்தவத்தைப் போலப் பாசாங்கு செய்யும்போது, அல்லது அவர்கள் ஒரு கிறிஸ்தவரைப் போல நடிக்க முயற்சிக்கும்போது, அவர்களின் இருதயத்தின் ஆழத்தில் அவர்களுக்கு தேவ சமாதானம் இல்லாதபோது, நீங்கள் ஒரு நடிகராக மட்டுமே மாறுகிறீர்கள். மேலும், உங்களுக்குத் தெரியுமா, மக்களுக்கு அது நிஜமாகவே தெரியும். நீங்கள் அப்படி நடிக்கிறீர்கள் என்பது உங்கள் அண்டை வீட்டாருக்குத் தெரியும். நிச்சயமாக. நீங்கள் கோபப்படுவதையும், நிதானம் இழப்பதையும், வீட்டைச் சுற்றி நாயை அடிப்பதையும், உங்கள் கணவரிடம் கத்துவதையும், அவர் உள்ளே வரும்போது அவரைக் கட்டிலுக்கு அடியில் விரட்டுவதையும் அவர்கள் பார்க்கிறார்கள். அதையே நீங்களும்... ஏன், அது கிறிஸ்தவத்தின் செயல் அல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். நிச்சயமாக. நீங்கள் உண்மையிலேயே இரட்சிக்கப் படும்போது, அவர் உங்களை மாற்றுகிறார். நீங்கள் நடிக்க வேண்டியதில்லை; நீங்கள் இயற்கையாகவே செயல்படுவீர்கள். நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள். ஆனால் தேவன் முன்னறிந்து, வைத்து, சில காரியங்கள் நடக்கும்படி நியமித்தார். எனவே, அறிவின் வரத்தைக் கொண்ட தீர்க்கதரிசிகளை அவரால் அழைத்து, என்ன நடக்கப்போகிறது என்பதை அவர்களுக்கு முன்னறிவிக்க முடிந்தது. தேவன் தமது தீர்க்கதரிசிக்குக் கொடுக்கும் அறிவின் வார்த்தையாக அது இருப்பதனால், அவர்களால் அதைப் பேச முடிந்தது. அது நிறைவேறுவதற்கு முன்பாகவே அவர் அதை முன்னுரைக்கிறார், ஏனென்றால் தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். 31 ஆகையால், அறிந்துகொண்டு... யாரோ ஒருவர்... இப்போது, அது ஆதியிலே சாத்தானைக் குறித்து உங்கள் மனதில் ஒரு கேள்வியைக் கொண்டுவரலாம். ஏனெனில் சற்று காலத்திற்கு முன்பு ஒருவர் என்னிடம், "சாத்தான் ஒரு சிருஷ்டிகர் இல்லையா?" என்று கேட்டார். நான் சொன்னேன், "இல்லை, ஐயா. தேவன் ஒருவரே சிருஷ்டிகராய் இருக்கிறார். தேவன் ஒருவரே சிருஷ்டிகர்." அவர் சொன்னார், "அப்படியானால், சாத்தான் அதை சிருஷ்டிக்கவில்லை என்றால், தீமை எப்படி இங்கே வந்தது?" நான் சொன்னேன், "தீமை என்பது ஒரு சிருஷ்டிப்பு அல்ல. தீமை... சாத்தானால் சிருஷ்டிக்க முடியாது, ஆனால் தேவன் சிருஷ்டித்ததை அவனால் சீர்கெடுக்க முடியும்." பார்க்கிறீர்களா? அவன் சிருஷ்டிகர் அல்ல. தேவனே சிருஷ்டிகர், ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சாத்தான் சீர்கெடுக்கிறான். தேவன் நன்மையானதை சிருஷ்டித்தார், சாத்தான் அதை தீமையாக சீர்கெடுத்தான். மற்றெதைக் போலவும் அது சீர்கெடுக்கப்பட்டது; அது தவறானது. உங்கள் மனதும், இருதயமும், மற்றும் எல்லாமும், தேவனுடைய வார்த்தையோடு ஒத்துப்போகாமல், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த அதே கர்த்தராகிய இயேசு என்று விசுவாசிக்காமல், உங்கள் இருதயத்தில் சமாதானம் இல்லாமல் இருந்து, இருப்பினும் நீங்கள் ஒரு சபையைச் சேர்ந்தவர்களாக இருந்தால், கவனமாக இருங்கள்; உங்களுக்கு மாற்றப்பட்ட இருதயம் இருப்பதற்குப் பதிலாக, சீர்கெட்ட மனது இருக்கக்கூடும். அது கடுமையானது, அது கடினமானது, ஆனால் அது நல்லது. நான் நதியருகே வரும்வரை காத்திருப்பதை விட, இங்கேயே அதைச் சரிசெய்துகொள்ள விரும்புகிறேன். 32 நான் ஊழியத்திற்குச் சென்றபோது அவரிடம் கேட்டேன், நான் சொன்னேன், "தேவனே, நான் எப்போதாவது வழியை விட்டு விலகினால், நீர் என்னைச் சரிப்படுத்தும். அந்த அதிகாலையில் நான் நதியருகே வரும்போது எனக்கு எந்தத் தொந்தரவும் வேண்டாம். அது ஒரு பயங்கரமான நாளாக இருக்கும். அந்த அலைகள் என் ஆத்துமாவின் மீது மோதும்போது, என் நம்பிக்கைகள் எல்லாம் போய்விட்டன, வாழ்க்கையின் மெல்லிய நூல்கள் அறுந்து கொண்டிருக்கின்றன என்று எனக்குத் தெரியும், எனக்கு எந்த தொந்தரவும் வேண்டாம். அந்த நேரத்தில் நான் ஒரு முதியவனாக இருப்பேன் என்று நம்புகிறேன். பிரன்ஹாம்கள், வழக்கமாக அவர்கள் வயதாகும்போது, அவர்களுக்கு வாதம் வரும், நடுங்குவார்கள். நான் இனிமேலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முடியாத அளவுக்கு மிகவும் வயதாகிவிட்டேன் என்ற நாளைக் காணும் வரை நான் வாழ விரும்புகிறேன், அதற்கு மேல் நான் இருக்க விரும்பவில்லை. நான் பாதையின் முடிவுக்கு வந்து, நான் கடந்து வந்த ஒவ்வொரு முட்செடியையும், ஒவ்வொரு மலையையும் திரும்பிப் பார்க்க விரும்புகிறேன்; கால்தடங்களைப் பார்த்து, நான் நதியின் முடிவில் நிற்கிறேன் என்பதை அறிந்து, நான் அக்கரைக் செல்வதற்கு வெகுநேரம் ஆகாது என்று... 33 ஆஹா. அந்த மணல்மேல் நான் முழங்கால்படியிட்டு, இரட்சிப்பின் தலைச்சீராவைக் கழற்றி, மார்க்கவசத்தை அவிழ்த்து, பழைய பட்டயத்தை எடுத்து நித்தியத்தின் உறையிலே திரும்பப் போட்டு, என் கைகளை உயர்த்தி, "பிதாவே, இரட்சிப்புப் படகை அனுப்பும். நான் இன்று காலை வீட்டிற்கு வருகிறேன்" என்று சொல்ல விரும்புகிறேன். அது சரிதான். அவர் அங்கே இருப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். என் இரட்சகருக்கு நான் உண்மையுள்ளவனாக இருந்தால், என்னை நடத்தும் அவருடைய கரத்தை நான் பற்றிக்கொள்வேன். பரலோகத்தின் புதிய இன்பமான பாடலைப் பாடும்படி, மரண நதியைக் கடக்க அவர் நம்மை நடத்துவார். அவர் தமது விசுவாசியைக் காத்துக்கொள்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். அது சரிதான். தாவீது சொன்னார், "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்." 34 இப்போது, தேவன் முன்னறிந்து; தமக்கு முன்பாகத் தோன்றப்போகும் ஒரு சபையை அவர் நியமித்தார். இப்போது, கடந்த இரண்டு இரவுகளாக நான் ஓடிக்கொண்டிருந்ததைப் போல - இரண்டு இரவுகளாக, தேவனுடைய காலத்தின் மூன்றுகள்... முதல் சீர்திருத்தத்தை நான் விசுவாசிக்கிறேன்; இருண்ட காலத்திலிருந்து வந்த முதல் சீர்திருத்தமாக, ஆயிரத்து ஐந்நூறு வருட இருண்ட காலத்திலிருந்து, விசுவாசத்தினாலே நீதிமானாக்கப் படுவதை லூத்தர் பிரசங்கித்துக் கொண்டு வெளியே வந்தார். உங்களில் அநேக கிறிஸ்தவர்களுக்கும், சரித்திரம் படிப்பவர் களுக்கும், அது என்னவென்று தெரியும். அந்த நேரத்திற்கான தேவனுடைய மனிதனாக லூத்தர், செய்தியைக் கொண்டு வரும்படி வெளியே வந்தார். அது வனாந்தரத்திலிருந்ததற்கு ஒரு நிழலாக இருந்தது. இஸ்ரவேலுக்கு ஒரு அக்கினிஸ்தம்பம் இருந்தது, ஒரு அக்கினிஸ்தம்பம், அவர்கள் இரவும் பகலும் அதைப் பின்பற்றினார்கள். அந்த அக்கினிஸ்தம்பம் நின்றபோது, இஸ்ரவேலர்கள் அந்த அக்கினியின், அந்த வெளிச்சத்தின் கீழே பாளயமிறங்கினார்கள். அந்த அக்கினிஸ்தம்பம் நகரும் வரை அவர்கள் அங்கேயே இருந்தார்கள், இஸ்ரவேலர்கள் அக்கினியோடு நகர்ந்தார்கள். அவர் இஸ்ரவேலுக்கு மாம்சப்பிரகாரமாக அதைச் செய்ததைப்போலவே, சபைக்கு ஆவிக்குரிய பிரகாரமாகச் செய்திருக்கிறார். மார்ட்டின் லூத்தர், அக்கினிஸ்தம்பத்தை முதலில் கண்டவர், வெளியேறி, "நீதிமான் விசுவாசத்தினால் பிழைப்பான்" என்ற இந்த செய்தியோடு முன்னேறிச் சென்றார். அவர் அந்த செய்தியைப் பிரசங்கித்தார், மனிதர்கள் அவரைப் பின்பற்றினார்கள். ஆனால் லூத்தர் செய்த தவறு என்னவென்றால், அவர் ஒரு சபையை ஸ்தாபித்தார். எல்லாவற்றையும் லூத்தர் சபையைச் சேர்ந்ததாக மாற்றினார், அங்குதான் அவர் தவறு செய்தார். 35 ஒவ்வொரு ஸ்தாபனத்தின் மீதும் எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு, நாம் அனைவரும், ஒவ்வொருவரும் நல்லவர்கள் என்று நான் நினைக்கிறேன். நான் அவர்களுக்கு விரோதமாகப் பேசமாட்டேன், ஏனென்றால் அவர்கள் ஒவ்வொன்றிலும் எனக்கு பல நல்ல சகோதரர்கள் இருக்கிறார்கள். மேடையின் மீது, தரிசனங்களின் கீழ், பரிசுத்த ஆவியானவர் யாரையாவது சவால் செய்து, அவர்கள் தவறான சபையில் இருக்கிறார்கள் என்று சொல்வதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அது நடந்ததே இல்லை. அவர்கள் எத்தகைய - எந்த சபையைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர் அவர்களுக்கு மிகச் சரியாகச் சொல்வார் மற்றும் - மற்றும் அதுபோல பல்வேறு காரியங்களைச் சொல்வார். ஆனால் ஒருபோதும் அவர் யாருடைய விசுவாசத்தையும் சவால் செய்து, நீங்கள் தவறான சபையைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னதில்லை. 36 கவனியுங்கள், இப்போது முதல் சீர்திருத்தத்தின் கீழ் லூத்தர் இருந்தார். பின்னர் அவர் ஸ்தாபித்து லூத்தன் சபையை உருவாக்கினார். அக்கினிஸ்தம்பம் வெளியேறத் தொடங்கியது, ஆனால் லூத்தர்கன்களால் நகர முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே தங்கள் ஆவணங்களை வரைந்து, "நாங்கள் இதை விசுவாசிக்கிறோம், அவ்வளவு தான்" என்று வைத்திருந்தார்கள். தேவன் புதிய வெளிப்பாடுகளைக் காட்டியபோது, லூத்தர்கன்களால் நகர முடியவில்லை. ஆகையால் ஜான் வெஸ்லி என்ற பெயருடைய ஒருவர் இருந்தார், அவர் அந்த தரிசனத்தை, அக்கினிஸ்தம்பம் நகர்வதைக் கண்டார். அவர் பரிசுத்தமாக்கப்படுதல் என்ற செய்தியைக் கண்டு, அதை கிருபையின் இரண்டாவது செயல் என்று அழைத்தார். மெத்தடிஸ்டுகள்... லூத்தர்களால் அதற்குள் செல்ல முடியவில்லை, ஏனென்றால் அவர்களுக்கு அது கற்பிக்கப்படவில்லை. பின்னர் வெஸ்லி அதை எடுத்துக்கொண்டு பரிசுத்தமாக்கப்படுதலைக் கற்பித்தார், ஒரு மாபெரும் எழுப்புதல் தேசமெங்கும் வீசும்படி செய்தார். வெஸ்லியின் காலம் இங்கிலாந்தை அதன் சீர்கேட்டிலிருந்து இரட்சித்தது, இங்கிலாந்தில் இருந்த கால்வினிஸ்ட் சபை அவ்வளவு சீர்கெட்டுப் போய், அவர்கள் இனி எழுப்புதல்களை நம்பக்கூட இல்லை என்ற நிலைமை வரை சென்றபோது. "தேவன் என்ன செய்யப் போகிறாரோ, அதை அவர் செய்வார், அதனால் என்ன வித்தியாசம் ஏற்படப்போகிறது? அவர் அவர்களை இரட்சிக்கப் போகிறார் என்றால், அவர்கள் இரட்சிக்கப்படவே பிறந்தவர்கள் அல்லது அவர்கள் கெட்டுப்போகவே பிறந்தவர்கள்." ஓ, எந்த நிலைக்குச் சென்றுவிட்டார்கள். தேவன் ஒரு சாதாரண மனிதனை அனுப்பினார். பரிசுத்தமாக்கப்படுதலைப் பிரசங்கித்த ஜான் வெஸ்லியை அவர் அனுப்பினார். பின்னர் வெஸ்லி செய்த பிரச்சனை என்னவென்றால், மெத்தடிஸ்ட் என்றொரு சபையை அவர் ஸ்தாபித்தார். அதன் பிறகு அவர்கள் தங்கள் ஆவணத்தை எழுதினார்கள், "நாங்கள் இதை விசுவாசிக்கிறோம், அவ்வளவுதான்". பின்பு ஒரு நாள் அக்கினிஸ்தம்பம் மீண்டும் நகரத் தொடங்கியது. வெஸ்லியால் அதோடு நகர முடியவில்லை, ஏனென்றால் அவர் ஏற்கனவே அதற்கு ஸ்தாபிக்கப்பட்டுவிட்டார். 37 தங்களைப் பெந்தெகொஸ்தே என்று அழைத்துக்கொண்ட ஒரு கூட்ட மக்கள் இருந்தார்கள். அவர்கள் அக்கினிஸ்தம்பத்தைக் கண்டார்கள், பரிசுத்த ஆவியானவரைப் பெற்றார்கள், ஆவியின் வரங்களை, அந்நிய பாஷைகளில் பேசுவதை, மற்றும் பலவற்றைப் பெற்றார்கள். அவர்கள் அங்கிருந்து சென்று, நேராக வெளியேறி, ஒரு எழுப்புதலை உண்டாக்கினார்கள்; கத்தோலிக்க சபையின் "அவர் விசிட்டர், தி சண்டே விசிட்டர்" என்ற பத்திரிக்கைகூட, ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, பெந்தெகொஸ்தே சபை அந்த வருடம் தங்களைவிடச் சிறந்து விளங்கியது என்றும், பெந்தெகொஸ்தே அணிகளில் ஒரு மில்லியனுக்கும் மேலான ஐந்நூறாயிரம் மனம் மாறியவர்கள் இருந்தார்கள் என்றும் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு எழுப்புதலை உண்டாக்கினார்கள். உலகத்திலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் சபைகளில் ஒன்று பெந்தெகொஸ்தே மக்களாக இருந்தனர். ஆனால் பிசாசு என்ன செய்தான்? அவன் கூடவே வந்து, அவர்களை ஒரு ஸ்தாபனமாக மாற்றினான், அவர்கள் ஸ்தாபிக்கப்பட்டு, வேலிகளையும் எல்லைகளையும் வரையத் தொடங்கினார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? அக்கினிஸ்தம்பம்... மீண்டும் வெளியே நகர்கிறது, பெந்தெகொஸ்தே மக்கள் மிகவும் ஸ்தாபிக்கப்பட்டபடியால், அவர்களால் அதோடு நகர முடியவில்லை. ஆனால் தேவனுடைய அக்கினி அதேபோன்று நேராக நகர்ந்துகொண்டே இருக்கிறது, ஒவ்வொரு காலத்திலும் அவர் அதைச் செய்வார். சரித்திரத்தின் ஊடாக வீழ்ச்சியடைந்த எந்தவொரு சபையும் ஒருபோதும் மீண்டும் எழுந்ததில்லை. அது உங்களுக்குத் தெரியும். அவர்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள். நாம் எல்லைக்கோடுகளை வரையக்கூடாது. நாம், "இதை நாங்கள் விசுவாசிக்கிறோம்" என்று சொல்ல வேண்டும், முற்றுப்புள்ளியோடு அல்ல, கமாவோடு முடிக்க வேண்டும். "நாங்கள் இதை விசுவாசிக்கிறோம், அத்துடன் தேவன் எங்கள் இருதயங்களில் எவ்வளவு ஊற்றுவாரோ அதையும்." அதுதான்-அதுதான்... "இதை நாங்கள் விசுவாசிக்கிறோம்." 38 இப்போது, தேவன், ஆதியிலே அங்கு, அந்த... அந்த நிழல்கள் மிகவும் அழகானவை... அதற்குள் செல்வதற்கு நமக்கு நேரம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், ஆனால் எனக்கு மீதமுள்ள பதினைந்து, இருபது நிமிடங்களுக்குள், நிச்சயமாக நம்மால் அதைச் செய்ய முடியாது. ஆனால் அந்த மூன்றில் இப்போது என் நினைவில் இருக்கும் ஒன்றை மட்டும் நான் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். எலியா, எலிசாவைக் கண்டுபிடித்து, தன்னுடனே நடந்து வரும்படி அவனிடம் சொன்னதைக் கவனியுங்கள். பின்பு அவன், "நீ இங்கே இரு, நான் இன்னொரு பட்டணத்திற்குப் போகவேண்டும்" என்று சொன்னான். அவனுடைய இடத்தைப் பெறவிருந்த தீர்க்கதரிசியாகிய எலிசா, "கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன், நான் உம்மை விடேன்" என்றான். அதுதான் எலிசா. ஆக, எலியா எடுத்துக்கொள்ளப்படுவதில் கிறிஸ்துவின் நிழலாகவும், எலிசா அவருடைய இடத்தைப் பெற்று, அவருடைய ஊழியத்தை இரட்டிப்பான பங்குடன் முடிக்கும் சபையின் நிழலாகவும் இருந்தான். பார்க்கிறீர்களா? 39 இப்போது. பின்னர் அவன், "நான் தீர்க்கதரிசிகளின் பள்ளிக்குச் செல்கிறேன்" என்றான், அது இரண்டாவது பயணம். அவன், "நீ இங்கே இரு" என்றான். ஆனால் எலிசா, "உம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன், நான் உம்மை விடேன்" என்றான். அவன் தொடர்ந்து சென்றான். அவன் தீர்க்கதரிசிகளின் பள்ளிக்கு வந்தடைந்தபோது, அவன், "நான் யோர்தானைக் கடக்கிறேன்" என்றான். அவன், "நீ இங்கே இரு" என்றான். அவன், "உம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன், நான் இங்கே இருக்க மாட்டேன். நான் உம்மோடு வருவேன்" என்றான். எனக்கு அது பிடித்திருக்கிறது, பற்றிக்கொள்வதற்கான ஒரு தீர்மானம். விலைக்கிரயம் எதுவாக இருந்தாலும், முன்னேறிச் செல்லுங்கள்; தேவனோடு தொடர்ந்து செல்லுங்கள், ஆழமான தண்ணீர், ஆழமான அனுபவங்கள், அதிக அன்பு. அதற்கு எல்லையே இல்லை. அது அளவற்றது. 40 இப்போது, யோர்தானில், அது மரணத்தைக் குறிக்கிறது... மரணத்தோடு சம்பந்தப்படாத அந்த மற்ற இரண்டு இடங்களுக்கும் அவன் வந்தான்: பள்ளி, சந்திப்பு. நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப் படுதல், முதல் பிரகாரம், உள் பிரகாரம், முதல் திரைச்சீலை அல்லது முதல் பலிபீடத்தைப் போல. பின்பு அவன் மரணத்தைக் குறிக்கிற யோர்தானுக்கு வந்தபோது, நீங்கள் மரித்துப்போக வேண்டும்... பின்பு அவன் யோர்தானைக் கடந்து, அக்கரையை அடைந்தபோது, அவன் அவனிடமாகத் திரும்பி, "இப்போது, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். அவன் தயங்கவில்லை. அவன், "உம்முடைய ஆவியின் இரட்டிப்பான பங்கு என்மேல் வரும்படி வேண்டுகிறேன்" என்றான். அதிகமாய்க் கேளுங்கள். அவன் சொன்னான், "அரிதான காரியத்தைக் கேட்டாய், ஆனாலும், நான் எடுத்துக்கொள்ளப்படும்போது நீ என்னைப் பார்த்தால், அது உனக்குக் கிடைக்கும்." 41 அப்படியானால் எலிசா அல்லது எலி- எலியாவிடமிருந்து தன் கண்களைத் திருப்பியிருப்பான் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அதுதான் இன்று சபையிடம் நமக்கு இருக்கும் பிரச்சனை. 'நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள்' என்ற வாக்குத்தத்தத்தைப் பெற்ற ஏராளமான மக்கள் நம்மிடம் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் ஒரு கண்ணை உலகத்தின் மீதும் மற்றொரு கண்ணை தேவன் மீதும் வைத்திருக்கிறார்கள். நீங்கள் விழுவது நிச்சயம். இரண்டில் ஒன்றிலிருந்து உங்கள் கண்களைத் திருப்புங்கள். உங்கள் கண்களை உலகத்திலிருந்தும், உங்கள் அயலானிடமிருந்தும், உங்களுடைய-உங்களுடைய தொடர்புகளிலிருந்தும் திருப்பி, உங்கள் கண்களைக் கிறிஸ்துவின் மீது மட்டும் உறுதியாக வைக்க நான் உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். எலிசா தன் கண்களை எலியாவின் மீதே வைத்திருந்தான். மற்றும் எப்போது... சற்று நேரத்தில் அக்கினி இரதமும் அக்கினிக் குதிரைகளும் கீழே வந்தன, எலியா அதன்மேல் ஏறி மேலே சென்றான். அவன் மேலே சென்றபோது, மரணத்தின் வழியாய்ப் பாதையை உண்டாக்க அவன் எந்த சால்வையால் யோர்தானை அடித்தானோ அந்த சால்வையைக் கழற்றி, அதை எலிசாவுக்குத் திரும்ப எறிந்தான். அவன் அதை எடுத்துப் போட்டுக்கொண்டான், இது கிறிஸ்துவின் மிக அழகான நிழல். அவர் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு பெண் அவரிடம், "ஆண்டவரே, என் இரண்டு குமாரரும் உமது வலதுபாரிசத்திலும் இடதுபாரிசத்திலும் உட்காரும்படி?" என்றாள். அவர், "நான் குடிக்கும் பாத்திரத்தில் உங்களால் குடிக்கக்கூடுமா?" என்று கேட்டார். அவள், "கூடும்" என்றாள். "நான் பெறும் ஸ்நானத்தை உங்களால் பெறக்கூடுமா?" என்றார். அவள், "கூடும்" என்றாள். அவர், "உண்மையாகவே, உங்களால் கூடும்" என்றார். 42 கிறிஸ்துவின் மேல் இருந்த அதே பரிசுத்த ஆவியானவர்தான் தேவன் அவருக்கு அளித்த சால்வையாக, பரிசுத்த ஆவியின் அபிஷேகமாக இருந்தது. அவர்கள் பெந்தெகொஸ்தே நாளில் மேலே சென்று மேல் அறையில் காத்திருந்தார்கள், எலியாவின் நிஜப்பொருளாகிய இயேசு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் சால்வையைத் திருப்பி அனுப்பினார். அவர் மேல் இருந்த அதே பரிசுத்த ஆவியானவர் சபையின்மேல் இறங்கினார். அவர் சொன்னார், "நான் செய்கிறவைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைவிடப் பெரியவைகளையும் செய்வீர்கள்." கிறிஸ்துவின் மேல் இருந்த அதே பரிசுத்த ஆவியானவரின் இரட்டிப்பான பங்கு சபையின் மீது இருக்கிறது. எலிசா அந்த சால்வையை எடுத்து நதிக்கு நடந்துசென்று, நதியை அடித்து, "எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே?" என்றான். 43 ஓ, ஆஹா. இன்றைக்குப் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பதாகக் கூறிக்கொள்ளும் மக்கள், ஒரு பல்வலியைக் குணமாக்க தேவனில் நம்பிக்கையாயிருக்கப் பயப்படுகிறார்கள். அல்லேலூயா. சகோதரனே, யோர்தானைக் கடந்து, அக்கரையை அடையுங்கள். கிறிஸ்து இயேசுவின் மேலிருந்த பரிசுத்த ஆவியின் அந்தப் பங்கு, அந்த இரட்டிப்பான பங்கு, ஊழியஞ் செய்வதற்கும், அவர் வரும்வரை பணியைத் தொடருவதற்கும் சபைக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. "இன்னும் கொஞ்சக்காலத்தில் உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்: நான் (பிரதிபெயர்ச்சொல்) உலகத்தின் முடிவுபரியந்தமும் உங்களுடனே கூட, உங்களுக்குள்ளேயே இருப்பேன்." அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து இன்று இரவு தமது சபையோடு ஆவிக்குரிய ரூபத்தில் இருக்கிறார், அவர் இங்கே பூமியில் இருந்தபோது தம்மேல் வைத்திருந்த அந்த வல்லமைகளின் ஒவ்வொரு பகுதியையும் உங்களுக்குத் தருகிறார், பயன்படுத்துவதற்காக அது சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, ஆனால் அதைப்பயன்படுத்த நீங்கள் பயப்படுகிறீர்கள். அந்த கடைசி அடியை நீங்கள் எடுத்து வைத்தீர்களா என்று நான் ஆச்சரியப்படுகிறேன். நீங்கள் உண்மையிலேயே யோர்தானைக் கடந்துவிட்டீர்களா? 44 நீங்கள் யோர்தானைக் கடக்கும்போது, அது மரணம்; நேற்றிரவு நான் பேசிக்கொண்டிருந்த அந்தத் திரைச்சீலைக்குள், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நீங்கள் செல்கிறீர்கள், அங்கே உங்கள் வெளிச்சம் இனி உலகத்தினுடையதல்ல. மகிமையின் நம்பிக் கையாக உங்களுக்குள்ளிருக்கும் கிறிஸ்துவோடே நீங்கள் பக்கத்துப்பக்கமாக ஐக்கியத்தில் நடப்பீர்கள், பரிசுத்த ஆவியானவர் மரிக்கும் தன்மையுள்ள சரீரத்திற்குள் அசைவாடி ஜீவிப்பார். இன்று இரவு நான் உங்களிடம், ஒரு சிறந்த ஓவியரின் ஆவி எனக்குள் இருக்கிறது என்று சொல்லியிருந்தால், அந்த ஓவியரைப்போல நான் ஒரு ஓவியம் வரைய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஜான் டிலிங்கரின் ஆவி எனக்குள் இருக்கிறது என்று நான் சொன்னால், நான் பெரிய துப்பாக்கிகளை வைத்திருக்க வேண்டும் என்றும், ஒரு கொடூரமான குற்றவாளியாக இருக்க வேண்டும் என்றும் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவி எனக்குள் இருக்கிறது என்று நான் சொன்னால், நான் கிறிஸ்துவின் கிரியைகளைச் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்று அறிக்கையிட்டால், பாவத்தையும், சுயநலத் தையும், முன்கோபங்களையும் விட்டு விலகி, கிறிஸ்து வாழ்ந்தது போல சமாதானமான, தாழ்மையான, தேவன் ஆசீர்வதித்த ஒரு வாழ்க்கையை வாழுங்கள். ஆமென். அது சரிதான். 45 ஆஹா. எனக்கு இப்போது பயபக்தியாக இருக்கிறது. உண்மையிலுமே அப்படித்தான் இருக்கிறது. ஓ, எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது. அது வார்த்தை, அது மிகவும் நல்லது. அது உங்கள் ஆத்துமாவைக் கழுவுகிறது. கவனியுங்கள், 5-வது வசனம்: கிறிஸ்து இயேசு மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார். இங்கே சுவிகாரம் அல்லது நிலைநிறுத்துதல் குறித்த ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறது. இப்போது, எனது பெந்தெகொஸ்தே சகோதரர்களே, நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளாமல் போகலாம், ஆனால் அடுத்த பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு நீங்கள் இதை மிகவும் உன்னிப்பாகக் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உங்களிடமும், பைபிள் அறிஞர்களிடமும் ஒன்று கேட்க விரும்புகிறேன். பழைய ஏற்பாட்டில் ஒரு மகனைச் சுவிகாரம் எடுக்கும் அல்லது நிலைநிறுத்தும் சட்டம் ஒன்று இருந்தது. கலாத்தியர் புஸ்தகம், மற்றும் பலவற்றில், ஒரு போதகர் குழந்தையை எப்படி வளர்த்தார் என்பது உங்களுக்குத் தெரியும். என்ன நடக்கும் என்றால், ஒரு தகப்பனின் வீட்டில் ஒரு குழந்தை, ஒரு ஆண் குழந்தை பிறப்பான், அவன் பிறக்கும்போதே ஒரு மகனாகவே இருந்தான். ஆனால் அவனுக்கு ஒரு போதகர் கொடுக்கப்பட்டார். அந்தப் போதகர் குழந்தையை வளர்த்து, குழந்தை எப்படி முன்னேறிக் கொண்டிருக்கிறான் என்ற வார்த்தையை ஒவ்வொரு நேரமும் தகப்பனிடம் கொண்டு வருவார். குழந்தை ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு, அவன் தகுதியுள்ள குழந்தையாக இருந்திருந்தால், அவன் முற்றிலும் சரியானவனாக இருந்திருந்தால்... ஒருவேளை இல்லையென்றால், அங்கே சில காரியங்கள் நடக்க வேண்டியதிருக்கும். அவன் தகுதியற்றவனாக இருந்திருந்தால், அவன் ஒரு மகனாக இருந்தபோதிலும், அவனுக்கு அவனுடைய தகப்பனின் சுதந்திரம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் அவன் தகுதியுள்ள குழந்தையாக இருந்து, தகுதியானவனாகக் காணப்பட்டால், அவன் ஒரு பொதுவான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டான். அந்தத் தகப்பன்... இதைப் புரிந்துகொள்ளுங்கள். இது இங்கே இருக்கிறது; தவறவிடாதீர்கள். அந்தக் குழந்தையின் தகப்பன்... அவன் ஏற்கனவே குடும்பத்தில் பிறந்திருந்தான் (சரியாக பெந்தெகொஸ்தேக்கள், தவிர மற்றவர்களும்), குடும்பத்தில் ஒரு மகனாகவே பிறந்திருந்தான். 46 இப்போது, பெந்தெகோஸ்தே மக்களும், ஃப்ரீ மெதடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், மற்றும் பலரும், அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றபோது, "நாங்கள் அதைப் பெற்றுக்கொண்டோம்; அத்தோடு எல்லாம் முடிந்தது" என்று சொன்னார்கள். ஆனால் அது அப்படி முடியவில்லை. மெதடிஸ்டுகள், "சகோதரரே, நாம் சத்தமிடும்போது, நாம் அதைப் பெற்றுக்கொண்டோம்" என்று சொன்னார்கள். மெதடிஸ்டுகள் அப்படித்தான் சொல்லுவார்கள். ஒவ்வொரு மெதடிஸ்டும், "சகோதரரே, நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டீர்கள்" என்று சத்தமிடுவார்கள். ஆனால் தாங்கள் அதைப் பெற்றிருக்கவில்லை என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். பெந்தெகோஸ்தே மக்கள் அந்நிய பாஷைகளில் பேசியபோது, "நாங்கள் அதைப் பெற்றுக்கொண்டோம்" என்று சொன்னார்கள். ஆனால் நீங்கள் அதைப் பெற்றிருக்கவில்லை என்பதை நீங்கள் கண்டுகொண்டீர்கள். அது சரிதான். வாழ்க்கையே அதை நிரூபிக்கிறது. காய்ந்த மாட்டுத்தோல் மீது பட்டாணியைக் கொட்டுவது போல அந்நிய பாஷைகளில் பேசிவிட்டு, வெளியே சென்று ஏமாற்றுவதையும், திருடுவதையும், பொய் சொல்வதையும், மற்ற எல்லாவற்றையும் செய்யும் மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் அதைப் பரிசுத்த ஆவியானவர் என்று அழைக்க முடியாது. ஆனால் இப்போது, காத்திருங்கள். நான்-நான் சத்தமிடுவதிலும், அந்நிய பாஷைகளில் பேசுவதிலும் விசுவாசம் வைக்கிறேன், ஆனால் உங்களுக்கு ஒரு காரியத்தை உணர்த்த முயற்சிக்கிறேன். இப்போது நீங்கள் என் மேல் கோபப்படலாம், ஆனால் அங்கே (பரலோகத்தில்) கோபப்பட மாட்டீர்கள். கவனியுங்கள், இது உண்மை. 47 இப்போது, என்ன நடந்தது என்று கவனியுங்கள். இப்போது, இந்தக் குழந்தை குடும்பத்தில் பிறந்த பின்பும், அந்தத் தகப்பன், அவன் சரியான வகையான குழந்தை என்று அவனுடைய வாழ்க்கை நிரூபிக்கும் வரை அவனுக்கு எந்தச் சுதந்தரத்தையும் கொடுக்கவில்லை. மேலும் நமது காரியத்தில் பரிசுத்த ஆவியானவராகிய அந்த உபாத்தியாயர், இந்தக் குழந்தை எப்படி முன்னேறிக்கொண்டு வருகிறது என்ற செய்தியை எப்போதும் பிதாவிடம் கொண்டு சென்றார். இப்போது, நாம் வேலியைத் தாண்ட முயற்சி செய்திருக்கிறோம். குதிரைக்கு முன்னே வண்டியைக் கட்ட முயற்சி செய்திருக்கிறோம். தேவன் அதைச் செய்வதற்கு முன்பாகவே நீங்கள் காரியங்களை உரிமை கொண்டாடவும், செய்யவும் முயற்சி செய்தீர்கள், அதில் அதிகப்படியான மாம்ச சிந்தனையைக் கலந்துவிட்டீர்கள். அதுதான் சபையிலுள்ள பிரச்சனையாகும். உண்மையான பெந்தெகோஸ்தே விசுவாசம் இந்த அளவுள்ள கூட்டத்தின் மீது இறங்கியிருந்தால், சகோதரரே, இன்று இரவு இங்கே ஏதோ நடந்திருக்கிறது என்பதை கலிபோர்னியா முழுவதுமே அறிந்திருக்கும். அது சரிதான். ஏதோ தவறு இருக்கிறது. அது தேவனிடத்தில் உள்ள தவறு அல்ல; உங்கள் விசுவாசத்தில் உள்ள தவறு அல்ல; அது சரியாக நிலைநிறுத்தப்படுவதிலும், நீங்கள் என்ன செய்கிறீர்கள், அதை எப்படிச் செய்வது என்பதை அறிவதிலும்தான் இருக்கிறது. அதுதான் முழு காரியத்தின் ரகசியமாகும், பின்னர் உங்களை தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்பதாகும். 48 கவனியுங்கள், இந்தக் குமாரன் பிறக்கும்போதே குமாரனாக இருந்தான். பெந்தெகோஸ்தே மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றபோது, உள்ளே பிறந்தார்கள்... நான் சில பெந்தெகோஸ்தே மக்களை மட்டும் சொல்லவில்லை, அங்கு ஃபோர்ஸ்கொயர் (Foursquare) போன்ற பல பிரிவுகளும், மற்றும் அனைத்தும் இருந்தன... [டேப்பில் வெற்றிடம்]... பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதில் விசுவாசம் வைக்கும் மக்கள். மேலும் கென்டக்கியில் உள்ள பாப்டிஸ்டுகளாகிய நாங்கள், நான் இங்கே வந்தபோது, என் சபைக்கும் பெந்தெகோஸ்தே சபைக்கும் இடையே நான் கண்ட ஒரே வித்தியாசம், அந்நிய பாஷைகளில் பேசுவது என்ற ஆரம்ப அடையாளம்தான். அதை மட்டும்தான் நான் வித்தியாசமாகக் கண்டேன். 49 இப்போது, கொஞ்ச காலத்திற்கு முன்பு நான் இங்கே ஒரு பாப்டிஸ்ட் சபையில் பிரசங்கித்துக்கொண்டிருந்தேன், அப்போது நான் சொன்னேன்... யாருமே, "ஆமென்" என்று சொல்லவில்லை, ஒன்றுமே இல்லை. ஏன், சகோதரரே, அந்தப் பாட்டிமார்கள் தங்களது பழைய கயிறு கட்டிய தொப்பிகளை எடுத்துக் கொண்டு, கத்திக்கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும், தரையில் அங்குமிங்கும் நடப்பதையும், பெஞ்சுகள் மேல் நடப்பதையும், மற்ற எல்லாவற்றையும் செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். நிச்சயமாக. கேளுங்கள், நான் கேட்டேன், "இது ஒரு பாப்டிஸ்ட் சபையா?" அவர், அந்தப் போதகர் மரியாதையாகத் தலையசைத்து, "ஆம், ஐயா" என்றார். ஒரு... நான் சொன்னேன், "நிச்சயமாக அதைப் போலத் தெரியவில்லையே." என்னால் முடிந்த அளவு மீண்டும் கடுமையாகப் பிரசங்கித்தேன். யாரும், "ஆமென்" சொல்லவில்லை, தங்களால் முடிந்த அளவு விறைப்பாகவும், இறுக்கமாகவும் அமர்ந்திருந்தார்கள். நான் சொன்னேன், "கேளுங்கள், நீங்கள் பாப்டிஸ்டுகள் அல்ல. நீங்கள் வெறுமனே சபையில் இணைந்தவர்கள். நான் வந்த இடத்தில், நீங்கள் ஒரு பாப்டிஸ்டாக இருந்தால், நாங்கள் பலிபீடத்தருகே வந்து, அந்த அனுபவத்தைப் பெறும்வரை (come through) ஒருவருக்கொருவர் முதுகில் தட்டிக்கொள்வோம்." சகோதரரே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், இன்று நமக்குத் தேவையானது, அந்த அனுபவத்தைப் பெறும்வரை பலிபீடத்தில் முதுகில் தட்டிக்கொள்கிற, அந்தப் பழைய முறையான காரியங்கள் இன்னும் கொஞ்சம் தேவை. (அல்லேலூயா.), உங்களுடைய சுயத்திற்கும் பாவத்திற்கும் மரித்து, பரிசுத்த ஆவியானவரால் நீங்கள் பிறக்கும்வரை. உங்கள் பணப்பையைத் தொலைத்து விடுங்கள், அவர் அதை உங்களிடம் திரும்பக் கொண்டு வருவார். நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டால், அவர் உங்களைக் கைவிட மாட்டார். அவர் ஒரு சகோதரனாக இருந்து, உங்களை அணைத்து, உங்களை மீண்டும் தூக்கிவிட உதவி செய்து, உங்களுக்காக ஜெபிப்பார். ஆமென். [டேப்பில் வெற்றிடம்] 50 கவனியுங்கள், குழந்தை பிறந்தபோது, அவன் ஒரு குமாரனாக இருந்தான்; ஆனால் அவனது நடத்தை அவனது சுதந்தரத்தோடு தொடர்புடையதாக இருந்தது. இப்போது, நீங்கள் மிகவும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவன்-நமது நடத்தை சென்றதை விட, நாம் சுதந்தரத்தை இன்னும் சற்று தூரம் தள்ள முயற்சித்தோம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? அதுதான் இன்றைய பிரச்சனையாகும். நாம் அந்தச் சாலையில் வெகு தூரம் முன்னால் சென்றிருக்க வேண்டும். ஆனால் நாம் இங்கே வெகு பின்னால் இருக்கிறோம். ஏன்? அது நமது நடத்தையால்தான்; நமக்கு எந்த மரியாதையும் இல்லை. நான் கூட்டங்களில் நின்று கவனித்திருக்கிறேன், மேலும், நான் பைபிளைச் சரியாகப் புரிந்துகொண்டிருந்தால்... இதற்குப் பிறகு எனக்கு சில நல்ல சூடான கடிதங்கள் வரலாம், ஆனால் பரவாயில்லை என்று நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் நான் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருப்பேன். ஆனால் அந்நிய பாஷைகளில் பேசும் வரம் உள்ளவர்கள், முறைதவறிப் பேசுவதை நான் கவனித்திருக்கிறேன். பிரசங்கியார் பிரசங்கித்துக் கொண்டிருக்கும்போது, யாராவது எழுந்து நின்று அந்நிய பாஷைகளில் பேசுவார்கள். அது முறைதவறிய செயலாகும். தீர்க்கதரிசிகளின் ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே. தேவனுடைய வார்த்தையே முதலாவது, அது ஒருபோதும் இரண்டாவதாக வராது. தேவன்... இது தேவனுடைய வார்த்தை. 51 மேலும் மக்கள் எழுந்து நின்று அந்நிய பாஷைகளில் பேசுவதையும், எல்லாரும் அதைக் கண்டுகொள்ளாமல் தங்கள் காரியங்களைத் தொடர்ந்து செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். அது முறைதவறிய செயலாகும். நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டும். அது உண்மையான தேவ ஆவியாக இருந்தால், அது ஏதோ ஒன்றைச் சொல்லட்டும். தேவன் எதைச் சொல்கிறாரோ, அதைக் கேளுங்கள்; அதை எழுதி வையுங்கள். இப்போது, தேவன் வார்த்தைகளை மென்று விழுங்க மாட்டார், வேறு எதையாவது திரும்பத் திரும்பச் சொல்ல மாட்டார், அவர் அப்படி... வீண் வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம் என்று அவர் நமக்குச் சொல்லியிருக்கிறார். அவர், வேதவசனத்தை மேற்கோள் காட்டச் சொல்ல மாட்டார்; ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று சொல்லி, ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு சரியான நேரத்தில், அவர் உங்களுக்கு நிச்சயமாக ஏதோ ஒன்றைக் கொடுப்பார். பின்பு அதைப் பின்பற்றுங்கள். அது அப்படி நடக்கவில்லை என்றால், அந்த நபர் பலிபீடத்திற்குச் சென்று தேவனிடம் தன்னைச் சரிசெய்துகொள்ள வேண்டும். அவர்கள் மேல் ஒரு பொல்லாத ஆவி இருக்கிறது. அப்போதுதான் இதுபோன்ற சில முட்டாள்தனங்களை உங்களால் சுத்தம் செய்ய முடியும். அது சரிதான். நாம் முழு பயபக்தியுள்ள இருதயத்தோடு சபைக்குள் வர வேண்டும், ஒரு... சபை என்பது ஒரு சமூகக் கூட்டமோ, அல்லது ஒரு வகையான மைதானமோ, அல்லது பகல் முழுவதும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பேசிக்கொள்ளும் இடமோ அல்ல. அது ஆராதனை செய்யும் ஒரு இடம். நாமோ அதை ஒரு குழப்பத்தின் வீடாக ஆக்கிவிட்டோம். ஹூ. அது கிட்டத்தட்ட வயிற்று வலியைக் கொடுக்கும், ஆனால் அது உங்களுக்கு நன்மை செய்யும். சரி. அந்த வயிற்று வலிக்கு தேவனிடம் ஒரு மருந்து இருக்கிறது. அது உங்களுக்குத் தெரியுமா? 52 மோசே இரண்டு மில்லியன் மக்களை வனாந்தரத்தின் வழியே வழிநடத்தினார். அவர் அவர்களை நாற்பது வருட காலம் வழிநடத்தினார், அவர் மறுபுறம் வெளியே வந்தபோது, அவர்களுக்குள் பலவீனமான ஒருவனும் இருக்கவில்லை. இன்றிரவு இங்குள்ள மருத்துவர்களே, அல்லது உங்களில் சிலரே, டாக்டர் மோசேவிடம் என்ன இருந்தது, என்ன மருந்துச் சீட்டு இருந்தது என்பதை அறிய விரும்ப மாட்டீர்களா? அவர் அந்த மக்களுக்கு என்ன கொடுத்தார்? ஒவ்வொரு இரவும் எத்தனை குழந்தைகள் பிறந்தன? எத்தனை முதியவர்கள் மற்றும் பலர்? எத்தனை முடவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள்? மற்றும் ஒவ்வொரு இரவும் அவருக்கு எத்தனை வயிற்று வலிகள் மற்றும் மற்ற எல்லாமும் வந்தன? டாக்டர் மோசே அவை ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டார். அவருடைய மருத்துவப் பையைப் பார்த்து, அவர் எத்தகைய மருந்துச் சீட்டைக் கொடுத்தார் என்பதைக் கண்டறிய நீங்கள் விரும்புவீர்களா? அது என்னவென்று நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? அது என்னவென்று பார்ப்போம். இதோ: "உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே." ஆமென். அவரிடம் இருந்த ஒரே மருந்து அதுதான், அது இரண்டு மில்லியன் மக்களுக்கும் வேலை செய்தது. அவர்கள் கீழ்ப்படிதலோடு இருந்தவரை, அவர்கள் முணுமுணுக்காமலும் சண்டை யிடாமலும் இருந்தவரை, அவர்கள் தேவனுக்கு முன்பாகக் கீழ்ப்படிதலுடனும் தாழ்மையுடனும் நடந்துகொண்டவரை, தேவன் அவர்களுக்கு முன்னே சென்று அவர்களைக் கரம் பிடித்து நடத்தினார், அவர்களைக் கழுகுகளின் செட்டைகளின்மேல் சுமந்து சென்றார். ஆனால் அவர்கள் முறைதவறிய மறுகணமே, தேவன் அவர்களை விட்டுத் தம்மைப் பிரித்துக்கொண்டார். அது சரிதான். அந்தப் பயணம் சுமார் நாற்பது மைல்கள் மட்டுமே இருந்தது, அவர்கள் இரண்டு, மூன்று நாட்களில் அதைச் சென்றடைந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் கடந்துசெல்லத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள முயன்று நாற்பது வருடங்கள் அங்கே சுற்றித்திரிந்தார்கள். இன்று இரவு சபையும் அப்படியே இருக்கிறது. நாம் எல்லாம் குழம்பிப் போயிருக்கிறோம். 53 இப்போது, மீண்டும் புத்திர சுவிகாரத்திற்கு வருவோம். என்ன நடந்தது? இப்போது, இந்தக் குழந்தை பிறந்தபோது, புதிய பிறப்பைப் பெற்றான். நான் நேற்றிரவு அதையேதான் பொருத்திப் பேசினேன். மன்னாவைச் சாப்பிட்ட பலரும் வெளியே நிற்க முடிந்தது. மன்னா ஒவ்வொரு இரவும் பொழிந்தது. அது சரிதான். ஆனால் அது ஒவ்வொரு இரவும் பொழிய வேண்டியிருந்தது. மேலும் பின்பு, சில நேரங்களில் அவர்களுக்கு, உணவு வேளைகளுக்கிடையில் கொஞ்சம் பசி எடுத்திருக்கலாம், ஏனென்றால் அது இங்கே வெளியே இருக்கும்போது அந்த மன்னா அதிக நேரம் நீடிக்கவில்லை. ஆனால் அந்த மனிதன் திரைக்குள்ளே சென்று, அங்கு மகா பரிசுத்த ஸ்தலத்தில் வாழ்ந்தபோது... நீங்கள் கேட்கலாம், "சகோதரர் பிரன்ஹாம், நாம் அங்கே வாழ்கிறோமா?" ஆரோன் மட்டுமே, அல்லது மோசே, வருடத்திற்கு ஒருமுறை உள்ளே சென்றார், அல்லது பிரதான ஆசாரியராகிய ஆரோன், அவர் அபிஷேகம் பண்ணப்பட வேண்டியிருந்தது. ஆனால் ஒவ்வொரு விசுவாசியும் மகா பரிசுத்த ஸ்தலத்தின் பிரசன்னத்திற்குள் வரும்படி கிறிஸ்து திரையைக் கிழித்தார். ஒவ்வொரு நாளும் நீங்கள் சாப்பிட வேண்டிய உயிருள்ள மன்னா அல்ல, ஆனால்-பகல் முடிவதற்கு முன்பே தீர்ந்துபோகிற ஒரு மன்னா, காலையில் ஒரு சிறிய ஜெபம், ஆனால் தொடர்ந்து கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்தில் வாழ்ந்து, அவரோடு நடப்பதும் பேசுவதுமாக இருக்க வேண்டும். 54 கொஞ்ச காலத்திற்கு முன்பு கடல் கடந்து இங்கே வந்த ஒரு சிறிய ஐரிஷ் பெண்மணி எனக்கு நினைவுக்கு வருகிறார், அவர் இங்கே வரும் வழியில் இருந்தார். கப்பலில் ஜாஸ் இசைக் குழுவினர் அனைவரும் வாசித்துக்கொண்டும், கொண்டாடிக்கொண்டும் இருந்தார்கள், உங்களுக்குத் தெரியுமே. கொஞ்ச நேரம் கழித்து ஒரு பெரிய புயல் வந்தது, அவர்கள் அபாய அழைப்புகளை அனுப்பினார்கள். அப்போது கப்பல் கேப்டன் கீழே ஓடிவந்து, "ஒரு நிமிடம் உங்கள் இசையை நிறுத்துங்கள்" என்றார். அவர், "எங்களுக்கு இப்போதுதான் நியூயார்க்கிலிருந்து செய்தி வந்தது. நம்மால் முப்பது நிமிடம் தாக்குப்பிடிக்க முடியாவிட்டால், நாம் கடலின் அடியில் போகப் போகிறோம்" என்றார். "உங்கள் இசையை மாற்றுங்கள்" என்றார். "நீங்கள் அனைவரும் ஜெபியுங்கள்" என்றார். அனைவரும் முழங்காலில் நின்றார்கள், இசைக் குழுவினர் "தேவனே உம்மிடம் நெருங்கி வருகிறேன்" என்ற பாடலை வாசிக்கத் தொடங்கினார்கள். அனைவரும் ஜெபிக்கத் தொடங்கினார்கள், கப்பல் முன்னும் பின்னுமாக ஆடியபடியே, அலைகளில் தத்தளித்துக் கொண்டிருந்தது. நீண்ட உடையணிந்து, நீண்ட கைகளுடன், நீண்ட முடியைக் கொண்டிருந்த அந்தச் சிறிய வயதான ஐரிஷ் தாய், அங்குமிங்கும் நடந்தபடியே, "அல்லேலூயா. அல்லேலூயா" என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தார். அவர்கள், "பெண்ணே, நீங்கள் ஏன் ஜெபிக்கக் கூடாது?" என்று கேட்டபோது, அவள் சொன்னாள், "நான் முன்பே ஜெபித்துவிட்டேன். நான் தயாராக இருக்கிறேன்." அது சரிதான். அவரோடு நடங்கள்; தயாராக இருங்கள். 55 எனவே சிறிது நேரம் கழித்து, அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டிருக்க, கேப்டன் திரும்பி வந்து, "அம்மா, உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்றார். அதற்கு அவள், "ஓ, நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்" என்றாள். அவர் சொன்னார், "நான் சொன்னது உங்களுக்குப் புரிந்ததா? இந்தக் கப்பல் தாக்குப் பிடிக்காவிட்டால், அது தாக்குப்பிடித்தால்-முப்பது நிமிடம் தாக்குப்பிடிக்காவிட்டால், நாம் கடலின் அடியில் போகப் போகிறோம்." அவள் சொன்னாள், "எனக்குப் புரிந்தது. அல்லேலூயா." அவர், "பெண்ணே, இதன் அர்த்தம் என்ன?" என்றார். அவள், "நான் தேவனைத் துதித்துக்கொண்டிருக்கிறேன்" என்றாள். அவர் சொன்னார், "மேலும் நீங்கள்... இன்னும் பதினைந்து நிமிடங்களில் கடலின் அடியில் இருக்கப் போகிறீர்களா?" அவள் சொன்னாள், "நிச்சயமாக." மேலும் சொன்னாள், "என் மகளைப் பார்ப்பதற்காக நான் அயர்லாந்திலிருந்து அமெரிக்கா செல்லும் வழியில் இருக்கிறேன். நான் அவளை முப்பது வருடங்களாகப் பார்க்கவில்லை, நான் அமெரிக்காவில் உள்ள என் மகளைப் பார்க்கப் போகும் வழியில் இருக்கிறேன்." மேலும் அவள் சொன்னாள், "படகில் முப்பது நிமிடம் தாக்குப்பிடித்தால், நான் அவளை அமெரிக்காவில் பார்ப்பேன்." மேலும் சொன்னாள், "அது தாக்குப்பிடிக்காவிட்டால், மகிமையில் எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அடுத்த முப்பது நிமிடங்களில் நான் அவர்களில் ஒருவரைப் பார்ப்பேன். அல்லேலூயா." அவ்வளவுதான். முழுமையாக ஜெபித்து, அவரோடு நடந்தால், பிரேக் பிடிக்கும் ஒரு சிறிய சத்தம் எந்த நேரத்தில் வரும், நீங்கள் நித்தியத்திற்குள் செல்வீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. அவருக்கு நெருக்கமாக வாழுங்கள். திரைக்குள்ளே நிலைத்திருங்கள். 56 ஆம், மறுபடியும் பிறப்பது ஒரு அற்புதமான காரியம்தான், ஆனால் அது மட்டுமல்ல, சகோதரரே. நினைவில் கொள்ளுங்கள், இந்தக் குழந்தைக்கு ஒரு சுவிகாரம் இருந்தது. பழைய ஏற்பாடு முழுமையும் புதிய ஏற்பாட்டில் நிறைவேற்றப்பட வேண்டும்; அவை நிழல்களும் சாயல்களுமாக இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இப்படி கையைத் தொங்கவிட்டுக்கொண்டிருக்கும் ஒரு மனிதனை, ஒரு உருவத்தை நீங்கள் பார்த்துவிட்டு, பின்னர் அந்த நெகட்டிவ் பாசிட்டிவாக மாற்றப்படும்போது அது தோன்றாமல் இருக்க முடியாது. அது எல்லாமும் நடந்தாக வேண்டும். கவனியுங்கள், அவர்கள் தொடர்ந்து சென்றபோது, இந்தக் குமாரன்... இந்த மகன் ஒரு ராஜரீகமான சிறுவன் என்ற செய்தியை அந்த உபாத்தியாயர் தொடர்ந்து கொண்டு வந்திருந்தால்... அவன் தன் பிதாவின் காரியங்களில் கருத்தாயிருந்தான். அவன் ஒரு வீரமுள்ள மனிதனாக இருந்தான். தன் பிதாவின் வியாபாரத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. ஓ, அந்தப் பிதா அவனை நேசித்ததால் அவருடைய இதயம் பூரிப்படைந்தது. 57 பின்னர் அவன் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தபோது, அவர் ஒரு பெரிய நாளைக் குறித்தார். அவர் வீதியிலிருந்து சாட்சிகளை அழைத்தார், இந்தச் சிறுவனை அழைத்து அவனுக்கு ஒரு விசேஷித்த அங்கியான, ஒரு அழகான அங்கியை உடுத்தி, அவனை வீதியில் நிறுத்தி, சுவிகார விழாவை நடத்தினார். மேலும் அந்தப் பிதா, இந்தச் சிறுவனின் சொந்தப் பிதா, அவனைத் தம் சொந்த குடும்பத்தில் சுவிகாரம் செய்துகொண்டார் (இப்போது, அது குமாரனை நிலைநிறுத்துதல் என்பதை நீங்கள் வேதத்தின் மூலமாக அறிவீர்கள்.), அவனைத் தம் சொந்த குடும்பத்தில் சுவிகாரம் செய்துகொண்டார். ஆகையால், அந்த நாள் முதல் அந்தச் சிறுவனுக்குத் தன் அப்பாவின் காசோலைகளை எழுதுவதற்கான சட்டபூர்வமான உரிமை இருந்தது, அல்லது அந்தப் பிதாவிடம் இருந்த எல்லாவற்றிற்கும் அவன் சுதந்தரவாளியானான். அவன் சுவிகாரம் செய்யப்பட்டான். அவன் சமமாக இருந்தான், தன் பிதாவின் எல்லாப் பொருட்களின் மீதும் அவனுக்கு-அதிகாரம் இருந்தது. அவன் இனி ஒரு உபாத்தியாயரல்ல, ஆனால் அவன்... அல்லது ஒரு உபாத்தியாயரால் கவனிக்கப்படுபவன் அல்ல, அவன் முழுமையாக அதிகாரத்தைப் பெற்றிருந்தான். சபை இப்போது அங்கேதான் சென்றிருக்கிறது. நீங்கள் அங்கே திரும்பிச் சென்று மறுபடியும் பிறந்தபோது, அத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறீர்கள். நீங்கள் நிம்மதியாகச் சென்றுவிட்டீர்கள். இப்போது, நீங்கள் தசைப்பிடிப்புகளுடனும், போதிய மன்னா இல்லாமலும், ஒரு கூட்டத்திலிருந்து இன்னொரு கூட்டத்திற்குப் பின்மாற்றமடைந்துகொண்டும் இருப்பதைக் காண்கிறீர்கள். அது என்னவென்றால், தேவன் தமது சபையின் நடமாட்டத்தைக் கவனித்திருக்கிறார். 58 பாருங்கள். தேவன் தமது சொந்த குமாரனுக்கும் அதையேதான் செய்தார். அவர் சாட்சிக்காக மூன்று பேரை அழைத்துக் கொண்டார். "மூன்று என்பது ஒரு சாட்சி" என்று பைபிள் சொல்கிறது. அவர் பேதுரு, யாக்கோபு, மற்றும் யோவானை (அன்பு, நம்பிக்கை, மற்றும் சுபாவ அன்பு) அழைத்துக்கொண்டு மிக உயர்ந்த ஒரு மலைக்கு, ஒரு பெரிய உயர்ந்த மலைக்குச் சென்றார். அங்கே இயேசு அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார், அவருடைய வஸ்திரங்கள் சூரியனைப் போலப் பிரகாசித்தன. அப்போது ஒரு சத்தம் உண்டாகி, "இவர் என்னுடைய நேச குமாரன்; இவருக்குச் செவிகொடுங்கள்" என்று உரைத்தது. தேவன் தமது சொந்த குமாரனைச் சுவிகாரம் செய்துகொண்டு, அவரை மகிமைப் படுத்தப்பட்ட, மறுரூபமாக்கப்பட்ட நிலையில் பிரகாசிக்கச் செய்து, "இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்" என்று சாட்சிகளுக்கு முன்பாக நிரூபித்தார். அதனால்தான் இயேசு, "வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது" என்று சொல்ல முடிந்தது ஆச்சரியமல்ல. 59 இப்போது, சபை முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம், சகோதரரே, நீங்கள் இங்கும் அங்குமாக இடத்திற்கு இடம் தாவிக்கொண்டு, உலகத்தில் காலத்தை வீணடித்துக்கொண்டு, இந்த வழியில் சுற்றிக்கொண்டு, நீங்கள் இதுவா, அதுவா அல்லது வேறு ஏதாவதா என்று உங்கள் அமைப்புகளையும் உங்கள் ஸ்தாபனங்களையும் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒன்றானவர்களா, இரண்டான வர்களா, மூன்றானவர்களா, அல்லது ஐந்தானவர்களா; அல்லது நீங்கள் முகம் முன்னோக்கி ஞானஸ்நானம் பெற்றீர்களா, அல்லது பின்னோக்கியா; ஓ, மற்றும் பலவிதமான காரியங்களைச் செய்துகொண்டு, வாதாடிக்கொண்டு, தடைகளை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறீர்கள், அதுவே சபை முன்னேறாமல் இருப்பதற்குக் காரணமாகும். அது உண்மை. நீங்கள் எப்போதாவது உங்கள் சுவர்களை உடைத்தெறிந்தால், இது இப்படியிருக்கட்டும், அது அப்படியிருக்கட்டும். நீங்கள் எதுவாக இருந்தாலும் அது முக்கியமல்ல. ஆனால் உங்கள் கைகளை உங்கள் சகோதரனின் கைகளில் வைத்து, அவனை உங்கள் சகோதரன் என்று உங்களால் அழைக்க முடியுமானால்... மேலும் நாம் ஒரு காரணத்திற்காக, அதாவது தேவனுடைய ராஜ்யத்திற்காக வேலை செய்கிறோம். 60 தேவனுடைய ராஜ்யத்திற்காக வேலை செய்யும் எந்த ஒரு சகோதரனையும் என் கைகளால் அணைத்துக்கொண்டு, அவனை என் சகோதரன் என்று அங்கீகரிக்க முடியாத ஒரு நிலைக்கு நான் எப்போதாவது சென்றால், நான் பின்மாற்றமடைந்துவிட்டேன் என்று உணர்கிறேன். ஆமென். நிச்சயமாக. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவோ அல்லது கிறிஸ்தவ வாழ்க்கை வாழவோ முயற்சி செய்யும் எந்த ஒரு சகோதரனுக்கும் விரோதமாக என் இருதயத்தில் பொறாமை இருப்பதை அறிந்துகொண்டு, அவன் யாராக இருந்தாலும் சரி, மேடையில் நின்று பொல்லாத ஆவிகளை எதிர்கொள்ள நான் பயப்படுவேன். அவர்-வேத இறையியலில் நாம் ஒரு மில்லியன் மைல்கள் முரண்பட்டாலும், அவர் கர்த்தராகிய இயேசுவை நேசித்தால், அவர் என் சகோதரன், மற்றும் அது என் சகோதரி. நாம் அந்தக் கோடுகளை வரைந்துவிட்டோம். "நீங்கள் கண்ட உங்கள் சகோதரனிடத்தில் அன்புகூராமலிருந்தால், நீங்கள் காணாத-ஒருபோதும் கண்டிராத தேவனிடத்தில் எப்படி அன்புகூர முடியும்?" மேலும் சகோதரரே, அன்பு வெளியேறும்போது, தேவனும் அதனுடனேயே வெளியேறுகிறார், ஏனென்றால் தேவன் அன்பாகவே இருக்கிறார். தெய்வீக அன்பு இல்லாமல் உங்களால் எங்கும் செல்ல முடியாது. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புகூரும்போது, நீங்கள் தேவனிடத்தில் அன்புகூருகிறீர்கள். 61 கவனியுங்கள். இன்றிரவு என் வீட்டில் ஐந்து மாத வயதான ஒரு சின்ன குண்டான பையன் இருக்கிறான். அவனைப் பற்றிய தீர்க்கதரிசனம் உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும். உலகம் முழுவதும் என்னைப் பார்த்து சிரித்து, "ஓஹோ. உனக்கு ஒரு ஜோசப் பிறப்பான் என்று நான் நினைத்தேன்," என்று சொன்னார்கள். அவன் வந்தான். தேவன் அவன் வருவான் என்று சொன்னார்; அவன் இங்கே வந்துவிட்டான். எனக்கு பத்தொன்பது வயதில் ஒரு பையன் இருக்கிறான், இங்கே நான்கு வயதில் ஒரு சிறுமியும், எட்டு வயதில் ஒருத்தியும் இருக்கிறார்கள். நீங்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், அது பரவாயில்லை. நீங்கள் என்னை என்னவென்று அழைத்தாலும் நான் கவலைப்பட மாட்டேன், ஆனால் என் குழந்தைகளைப் பற்றி பேசாதீர்கள். என்னிடம் நல்லவராக இருக்க வேண்டாம், அவர்களிடம் நல்லவராக இருங்கள். மேலும் தேவனும் அப்படியே உணருகிறார். இவர்கள் அவருடைய பிள்ளைகள். நாம் ஒருவருக்கொருவர் நல்லவர்களாக இருக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டும். மக்கள் எப்படி ஒருவருக்கொருவர் நேர்மையற்றவர்களாக இருந்துவிட்டு, பின்னர் தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும்? உங்கள் சகோதரனிடம் நீங்கள் எப்படி நேர்மையற்றவராக இருக்க முடியும் என்பது என் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. ஏதோ ஒன்றில் உங்களுடன் ஒத்துப்போகவில்லை என்பதற்காக, நீங்கள் எப்படி எதையாவது பொய்த்துப்போகச் செய்து, ஒரு சகோதரனை விலக்கி வைக்க முடியும்? ஓ, சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்கிறேன்... அன்பான மரிக்கும் ஆட்டுக்குட்டியானவரே, உமது விலையேறப்பெற்ற இரத்தம் ஒருபோதும் அதன் வல்லமையை இழக்காது, மீட்கப்பட்ட தேவனுடைய சபை இனிப் பாவம் செய்யாதபடி இரட்சிக்கப்பட்டாலும். விசுவாசத்தினாலே, உமது வழியும் காயங்கள் அளித்த ஊற்றை நான் கண்ட நாள் முதலாக, மீட்கும் அன்பே என் கருப்பொருளாக இருக்கிறது, நான் மரிக்கும் வரை அதுவே இருக்கும். 62 அன்பு, தேவன் அன்பாகவே இருக்கிறார். "அன்புகூருகிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்." தெய்வீக அன்பு, பாசமான அன்பு அல்ல... இரண்டு வெவ்வேறு வகையான அன்புகள் உள்ளன. இப்போது, நாம் இங்கே "சுதந்திரமான அன்பு" (free love), மற்றும் அன்பு என்று அழைக்கப்படும் எல்லா வகையான காரியங்களுக்குள்ளும் நுழைகிறோம் என்பதை அறிவோம். ஆனால் அது தெய்வீக அன்பு அல்ல. அது பிசாசின் கேலிக்கூத்து. அது உங்களுக்குத் தெரியும். இரண்டு வெவ்வேறு அன்புகள் உள்ளன: "பிலேயோ (phileo) அன்பு" என்று அழைக்கப்படும் ஒரு அன்பு இருக்கிறது, மற்றும் "அகபே (Agapao) அன்பு" என்று அழைக்கப்படும் ஒரு அன்பு இருக்கிறது. "பிலேயோ அன்பு" என்ற கிரேக்க வார்த்தையின் அர்த்தம், "ஒரு சக மனிதனாக உங்கள் மீதோ அல்லது என் மனைவியின் மீதோ நான் கொண்டிருக்கும் அன்பைப் போன்றது." உங்கள் மனைவி மீது உங்களுக்கு பிலேயோ அன்பு இருக்கிறது. இப்போது, அந்த அன்பு, நீங்கள் ஒருவேளை... நீங்கள் அவள் மீது பொறாமை கொள்வீர்கள். ஒருவன் அவளை அவமதிப்பதை நீங்கள் கண்டால், அதற்காக அந்த மனிதனை நீங்கள் கொன்றுவிடுவீர்கள். அதுதான் பிலேயோ அன்பு. ஆனால் அகபே அன்பு, தொலைந்துபோன அவனுடைய ஆத்துமாவுக்காக உங்களை ஜெபிக்கச் செய்யும். அதுதான் வித்தியாசம். இங்குதான் மக்களுக்குப் புரிவதில்லை. பாருங்கள், இது ஏதோ ஒருவிதமான செயற்கையான, தூண்டப்பட்ட மன நிலை அல்ல. கிறிஸ்தவ ஐக்கியத்திலும் அன்பிலும் நம் இதயங்களை ஒன்றாக இணைப்பது, முற்றிலும் உண்மையான தேவனுடைய பரிசுத்த ஆவியானவரே. 63 மேலும் எப்போது... நான் இதை ஒரு சவாலாகக் கொடுக்க முடியும். இங்கிருக்கும் ஒவ்வொரு மெத்தடிஸ்டும், பாப்டிஸ்டும், பிரெஸ்பிடீரியனும், பெந்தெகொஸ்தே காரர்களும், மற்றும் அனைவரும், ஒருவரை யொருவர் குறித்த உங்கள் எண்ணங்களை உடைத்தெறிந்துவிட்டு, ஒருவருக்கொருவர் உண்மையிலேயே அன்பாகவும் கனிவாகவும் இருந்து, ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளாக நடத்தினால், இங்கே இதுவரை அறியப்பட்டிராத மிகப் பெரிய எழுப்புதல்களில் ஒன்று இந்தப் பள்ளத்தாக்கை நிரப்புவதை நீங்கள் காண்பீர்கள். அது வேறு எந்த வழியிலும் வர முடியாது. பிறகு நீங்கள் முன்னேறிச் செல்வதை தேவன் காணும்போது... தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு குமாரனும், என்ன செய்யப்பட வேண்டும்? முதலில் தேவனால் சிட்சிக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட வேண்டும். அது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எடுக்கும் எந்தவொரு முடிவிலும் நீங்கள் அதைச் செய்கிறீர்கள். உங்களை உருவாக்குவதில் தேவன் அதைச் செய்கிறார். வருகிற ஒவ்வொரு குமாரனும் தேவனால் சிட்சிக்கப்பட வேண்டும். 64 நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றவுடனே, எல்லோரும் உங்களைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள், உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது, புத்தி பேதலித்துவிட்டது, நீங்கள் ஒரு 'ஹோலி ரோலர்' (holy roller) ஆகப் போகிறீர்கள், அல்லது அதுபோல ஏதோ ஒன்று என்று சொல்கிறார்கள். மேலும், உங்களால் சிட்சையைத் தாங்கிக்கொள்ள முடியாவிட்டால், நீங்கள் வேசிப்பிள்ளையாகிறீர்கள் என்று வேதாகமம் சொல்லுகிறது. ஆனால் நீங்கள் உண்மையிலேயே தேவனால் பிறந்திருந்தால், உலகம் என்ன சொன்னாலும், அல்லது வேறு யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி எந்த வித்தியாசமும் இல்லை, நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், நரகத்திலுள்ள அனைத்து பிசாசுகளாலும் உங்களை அசைக்க முடியாது. அப்பொழுது நீங்கள் அதை உங்கள் கனிகளினால் நிரூபிக்கிறீர்கள், உங்கள் சத்தத்தினால் அல்ல, ஆனால் உங்கள் வாழ்க்கையினால். நீங்கள் சரியான வகையான வாழ்க்கையை வாழ்கிறீர்கள். நீங்கள் வாழ்வீர்கள்... நீங்கள் எப்போதாவது ஒரு முத்திரையைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு காகிதத்தில் போடப்படும் முத்திரை, அது முன்புறமும் பின்புறமும் முத்திரையிடப் பட்டிருக்கும். மேலும் நீங்கள் முன்னோக்கி நடக்கும்போது, உங்கள் வாழ்க்கையும், நீங்கள் உங்களுக்குப் பின்னால் விட்டுச்செல்லும் காரியமும், நீங்கள் தேவனுடைய குமாரர்கள் மற்றும் குமாரத்திகள் என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள். நீங்கள் உண்மையிலேயே பரிசுத்த ஆவியானவரால் முத்திரையிடப் பட்டிருக்கும்போது, தெய்வீக அன்பு உங்களைப் பின்தொடரும். 65 நான் அடிக்கடி இதைச் சொல்லியிருக்கிறேன்: "நீங்கள் உப்பாயிருங்கள்; பூமி தாகமாயிருக்கும்." அவர் சொன்னார், "நீங்கள் பூமியிலுள்ள உப்பாயிருக்கிறீர்கள்." நீங்கள் உப்பாயிருங்கள், பூமி தாகம் கொள்ளும். உங்கள் அக்கம்பக்கத்திலும், உங்கள் மக்களைச் சுற்றியும் நீங்கள் அப்படி வாழுங்கள், மக்கள் அறிந்து, "அங்கே ஒரு உண்மையான கிறிஸ்தவர் இருக்கிறார்; நான் உங்களுக்குச் சொல்கிறேன். எப்போதாவது ஒரு கிறிஸ்தவர் இருந்தால் அது அவள்தான், அல்லது அவன்தான்" என்று சொல்வார்கள். அப்படித்தான் இருக்க வேண்டும். தேவன் தமது வேதாகமத்தில் வைத்திருக்கும் எல்லா வரங்களையும் விட, அது என் இருதயத்தில் இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். அது சரிதான். ஏனெனில் வேதாகமம் கூறுகிறது, "நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்கள் பாஷைகளையும் பேசினாலும் (அவரால் அதைச் செய்ய முடியும்), அன்பு எனக்கிராவிட்டால், நான் ஒன்றுமில்லை. எனக்கு ஞானம் இருந்து, தேவனுடைய எல்லா வார்த்தைகளையும் நான் புரிந்துகொண்டாலும், அன்பு இல்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை. மலைகளைப் பேர்க்கத்தக்க விசுவாசம் எனக்கிருந்தாலும்..." இங்கே வந்து, வியாதியஸ்தர்களைக் குணமாக்குவதற்கு மட்டுமல்ல, மலைகளைப் பேர்க்கத்தக்க விசுவாசத்தைக் கொண்டிருந்தாலும், அன்பு இல்லாவிட்டால், என்னால் முடிந்தாலும் - என்னால் முடிந்தாலும், உங்களாலும் அது முடியும். 66 ஆனால் பெந்தெகொஸ்தே மக்களே பாருங்கள், நீங்கள் கொடுப்பவரைத் தேடுவதற்குப் பதிலாக வரங்களுக்குப் பின்னால் செல்கிறீர்கள். காண்கிறீர்களா? தேவனிடத்திற்குத் திரும்பி வாருங்கள். இந்த உண்மையான தெய்வீக அன்பை உங்கள் இருதயத்திலும், உங்கள் ஐக்கியத்திலும் பெற்றுக்கொள்ளுங்கள். அதாவது, ஓ, நீங்கள் முழு இருதயத்தோடு அவரை நேசியுங்கள். சகோதரனே, வரங்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும். நீங்கள் அதை அப்படியே விட்டுவிடுங்கள். காண்கிறீர்களா? அது வரும். தேவன் உங்களை தமது குடும்பத்தில் தத்தெடுத்த பிறகு, அவர் உங்களைக் காணும் இடத்தில் உங்களை சபையில் வைப்பார். ஒரு நாள் ஒரு சிறிய ஜெபக் கூட்டத்தில் அவர் உங்களை வெளியே அழைப்பார், உங்களுக்குத் தெரிந்த முதல் காரியம், உங்கள் மீது அங்கியைப் போர்த்தி, "இப்போது, மகனே, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க உன்னை அனுப்பியிருக்கிறேன்" என்று சொல்வார். உலகம் முழுவதற்கும் அது தெரியும். அது சரிதான். அவர் உங்களை வெளியே அழைத்து, "மகனே, வியாதிப்பட்ட மக்களுக்காக ஜெபிக்க உன்னை அனுப்பியிருக்கிறேன்" என்று சொல்வார். அவர் உங்களை தமது குடும்பத்தில் தத்தெடுக்கும்போது, காரியங்கள் எப்படிப் பறக்கின்றன என்று கவனியுங்கள், ஆனால் நீங்கள் அதை வற்புறுத்த முடியாது. நீங்கள் அதை மனதளவில் தூண்டிவிட முடியாது. தேவன் தமது வரங்களை உறுதிப்படுத்துகிறார். தேவன் தமது வரங்களை நிரூபிக்கிறார். ஆனால் கொடுப்பவர் இல்லாமல் வரம் என்றால் என்ன? நீங்கள் வேதாகமத்தை ஒரு சம்பிரதாயமாக மட்டும் புரிந்துகொண்டிருந்தால்... அதுதான் இன்றுள்ள பிரச்சனை. 67 சில பிரசங்கிகள், உங்கள் போதகருக்காக வாக்களிக்கும் உங்களில் சிலர், அப்படிச் செய்கிற நீங்கள், சில சமயங்களில் மிகவும் பெரிய, சிறப்பான, அழகான, சுருள் முடி கொண்ட, நன்றாக ஆடை அணிந்த, ஹாலிவுட் தோற்றமளிக்கும் ஒரு பிரசங்கிக்கு வாக்களிப்பீர்கள், ஏனென்றால் அவர் பிரசங்க பீடத்தில் மிகவும் வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். தேவன் அவரை அழைத்தார் என்பதற்கு அது எந்த அடையாளமும் இல்லை. அது அடையாளமே அல்ல. தேவன் அதுபோல அழைக்காத பலரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைய உலகம், அவர்கள் கவர்ச்சிக்காக இருக்கிறார்கள். இன்றைய விஷயம் என்னவென்றால், நம்மிடம் ஏராளமான ஹாலிவுட் மதம், ஹாலிவுட் எழுப்புதல்கள் மேடையின் மீது குவிக்கப்பட்டுள்ளன, நகைகள் எல்லா திசைகளிலும் பறக்கின்றன, மற்றும் என்னவெல்லாமோ... ஓ, என் தேவனே. இது-இது அருவருப்பாக இருக்கிறது. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு பழைய காலத்து மதத்தை நான் விசுவாசிக்கிறேன். உங்களைச் சுத்திகரித்து உங்களை ஒரு வித்தியாசமான நபராக மாற்றும், நீங்கள் எப்படி வாழ வேண்டுமோ அப்படி உங்களை வாழச் செய்யும் ஒரு மதத்தை நான் விசுவாசிக்கிறேன். ஆமென். அதிகமான கவர்ச்சி... 68 உங்களிடம் ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், ஏராளமான... குழந்தைகளும்... வெகு காலத்திற்கு முன்பல்ல, இங்கே அவர்கள் ஒரு சிறிய பழைய காரியத்தைக் கொண்டிருந்தார்கள்... பிசாசினால் அதை எப்படிச் செய்ய முடியும் என்பதை உங்களுக்குக் காட்டுகிறது. டேவிட் க்ராக்கெட் (David Crockett) யார் என்று உங்களுக்குச் சொல்லக்கூடிய, அவர் டென்னசியில் பிறந்தார் என்பதைச் சொல்லக்கூடிய, மற்றும் அவருக்கு மூன்று வயதாக இருக்கும்போது அவர் ஒரு கரடியைக் கொன்றதைப் பற்றிய அனைத்தையும் சொல்லக்கூடிய ஒரு குழந்தை கூட இந்த நாட்டில் இல்லாமல் இல்லை. அது ஒரு பொய் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அது... ஆனால் அதையெல்லாம், அவர்கள் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்ல முடியும். ஆனால் பிசாசானவன், தொலைக்காட்சி மற்றும் எல்லாவற்றின் மூலமாகவும், அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் அதைத் திணிக்க முடியுமானால், இயேசு கிறிஸ்துவின் மூலமாக சபை என்ன செய்ய வேண்டும், மேலும் நீங்கள் சிறார் குற்றங்களைத் தடுத்து நிறுத்துவீர்கள். அல்லேலூயா. பயப்பட வேண்டாம். "அல்லேலூயா" என்றால், "நமது தேவனைத் துதியுங்கள்" என்று அர்த்தம். "ஆமென்," என்றால் "அப்படியே ஆகக்கடவது" என்று அர்த்தம். எனவே எப்போதாவது ஒருமுறை அதைச் சொல்வது உங்களை காயப்படுத்தாது. 69 என்னிடம் ஒரு வயதான நாய் இருந்தது. மேலும் எனக்கு இரவு வேட்டையாடுவது பிடிக்கும். அது வயலில் இருக்கும் எதையும் மரத்தின் மீது ஏற்றிவிடும், ஆனால் அது ஒரு புதர் குவியலின் அடியில் இருக்கும் ஒரு ஸ்கங்க் (skunk) அருகே போகாது. அது அங்கே குறைத்துக்கொண்டும், சுற்றி நடந்துகொண்டும் இருக்கும். இப்போது, நான் செய்ய வேண்டிய ஒரே காரியம் அந்தப் புதர் குவியலைத் தூக்கி, அதன் முதுகில் தட்டிக்கொடுத்து, "அவனைப் பிடி, பையா (Sic him, boy)" என்று சொல்வதுதான். அது உள்ளே போய் அந்த ஸ்கங்கைப் பிடிக்கும். இப்போது, "அவனைப் பிடி, பையா..." மேலும் எனக்குத் தெரிந்த மிக மோசமான ஸ்கங்க் பிசாசுதான். மேலும் நீங்கள் சொல்ல வேண்டிய ஒரே காரியம், "அவனைப் பிடி, பையா" என்பது எப்போதாவது ஒருமுறை "ஆமென்" என்று சொல்வதுதான். அப்போது நான் எங்கே நிற்கிறேன் என்பது எனக்குத் தெரியும், அவனை நாம் மரத்தின் மீது ஏற்றிவிடுவோம். ஆமென். 70 ஓ, அவர் மெய்யானவர். பிதாவினால் ஐக்கியத்திற்குள்ளும், பரிசுத்த ஆவியானவரால் விசுவாசிகளின் சரீரத்திற்குள்ளும் தத்தெடுக்கப் பட்டு, மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு ஊழியம், நிரூபிப்பது என்னவென்றால்... நீங்கள் அதைப் பற்றி அவ்வளவாகப் பேச வேண்டியதில்லை, தேவனே தமக்காகப் பேசுகிறார். தேவன் தமது வரங்களைக் குறித்து சாட்சி பகருகிறார். ஆனால் அந்த வரங்கள் அனைத்தும் அற்புதமானவை; அவை சிறந்தவை; மேலும் நாம் அவை அனைத்தையும் நேசிக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரமும் இருக்கும்படி தேவன் கிருபை செய்வாராக, ஆனால் எல்லா வரங்களையும் விட கொடுப்பவரையே நான் கொண்டிருக்க விரும்புகிறேன். பவுல் சொன்னார், "நீங்கள்... எனக்கு வரங்கள் இருந்தாலும், கொடுப்பவர் இல்லாமல்..." இப்போது, நாம் வரங்களுக்குப் பதிலாக கொடுப்பவரைத் தேடிச் சென்றிருந்தால், சபை இன்னும் வெகுதூரம் முன்னேறியிருக்கும் என்று நான் நம்புகிறேன், நீங்கள் அப்படி நினைக்கவில்லையா? நாம் தேவனிடம் நெருக்கமாகத் தங்கி, அவரை நேசித்து, அவருக்காக தொடர்ந்து வாழ்ந்துகொண்டு, காரியங்களைத் தள்ளிவிட முயற்சிக்காமல்; தேவனுக்காக மட்டுமே வாழ்ந்து, தூய்மையான, பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்து, மேலும் வாழ்ந்து, ஒவ்வொரு நாளும் ஜெபித்து, அவருடைய சமூகத்தில் உங்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொண்டிருந்தால். மீதமுள்ளவற்றை தேவன் பார்த்துக்கொள்வார். 71 அவர் மக்களை சபை என்னும் தமது சொந்த அன்பான சரீரத்திற்குள் தத்தெடுப்பார். மேலும் இரகசிய வருகை (rapture) வரும்போது, நீங்கள் ராஜாவின் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதால், நீங்கள் குற்றமற்றவர்களாகக் காணப்படுவீர்கள். அதுதான் இரகசியம், நண்பனே. நீங்கள் உண்மையில் பிசாசின் வல்லமைகளை முகமுகமாகச் சந்திக்கும்போது, அது அங்கேதான் இருக்கிறது. எதிர்ப்பை நீங்கள் முகமுகமாகச் சந்திக்கும்போது, அங்கேதான் சோதனைக் காலம் வருகிறது. மேலும் ஒரு சங்கிலியானது அதன் பலவீனமான இணைப்பில்தான் அதன் அதிக பலம் கொண்டதாக இருக்கிறது. அது சரிதான். மேலும் நீங்கள் எதிர்ப்பை முகமுகமாகச் சந்திக்கும்போது, நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள். 72 இப்போது, நீங்கள் அமெரிக்காவில் எதைக் கொண்டும் தப்பித்துக்கொள்ளலாம். வெகு காலத்திற்கு முன்பு அல்ல, இங்கே ஒரு ஆராதனைக்கு நான் சென்றிருந்தேன், அங்கே அவர்கள் தெய்வீக சுகமளித்தலைப் பயிற்சி செய்வதாகக் கருதப்பட்டது. அந்த நபர் மேலும் கீழுமாக குதித்துக்கொண்டும், தன்னால் முடிந்தவரை உரத்த குரலில் கத்திக்கொண்டும், பிரசங்க பீடத்தை தன்னால் முடிந்தவரை பலமாக உதைத்துக்கொண்டும், "தேவனே, நான் உம்மை கோருகிறேன் (demand)" என்று சொன்னார். ஓ, இரக்கமே. "தேவனே, என் சகோதரன் மீது இரக்கமாயிரும். அவனுக்குப் புரியவில்லை," என்று நான் நினைத்தேன். எதையாவது செய்யும்படி தேவனிடம் கோருவதற்கு நாம் யார். அவர் ஏற்கனவே அதைச் செய்துவிட்டார்; அவரை விசுவாசியுங்கள். அவ்வளவுதான். போர்வையில் இருந்த ஒரு வயதானவரை, இருதயக் கோளாறுள்ள ஒரு மனிதனை, இப்படி முன்னும் பின்னுமாக உலுக்கிக்கொண்டிருந்தார். நான் அவனுக்காக பரிதாபப்பட்டேன். இன்னொரு மனிதன் வாத நோயுடன் வந்தான்; அவன் அந்த வழியில் குலுக்கினான் மற்றும் அவன் அவனது கையால் முடிந்தவரை பலமாக அவனை அடித்து, "நான் வாத நோயை வெறுக்கிறேன்" என்று சொன்னான். அது பிசாசுகளை வெளியே துரத்தாது. நீங்கள் எவ்வளவு கத்தினாலும் பிசாசு கவலைப்படுவதில்லை. அவனுக்குக் காது கேளாமலில்லை, ஆனால் விசுவாசம் எங்கே இருக்கிறது என்பதை அவன் நிச்சயமாக அறிவான். அவனை நகரச் செய்யும் ஒரே காரியம் அதுதான். 73 பூமியில் இதுவரை வாழ்ந்த எந்தவொரு மனிதனையும் விட இயேசுவே மிகப் பெரிய அபிஷேகத்தைக் கொண்டிருந்தார். அது சரியா? ஒரு நாள் அவர் தேவாலயத்திற்குள் சென்றார்; அவர்கள் அவருக்கு சுருளைக் கொடுத்தார்கள். அவர் அதைத் தம் கையில் எடுத்தார். அவர் அமர்ந்து, ஏசாயாவில் வாசித்தார், அது எங்கே சொன்னதென்றால், "கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்த கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்," மற்றும் பல... யூபிலி வருஷம். மேலும் அவர் சுருளை எடுத்து திரும்பக் கொடுத்துவிட்டு அமர்ந்தார், அவருடைய வாயிலிருந்து விலையேறப்பெற்ற வார்த்தைகள் புறப்பட்டன, உலகில் இதுவரை இருந்ததிலேயே மிகப் பெரிய அபிஷேகம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் இருந்தது. ஓ, சில சமயங்களில் நாம்... நாம் மெத்தடிஸ்டுகள் சத்தத்தை அபிஷேகம் என்று குழப்பிக்கொள்கிறோம். சத்தம் அபிஷேகம் அல்ல. இல்லை, இல்லை. நிறைய சத்தம் இருக்கும் இடத்தை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் ஒரு பல்வலியைக் குணமாக்கப் போதுமான விசுவாசம் இல்லை. காண்கிறீர்களா? நீங்கள் பயபக்தியோடு பிதாவிடம் வர வேண்டும். நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதை நீங்கள் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அது சரிதான். 74 வெகு காலத்திற்கு முன்பு அல்ல, இங்கே தென்னாப்பிரிக்காவில், நான் சவாலுக்கு உட்பட்டு நின்றபோது... அப்படிப்பட்ட நாடுகளுக்குள் நீங்கள் செல்லும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருப்பது நல்லது. சூனியக்கார மருத்துவர்களும் மற்றும் சில காரியங்களும் அங்கே நின்று சவால் விட்டு கர்த்தராகிய இயேசுவை எதிர்க்கிறார்கள். அவர்களின் முன்னிலையில் நீங்கள் செல்லும்போது நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. அது சரிதான். ஏனென்றால், சகோதரனே, செய்ய வேண்டிய எல்லாவற் றையும் அவர்கள் செய்கிறார்கள். அது சரிதான். நெருப்பின் வழியே நடப்பது, எலும்புகளைச் சத்தமிடச் செய்வது, மற்றும் மற்ற எல்லாவற்றையும் செய்வது, தங்களைத்தாங்களே வெட்டிக்கொள்வது, மற்றும் ஒரு பட்டயத்தை எடுத்து அதுபோல நேராகத் தங்களுக்குள்ளாகச் சொருகிக்கொள்வது, மற்றும் பட்டயங்களுக்கிடையில் தண்ணீரை ஊதி அதை வெளியே எடுப்பது, ஒரு சொட்டு இரத்தம் கூட வராது, தங்களைத் தாங்களே வெறித்தனமாகச் செயல்பட வைத்துக்கொண்டு, தங்களால் முடிந்தவரை உரத்த குரலில் கத்திக்கொண்டு, அவர்கள் ஒரு பட்டயத்தை எடுத்து இதுபோல நேராக ஓடிவந்து, மூக்கின் வழியாக நேராகத் தங்களை குத்திக்கொண்டு, அதை மீண்டும் கீழே இழுப்பார்கள், அதிலிருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வெளியே வராது. அதுபோலவே சுற்றி நடப்பது, நெருப்பின் வழியே நடப்பது, கண்ணாடியை உடைத்து அடித்துக்கொள்வது, முட்கள் மற்றும் மற்ற எல்லாவற்றின் மீதும் படுத்துக்கொள்வது. வெளிவேஷமா? ஆம், பிசாசின் வல்லமை. அது சரிதான். ஆனால், சகோதரனே, அதற்கும் கர்த்தராகிய இயேசுவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் பலப்பரீட்சைக்கான (showdown) நேரம் வரும்போது, அதற்கு முன்பாக இயேசு கிறிஸ்து முன்னிறுத்தப்படும்போது அவர்களைப் பாருங்கள். ஒவ்வொரு பிசாசும் பின்வாங்கி மறைகிறது. அது தோற்றுப்போவதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை, நீங்களும் ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள். அது சரிதான். 75 தேவனிடம் நெருக்கமாக நடங்கள், என் சகோதரர்களே, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வாருங்கள். உள்ளே வந்து, தேவன் முன்பாக வாழுங்கள், எதற்கென்றால் நாளுக்கு நாள் செய்தியைக் கொண்டு செல்லும் பரிசுத்த ஆவியானவர், அவருடைய ராஜ்யத்தில் நீங்கள் எப்படி முன்னேறுகிறீர்கள், அவருடைய பிள்ளைகளை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள், நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதை பிதாவிடம் எடுத்துச் சென்று, பிதாவானவர், "இப்போது நான் இவனிடத்தில் கிருபையைக் கண்டேன். நான் இவனை இங்கே மக்களுக்கு முன்பாகக் கொண்டுவருவேன்," என்று சொல்லும் வரை. அவர் மக்களிடம் சொல்ல வேண்டியதில்லை, தேவன் அதைச் செய்திருக்கிறார் என்பதை அவர் செய்வதையும், அவர் வாழும் வாழ்க்கையையும் வைத்து மக்கள் அறிந்துகொள்வார்கள். சில சமயங்களில் உங்கள் சாட்சி சரியாக இருக்கலாம், ஆனால் உங்கள் வாழ்க்கை சத்தமாகப் பேசுகிறது, உங்களுக்குத் தெரியும், உங்கள் சாட்சி அதிக நன்மையைச் செய்யாது. அது சரிதான். உங்கள் வாழ்க்கைதான் கணக்கில் கொள்ளப்படுகிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 76 இன்றைக்கு நாம் நம்மையே பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டோம் என்று நான் நம்புகிறேன்; நாம் அலட்சியமாக இருந்து விட்டோம்; நம்முடைய அயலார்களையும் நாம் அலட்சியமாகவே நடத்தியிருக்கிறோம். சில நேரங்களில் நாம் சத்தமிட்டு, "சரி, இந்த பழைய, வைராக்கியமில்லாத, சம்பிரதாயமான பாப்டிஸ்ட் மற்றும் இந்தப் பெந்தெகோஸ்தே குழுவினர், அவர்கள் இங்கே கீழே உள்ள ஆலயத்தைச் சேர்ந்தவர்கள்; ஃபோர்ஸ்கொயர் (Foursquare) சபையாரிடம் ஒன்றுமில்லை. மேலும் இங்கே இருக்கிற இவர், ஏன், இவர் அசெம்ப்ளி ஆஃப் காட் (Assembly of God) சபையைச் சேர்ந்தவர்; இவரிடம் ஒன்றுமில்லை. இது இயேசுவின் நாமம் மட்டுமே (Jesus Name Only) என்று சொல்பவர்கள், இவரிடமும் ஒன்றுமில்லை" என்று கூறியிருக்கிறோம். ஒருவர் இதைச் செய்ய விரும்புகிறார், இன்னொருவர் அதைச் செய்ய விரும்புகிறார், இப்படியே வீண் சண்டை போட்டுக்கொண்டு... ஆனால் சகோதரரே, அவர்கள் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருக்கிறார்கள், அல்லது குறைந்தபட்சம் அப்படி உரிமை கொண்டாடுகிறார்கள், அதை நிரூபிக்க அதே ஆதாரமும் அவர்களிடம் உள்ளது. அதுதான் உண்மை. சரி, இன்றைக்கு நமக்குத் தேவையானது அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, அங்கே நீங்கள் எதுவும் பேசத் தேவையில்லை, உங்கள் இடத்தில் தேவன் பேசுகிறார், மேலும் நீங்கள் யார் என்பதை அவரே நிரூபிக்கிறார். அதுதான் உண்மை. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல அநீதிகளையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கிறது, அப்போது நாம் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருக்கிறோம், அந்த இரத்தம் நம்மைச் சுத்தமாகவும் பரிசுத்தமாகவும் மாற்றுகிறது. நாம் எப்படி வாழ வேண்டும் என்றால், எந்தவொரு பிரிவினரிடமோ, சபையிடமோ அல்லது எவரிடமோ சென்று, "காலை வணக்கம், என் சகோதரரே" என்று சொல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும். ஒரு மாயாவி போல அல்ல, அப்படிச் செய்தால் அவருக்கு அது தெரிந்துவிடும், ஆனால் உண்மையான இருதயத்தோடு, "என் அன்பான சகோதரரே, இன்றைக்கு உங்களுக்கும் தேவனுக்கும் இடையிலான உறவு எப்படிச் செல்கிறது?" என்று கேட்க வேண்டும். அதுபோல, அவரோடு சேர்ந்து நடந்து, அவரோடு பேசி, அவரோடு ஐக்கியம் வைத்துக்கொள்ள வேண்டும், அதுதான் சரியான வழி. அப்போதுதான் நீங்கள் உப்பாக மாறுகிறீர்கள். இப்போது, வெறுமனே ஆள்மாறாட்டம் செய்து உங்களால் அதைச் செய்ய முடியாது. நீங்கள் அப்படிச் செய்தால், நீங்கள் ஒரு மாயாவி. அவ்வளவுதான். இது ஒரு கடமை என்று தெரிந்து மட்டும் நீங்கள் அதைச் செய்தால், நீங்கள் அதைச் செய்யவே வேண்டாம். அதைச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் உங்கள் இருதயத்தில் உருவாகும் வரை தேவனுக்கு முன்பாகக் காத்திருங்கள், அப்போதுதான் நீங்கள் தேவனோடு சரியான நிலைக்கு வருகிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 77 நான் அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறன், மேலும் சபை எங்கே தவறிவிட்டது என்றால் இங்கேதான் என்று நான் நினைக்கிறேன். நமக்குள் அன்பைக் கொண்டுவரவும், குழுக்களுக்கிடையே ஐக்கியத்தைக் கொண்டுவரவும், அதுபோன்ற காரியங்களைச் செய்யவும் நாம் தவறிவிட்டோம் என்று நினைக்கிறேன். தேவன் நியமிக்காத ஒன்றிற்குள் நம்மை நாமே திணிக்க முயற்சி செய்திருக்கிறோம். நாம் மீண்டும் தேவனிடம் திரும்பிச் சென்று, "தேவனே, இதோ நான் நிற்கிறேன். என் வாழ்க்கையைத் தவிர உமக்கு அர்ப்பணிக்க என்னிடம் வேறொன்றும் இல்லை. ஆனால், தேவனே, உமது கண்களில் நான் கிருபை பெறும்படியாக-நான் வாழ என்னை அனுமதிக்கும்படி நான் ஜெபிக்கிறேன்" என்று நாம் சொன்னால் போதும் என நான் நம்புகிறேன். அது... இப்போது நீங்கள் சரியான வழியில் வருகிறீர்கள், ராஜ்யத்திற்கு மிகவும் நெருக்கமாக வருகிறீர்கள். அதுதான் சரி. அப்போது நீங்கள் ஒரு உண்மையான சுகமளிக்கும் கூட்டத்தைக் காண்பீர்கள். நீங்கள் பலிபீடத்தண்டைக்கு வரும்போது, "தேவனுக்கு மகிமை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் பரிசுத்த ஆவியைப் பெற்றேன். தேவனுக்கு ஸ்தோத்திரம். அல்லேலூயா" என்று சொல்லிக்கொண்டு வராதீர்கள். அது எந்த நன்மையையும் தராது. ஊஹூம். நீங்கள் அதை எவ்வளவு முறை சொன்னாலும் சாத்தான் அதைப் பொருட்படுத்த மாட்டான். காரியம் என்னவென்றால், நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதை அறிந்து, உங்கள் இருதயத்தில் உண்மையான நிச்சயத்தோடு நடந்து வர வேண்டும். 78 கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒரு சிறிய பெண் மேடைக்கு வந்ததைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். அவர்கள் இருவராகச் சேர்ந்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் வந்தபோது, நான், "எப்படி இருக்கிறீர்கள், சகோதரி?" என்றேன். மேலும்... இப்போது, நினைவில் கொள்ளுங்கள், நான் எல்லா ஆவிக்குரிய வெளிப்பாடுகளையும் விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா. நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருக்கிறேன், நான் எதைப் பற்றிப் பேசுகிறேன் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் வரிசையாக வந்தார்கள். அந்தச் சிறிய பெண் ஜெப வரிசைக்கு வந்து, மிக வேகமாகச் சுற்றிச் சுற்றி நடனமாடத் தொடங்கினார். அப்போது நான், "உங்களிடம் நான் கொஞ்சம் பேசும்படி ஒரு நிமிடம் அமைதியாக நிற்பீர்களா" என்று கேட்டேன். மேலும் நான்... அவளால் அதைச் செய்ய முடியவில்லை, அவள் தொடர்ந்து சுற்றிச் சுற்றி நடனமாடிக்கொண்டே இருந்தாள். "சரி," நான் நினைத்தேன், "நான் அடுத்தவரைப் பார்க்கிறேன்." நான் அடுத்தவரை வரும்படி செய்தேன்; அவளுடைய கையைப் பிடிக்க முயன்றேன். நான், "நான் உங்களிடம் கொஞ்சம் பேச விரும்புகிறேன், சகோதரி" என்றேன். உடனே அவளும் சுற்றிச் சுற்றி நடனமாடத் தொடங்கினாள். நான் சொன்னேன், "ஓ, நான் அதை விரும்புகிறேன். அது அழகாக இருக்கிறது." மிரியாம் ஆவியில் நடனமாடினாள் என்பது எனக்குத் தெரியும். நான் அதை விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா. ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறது. புரிகிறதா? நீங்கள் இங்கே வரும்போது, தேவனுடைய சமுகத்தில் நிதானத்தோடு வாருங்கள். தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்வார் என்ற பூரண நிச்சயமுள்ள இருதயத்தோடு வாருங்கள், பரிசுத்த ஆவியானவரால் உங்களை நீங்களே உருக்கிக்கொள்ளுங்கள். அந்தச் சிறிய பெண், என்னால் கூட முடியவில்லை... என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவர்களில் ஒருவருக்கு நிச்சயமாகப் புற்றுநோய் இருந்தது; அவள் அநேகமாக இன்று இரவு மரித்திருக்கலாம். ஆனால் அவள் அமைதியாக நிற்கவே இல்லை; உங்களால் எதையும் செய்ய முடியாது. பார்த்தீர்களா? ஏனென்றால் அந்தப் பெண்ணுக்குத் தவறாகக் கற்பிக்கப்பட்டிருந்தது, அவர் ஒரு அற்புதமான நபர், அதில் சந்தேகமில்லை. 79 அங்கே ஒரு சிறிய பெண் நின்றார்... இப்போது, அவர் ஒரு பெந்தெகோஸ்தே பெண். மேலும் எனக்குப் பின்னால் ஒரு சிறிய பெண் நின்றிருந்தார், அவர் சம்பிரதாயமான பிரிவு என்று நாம் அழைக்கும் சபையைச் சேர்ந்தவர், ஒரு சிறுமியுடன் அங்கே பின்னால் நின்றுகொண்டிருந்தார். அவள் எந்த அசைவும் காட்டவில்லை, தன்னிடம் ஜெப அட்டையை வைத்துக்கொண்டு, அங்கே காத்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, அவள் வருவதற்கு அவர்கள் நேரம் கொடுத்தார்கள். அந்தச் சிறிய பெண் வெளியே நடந்தார். அந்தச் சிறுமி அங்கே நடந்து வந்து என் கையைப் பிடித்துக்கொண்டாள். அவள், "இங்கே பாருங்கள், அம்மா" என்றாள். தன் காலைத் தூக்க ஆரம்பித்தாள், அவளுடைய தாய் அழத் தொடங்கி, அப்படியே தளர்ந்துபோனாள். அவள் சொன்னாள், "சகோதரர் பிரான்ஹாம், இது நடக்கும் என்று எனக்குத் தெரியும். இது நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும்." அவள், "நான் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்" என்றாள். "குழந்தைக்கு என்ன பிரச்சனை?" என்று நான் கேட்டேன். "அவளுக்கு இரண்டு கால்களும் செயலிழந்து போயிருந்தன," என்று அவள் கூறினாள். பாருங்கள், அங்கே அது நடந்தது. அங்கேதான் நீங்கள் இருக்கிறீர்கள். பார்த்தீர்களா? அவள் சரியான வழியில் வந்தாள். தேவன் மேல் பயபக்தியோடு, தேவனை விசுவாசித்து, தேவனுக்கு முன்பாக பயபக்தியுடன் நடந்து வந்து, அவருடைய வாக்குத்தத்தத்தை விசுவாசித்து வந்தாள். அதே சமயம், தவறாகக் கற்பிக்கப்பட்ட ஒரு உண்மையான பரிசுத்தமான சிறிய பெண் மேடையைக் கடந்து வந்தபோது, அவளுக்காக என்னால் ஜெபிக்கக்கூட முடியவில்லை. அந்தப் பெண் தான் ஆவியில் இருப்பதாக நினைத்துக்கொண்டாள். ஆனால் அவள் மாம்சத்தில்தான் இருந்தாள். ஆனால் நிச்சயமாக, அவள் அங்கே இருந்தாள், அவள் அமைதியாக இருந்திருக்க வேண்டும்... ஆவிக்குரிய நிலையில் என்ன இருந்தது என்பதைக் காட்டியது, கனிகளே அது என்ன என்பதை நிரூபிக்கின்றன. நீங்கள் தேவனிடம் வரும்போது, நீங்கள் நிதானமாக, தெளிந்த புத்தியோடு, விசுவாசித்து, கேட்டு வர வேண்டும். தேவன் உங்களைக் குணமாக்கினால், நிச்சயமாக, உங்கள் கைகளை உயர்த்தி அவருக்குத் துதி செலுத்துங்கள். அதுதான் சரி. அந்தச் சிறிய பெண் அங்கே கீழே நடந்து சென்று அந்தச் சிறுமியைக் கட்டிக்கொண்டாள், தகப்பன் கூட்டத்திலிருந்து அப்படி ஓடி வந்தார். அவர் சொன்னார், "சகோதரரே, நான் பல வருடங்களாக ஒரு பாவியாக இருக்கிறேன், என் மனைவி ஒரு கிறிஸ்தவள்." மேலும், "நான் இப்போதே இயேசுவைக் கண்டுகொள்ள முடியுமா?" என்று கேட்டார். நான் சொன்னேன், "ஆம், என் சகோதரரே; அங்கேயே முழங்கால்படியிடுங்கள்." அதுதான் சரி. 80 பாருங்கள், அப்படித்தான் நாம் ஒரு கூட்டத்தை விரும்புகிறோம். அது சரிதானே? தெளிவான, உறுதியான, ஆரோக்கியமான ஒன்று, அப்படிப்பட்ட ஒரு சபையைத்தான் நாம் விரும்புகிறோம். அந்தச் சபையைக் குறித்து நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட மாட்டீர்கள். நீங்கள் நேராக நிமிர்ந்து நடப்பீர்கள். ஜனாதிபதி அங்கே அமர்ந்திருந்தாலும்கூட, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சமுகத்தில், உங்கள் சபையில் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி இருக்கிறார் என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். நீங்கள் அப்படிச் செய்ய மாட்டீர்களா? நிச்சயமாக. அப்படித்தான் நாம் செய்ய விரும்புகிறோம், ஒருவருக்கொருவர் விரோதமாக முறுமுறுத்துப் பேசாமல், தேவனுக்காக கிறிஸ்து நம்மை நேசித்ததுபோல ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். நாம் ஒரு நிமிடம் ஜெபிப்போமா. ஜெபிப்பதற்குச் சற்று முன்பு... நாளை இரவு, உங்களிடம் பேசுவதற்கு எனக்கு இன்னும் ஒரு இரவு இருக்கிறது, என் இருதயத்தில் உள்ள மிக முக்கியமான ஒரு காரியத்தைக் குறித்துப் பேச விரும்புகிறேன். இயேசுவைத் தவறாக நடத்துவதைக் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும், இயேசுவைத் தவறாக நடத்துவது என்றால் என்ன என்பதைக் குறித்தும் உங்களிடம் பேச விரும்புகிறேன். உங்களால் முடியுமானால் வர முயற்சி செய்யுங்கள். உங்களுடன் யாரையாவது அழைத்து வாருங்கள். 81 இப்போது, நீங்கள் இங்கே தலைகுனிந்து இருக்கும்போது, எல்லா கிறிஸ்தவர்களும் ஜெபிப்பார்கள் என்று நான் நம்புகிறேன், உங்களுக்கு ஒரு வார்த்தையை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். நீங்கள் உண்மை யிலேயே உங்கள் இருதயத்தில் வெறும் சபைக்குச் செல்வதாக நடித்துக்கொண்டு, கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்குத் தெரியும், மோசேயுடன் பலஜாதியான ஜனங்களும் சென்றார்கள், அது பாளயத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியது. பலஜாதியான ஜனங்கள்... அங்கு அற்புதங்கள் நடந்தன; அடையாளங்கள் செய்யப்பட்டன, எல்லோரும் அதற்காக ஓடினார்கள். வேறு யாரிடமோ ஒரு பெரிய வல்லமையும் செல்வாக்கும் இருப்பதைப் பார்த்ததாலேயே ஒருவேளை நீங்கள் சபைக்குச் சென்றிருக்கலாம்; அதன் அடிப்படையில் நீங்களும் சபைக்குச் செல்லலாம் என்று நினைத்திருக்கலாம். நீங்கள் ஒரு தடையாக இருக்கிறீர்கள், நண்பரே. கிறிஸ்துவிடம் வாருங்கள், உண்மையாகவே உங்கள் இருதயத்தை அவருடைய மகிமையினாலும் ஆசீர்வாதத்தினாலும் நிரப்பிக்கொள்ளுங்கள். 82 இன்று இரவு இங்கு ஒருபோதும் அறிக்கை செய்யாத, ஒருபோதும் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொள்ளாத, மற்றும் இப்போதே ஜெபத்தில் நினைவுகூரப்பட விரும்பும் ஒரு பாவி யாராவது இருக்கிறீர்களா? உங்கள் கையை உயர்த்துவீர்களா? அதன் மூலம்... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி. வேறு யாராவது? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. மிகவும் நன்று. மற்றொரு பாவி தன் கையை உயர்த்தி, "என்னை நினைவுகூருங்கள், சகோதரர் பிரான்ஹாம். நீங்கள் உண்மையைத்தான் சொன்னீர்கள் என்று நான் முழுமையாக விசுவாசிக்கிறேன், எங்கேயோ ஏதோ தவறு இருக்கிறது என்பதை நான் எப்போதும் அறிந்திருந்தேன். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மக்களை நான் கவனித்திருக்கிறேன், பலவிதமான செயல்களை நான் பார்த்திருக்கிறேன்" என்று சொல்வீர்களா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா, உங்கள் கையை நான் பார்க்கிறேன். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக தம்பி, உன் கையை நான் பார்க்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி; உங்கள் கையை நான் பார்க்கிறேன். அங்கே பின்னால் உங்கள் கையை நான் பார்க்கிறேன், ஆம், என் சகோதரரே. "நான் சபையைப் பார்த்திருக்கிறேன், நான்-ஏதோ ஒன்று இருக்கிறது என்று எனக்குத் தெரியும்; இப்போது எனக்குப் புரிகிறது. அது தேவனுடைய தவறு அல்ல; அது தேவன் அல்ல. ஆனால் நான்-நீங்கள் சொல்லும் அப்படிப்பட்ட ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்புகிறேன்" என்று சொல்லுங்கள். "எனக்கு அந்த உண்மையான சமாதானமான, அமைதியான வாழ்க்கை வேண்டும், சகோதரர் பிரான்ஹாம். எனக்கு எதிராகப் புயல்கள் கடுமையாக வீசும்போது என்னைக் காத்துக்கொள்ளும் ஏதோ ஒன்று என் இருதயத்தின் ஆழத்தில் எனக்கு வேண்டும். மரண இருளின் பள்ளத்தாக்குகளில் நடந்தாலும், நான் அமைதியாகவும் சாந்தமாகவும் நடக்கும்படியான ஒரு சமாதானம் என் இருதயத்தில் இருக்கிறது என்பதை நான் அறிய விரும்புகிறேன். இன்று இரவு ஜெபத்தில் நீங்கள் என்னை நினைவுகூர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், சகோதரர் பிரான்ஹாம்." என் அன்பான சகோதர, சகோதரிகளே, நான் அதைச் செய்வேன். 83 இப்போது, தேவன் உங்கள் கைகளைப் பார்க்கிறார். பாருங்கள்-நான் அதைப் பார்ப்பதால் பெரிய நன்மை எதுவும் இல்லை, ஆனால் தேவன் அதைப் பார்க்கிறார். எட்டு அல்லது பத்து பேர் பாவிகளாகத் தங்கள் கைகளை உயர்த்தியிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கு வேறு யாராவது உங்கள் கையை உயர்த்தி, "ஒரு வார்த்தை ஜெபத்தில் என்னை நினைவுகூருங்கள், சகோதரர் பிரான்ஹாம், ஒரு பாவியாக நான் வருகிறேன்" என்று சொல்வீர்களா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரரே. உங்களை நான் பார்க்கிறேன், அங்கே தூணுக்கு அருகில் இருக்கும் உங்களை நான் பார்க்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரரே. வேறு யாராவது, "ஒரு வார்த்தை ஜெபத்தில் என்னை நினைவுகூருங்கள், சகோதரர் பிரான்ஹாம், நான்... ஏதோ ஒருவிதத்தில் இன்று இரவு நான் விசித்திரமாக உணருகிறேன். நான்-நான் ஒரு உண்மையான கிறிஸ்தவனாக மாற வேண்டும் என்று நான்-நான் உணருகிறேன்" என்று சொல்லுங்கள். இங்கு யாராவது, "சகோதரர் பிரான்ஹாம், நான்-நான் ஒரு கிறிஸ்தவன் என்று அறிக்கை செய்கிறேன்..." என்று சொல்வீர்களா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரரே. உங்கள் சிறிய மனைவி மற்றும் குழந்தையுடன் அங்கே உங்கள் கையை நான் பார்க்கிறேன். தேவன் உங்களுக்குச் சமீபமாக இருப்பாராக, என் சகோதரரே. உங்களை எது கையை உயர்த்தச் செய்கிறது? நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுமா? இதுதான் அது: "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்" என்று இயேசு சொன்னார். அது தேவன்தான். அது உங்களிடம் பேசும் பரிசுத்த ஆவியானவர்தான். "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான், என்னிடத்தில் வருகிற அனைவரையும், நான் அவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பேன், கடைசி நாளில் அவர்களை எழுப்புவேன்." கைகளை உயர்த்தியவர்களே, இதைக் குறித்து இயேசு என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள். "அவன் (யாராக இருந்தாலும்), என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன்..." அவன் என்ன செய்கிறான்? "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு (நிகழ்காலம்); அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." 84 அவர்கள் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது, நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். "சகோதரர் பிரான்ஹாம், பாவம் என்றால் என்ன?" சிகரெட் பிடிப்பது, அது பாவம் அல்ல. விபசாரம் செய்வது, அது பாவம் அல்ல. பொய் சொல்வது, அது பாவம் அல்ல. அவையெல்லாம் பாவத்தின் பண்புகள். ஒரே ஒரு பாவம்தான் இருக்கிறது, அதுதான் அவிசுவாசம் என்னும் பாவம். "விசுவாசியாதவனோ..." யோவான் 3, "விசுவாசியாதவனோ ஆக்கினைத் தீர்ப்புக்குட் பட்டாயிற்று." இப்போது, நீங்கள் ஒரு விசுவாசி அல்லது அவிசுவாசி. நீங்கள், "சரி, சகோதரர் பிரான்ஹாம், நான் குடிப்பதை விட்டுவிட்டேன். நான்..." என்று சொன்னால், அதற்கும் அதுதான் அர்த்தம் என்று இல்லை, நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்று அது அர்த்தப்படுத்தாது. புரிகிறதா? அது கர்த்தராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைத்ததன் விளைவாக இருந்தால்... நீங்கள் செய்யக்கூடிய ஒரே காரியம் விசுவாசிப்பதுதான்; உங்கள் விசுவாசத்தின் உறுதிப்பாடாக தேவன் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைக் கொடுக்கிறார். புரிகிறதா? 85 ஆனால் முதலில் கிறிஸ்து-அல்லது தேவன் உங்களிடம் பேசியிருந்தாலொழிய உங்களால் கிறிஸ்துவுக்கு நேராக உங்கள் கையை உயர்த்த முடியாது. பிறகு பாருங்கள், யோசித்துப் பாருங்கள், யோவான் 5:24-ல் இயேசு பேசுகிறார்... அது அவருடைய வார்த்தை, என்னுடையது அல்ல. "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, ஏனென்றால் அவன் தேவனுடைய ஒரேபேறான குமாரனை விசுவாசித்திருக்கிறான்." பிறகு நீங்கள் உண்மையாகவே விசுவா சித்தால், பாவத்தின் கேள்வி முடிந்துவிட்டது. புரிகிறதா? "அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." அதைத்தான் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து சொன்னார். அதுதான் இரட்சிப்பின் திட்டம். "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன், (இப்போதே) மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." உங்களால் விசுவாசிக்க முடியுமா? உங்கள் கையை உயர்த்தி, "நான் இப்போது விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்" என்று சொல்லுங்கள். 86 நாம் இன்னும் சற்று மேலே செல்வதற்கு முன் இன்னும் ஒரு பாவி. தேவன் உங்களோடு இருப்பாராக, சகோதரி. ஸ்பானிஷ் சகோதரி, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. யாராவது இருக்கிறீர்களா...? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி, இங்கே இருக்கும் ஸ்பானிஷ் பெண்மணி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆஹா, அந்த... ஸ்பானிஷ் மக்களிடையே கர்த்தர் எனக்கு எவ்வளவு அற்புதமான ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார். இரவு முழுவதும் அந்த "குளோரியா அ டியோஸ்" (Gloria a Dios) என்பதைக் கேட்கலாம். வழியை விட்டு விலகிச் சென்ற யாராவது, "சகோதரர் பிரான்ஹாம், நான்-நான் இயேசுவைச் சரியாக நடத்தவில்லை. நான் சரியானதைச் செய்யவில்லை. அந்த முழுமையான அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையை நான் வாழவில்லை என்பது எனக்குத் தெரியும். இன்று இரவு நீங்கள் ஜெபிக்கும்போது என்னை நினைவுகூருங்கள், சகோதரர் பிரான்ஹாம், அந்த முழுமையான அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையை தேவன் எனக்குக் கொடுப்பார்" என்று சொல்வீர்களா. உங்களைப் பார்க்கும் தேவனுக்கு நேராக உங்கள் கைகளை உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரி, எங்கும் உள்ள மக்களே. 87 இப்போது, நாம் என்ன செய்யப் போகிறோம் என்றால்... தயவுசெய்து யாரும் வெளியே செல்ல வேண்டாம். உங்கள் விருப்பத்தின்பேரில், நாம் ஒரு நிமிடம் மிகவும் பயபக்தியுடன் நம் கால்களில் எழுந்து நிற்போம். ("நான் இருக்கும் வண்ணமாகவே" - "Just As I Am") "நான் இருக்கும் வண்ணமாகவே" என்ற இந்தப் பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கும்போது... உங்களுக்கு என்னைத் தெரியாது, ஒருவேளை நீங்கள் ஒருபோதும் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க மாட்டீர்கள். இது உங்களை இரட்சிக்காது; இது உங்களுக்கு உதவி செய்யும். நீங்கள் இங்கே மேடைக்கு நடந்து வந்து, இங்கே நின்று, உங்கள் கையை நான் பிடித்துக்கொள்ள அனுமதித்து, இங்கே நின்று இந்தக் கூட்டத்தாரைப் பார்த்து, ஜெபித்து, இயேசுவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொள்ள விருப்பமாக இருக்கிறீர்களா. நாம் உண்மையிலேயே அதை அர்த்தப்படுத்துகிறோமா? நாம் பாடும்போது, இயேசுவை அறிக்கை செய்ய விரும்பும் பாவிகள், "நான் இருக்கும் வண்ணமாகவே" என்று நாம் பாடும்போது இங்கே நேராக நடந்து வருவார்களா. சரி. அப்படியே... (இப்போது நீங்கள் ஒரு நிமிடம் இங்கே வருவீர்களா), எந்த ஒரு சாக்கும் இல்லாமல், ஆனால் அந்த... ஓ தேவ ஆட்டுக்குட்டியானவரே... (நேராக இந்த வழியாக) வர விரும்பும் மற்றவர்கள், அறிக்கையிடும் பாவிகள், இப்போது இயேசுவை ஏற்றுக்கொள்ள விரும்புபவர்கள், இப்போது வருவீர்களா? "மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர்கள் முன்பாகவும் அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னைக்குறித்து வெட்கப்படுகிறவன் எவனோ, அவனைக்குறித்து நானும் அங்கே வெட்கப்படுவேன்" என்று அவர் சொன்னார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரி. நான் வருகிறேன்! நான்... 88 நான் இப்போது உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். இங்கே தலைகுனிந்து நிற்கும் பாவியான நண்பர்களைப் பாருங்கள். அவர்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் தங்களை மன்னிக்கும்படி தேவனிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக, அவர் மன்னிப்பார். அவர் மன்னித்தே ஆகவேண்டும். அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்ள வேண்டும். "நான் புறம்பே தள்ளுவதில்லை. பிதா எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்." அவர்கள் அதைத்தான் செய்தார்கள். இங்கே வரும் இந்தச் சிறிய ஸ்பானிஷ் பெண்மணியை தேவன் ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரி. நீங்கள் வாழ்க்கையில் பல நல்ல காரியங்களைச் செய்திருக்கலாம், ஆனால் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்காக நீங்கள் முன்வந்து நடப்பதன் மூலம், உங்கள் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த தைரியமான காரியத்தை இப்போது செய்கிறீர்கள். என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? நான் இதைத்தான் செய்ய முயற்சிக்கிறேன், முதலில் தேவனிடம் தயவு பெற முயற்சிக்கிறேன். அவர் இதைப் பார்க்கும்போது, பரலோகத்தின் மகிழ்ச்சியின் மணிகள் ஒலிக்கின்றன. அடுத்த வாரம் அவர் நமக்கு ஒரு பெரிய சுகமளிக்கும் ஆராதனையைக் கொடுப்பார், நீங்களே பாருங்கள், பாவிகள் சிலுவைக்கு வருவதை அவர் பார்க்கும்போது அது நடக்கும். 89 இப்போது, ஒருவேளை, சபையின் உறுப்பினர் ஒருவருக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் மனதைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சிறிய அனுபவத்தை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒரு அற்புதமான சபைக்குச் சென்ற ஒரு நல்ல இளம் பெண் இருந்தார். அது ஒரு மெத்தடிஸ்ட் சபை, அவர் ஒரு அன்பான சிறிய பெண். அவள் செல்ல வேண்டியிருந்தது... அந்தப் பெண்ணின் அனுபவத்தைக் குறித்து நான் எப்போதும் சந்தேகப்பட்டேன், ஏனென்றால் அவளுடைய தாயும் தந்தையும் சென்றதாலேயே அவளும் சென்றாள். அவளுடைய தந்தை சபையில் ஒரு உதவிக்காரராக இருந்தார். அவள் பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்டாள், அவள் மிகவும் சிறப்பாக பியானோ வாசிப்பவளாக இருந்தாள். அங்கே ஒரு நல்ல பையன் இருந்தான், அந்தப் பையன் உண்மையிலேயே பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தான் என்று நான் நம்புகிறேன். அவன் அவளைக் காதலித்தான், அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். இது கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லில் நடந்தது, சில வாரங்களுக்கு முன்புதான் நடந்தது. அதனால், அந்த-அந்தப் பெண்... அந்தப் போதகரை எனக்கு நன்றாகத் தெரியும், மற்றும் பல காரியங்கள். அந்தப் பெண்ணைக் குறித்து-அவளுடைய அனுபவத்தைக் குறித்து நான் ஒருவிதமாகச் சந்தேகப்பட்டேன். சரி, சரி, அவள் தன் தாயோடும் மற்றவர்களோடும் இருந்தவரைக்கும், அவள் மிகவும் நல்ல வழியில்தான் நடந்தாள், ஆனால் அவளிடம் அந்த அறிவுப்பூர்வமான விசுவாசம் மட்டுமே இருந்தது. இப்போது, மிகவும் கவனமாகக் கேளுங்கள். இது தீவிரமானது; ஆத்துமாக்கள் ஆபத்தில் உள்ளன. 90 மேலும் நான்-நான் ஆச்சரியப்பட்டேன். அவளை நியாயந்தீர்ப்பவன் நான் அல்ல, ஆனால் அவள்-அவள் நடந்துகொண்ட விதத்தை நான் கவனித்தேன், அது அவ்வளவாகக் கிறிஸ்தவத் தன்மையுடன் இருப்பதாகத் தெரியவில்லை. பிறகு, நாட்கள் சென்றன, சில ஆண்டுகளுக்கு முன்பு அவள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறி, சபை சற்று உலகப்பிரகாரமாக இருந்த மற்றொரு பகுதிக்கு குடிபெயர்ந்தாள். அங்குள்ள பெண்கள் அனைவரும் அவ்வளவு நேர்த்தியாக உடை அணியவில்லை, உங்களுக்குத் தெரியும், அவர்கள் அணிவதைப் போன்ற சிறிய உடைகளை அணிந்துகொண்டு, வெளியே வந்து முற்றத்தில் புல் வெட்டுவது போன்ற காரியங்களைச் செய்தார்கள். அது பார்ப்பதற்கு அவ்வளவு பெண்மையோடு இல்லை. எனவே அவள் சிந்திக்கத் தொடங்கினாள், "இப்போது, அவர்கள் அதைச் செய்துவிட்டு சமாளிக்க முடியும் என்றால், சரி, அவர்களைப் பற்றியும் என்னைப் போலவேதான் நினைக்கிறார்கள். அப்படியென்றால் என்னால் ஏன் அதைச் செய்ய முடியாது?" ஓ, அது ஒருபோதும் உங்கள் மனதுக்குள் நுழைய விடாதீர்கள். புரிகிறதா? அது எதைக் காட்டுகிறது என்றால் அங்கே... இங்கே உள்ளே ஏதோ ஒன்று குறைவுபடுகிறது என்பதைக் காட்டுகிறது. பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வித்தியாசமாகக் கற்பிப்பார், நண்பரே. 91 ஆனால் அவள் தொடர்ந்தாள். சரி, அவள் தர்க்கிக்க ஆரம்பித்தாள். இப்போது, ஒரு மனிதனுக்கு ஒரு ஆத்துமா இருக்கும்போது, அந்த ஆத்துமா தேவனின் வார்த்தையோடு தர்க்கிக்காது; அது அதை விசுவாசிக்கும். ஆனால் அறிவுப்பூர்வமான மனம் தேவனின் வார்த்தையோடு தர்க்கிக்கும். நீங்கள் சொல்லலாம், "ஓ, சரி, அது தீவிரவாதமாக இருக்கலாம். அதைச் செய்வதா என்று எனக்குத் தெரியவில்லை..." கவனமாக இருங்கள். அது வேதாகமத்திலிருந்து வருகிறது; நீங்கள் அதை ஆராய்ந்து பாருங்கள். மேலும் உங்கள் ஆத்துமா, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருந்தால், அதை ஆராய்ந்து அறிந்துகொள்ளும். அப்படியே சென்றது. கொஞ்சக் காலத்திற்குப் பிறகு, என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? சீட்டு விளையாடும் விருந்துகளிலும், சிறிய சமூகக் கூட்டங்களிலும் அவள் கலந்துகொள்ள ஆரம்பித்தாள். அப்போது அந்தப் பகுதிக்கு அழகாகத் தோற்றமளிக்கும் ஒரு இளைஞன் குடிவந்தான், அவள் அவன் மேல் காதல் கொண்டு, தன் கணவனை விட்டுவிட்டு, அந்த மனிதனைத் திருமணம் செய்து கொண்டாள். "சரி," என்று அவள் நினைத்தாள், "மற்ற பெண்களும் இதைச் செய்கிறார்களே. மேலும், சரி, அவர்கள் ஒரு சபையைச் சேர்ந்தவர்கள்தானே. நான் ஏன் செய்யக்கூடாது?" பாருங்கள், இதுதான் தர்க்கிப்பது. அவள் சொன்னாள், "நான் எப்போதும் போல இப்போதும் சபையில் ஒரு உறுப்பினராகவே இருக்கிறேன். நான் எப்போதும் போல இப்போதும் ஒரு கிறிஸ்தவளாகவே இருக்கிறேன். மற்ற பெண்கள் இதைச் செய்கிறார்கள், அவர்கள் எப்படி மதிக்கப்படுகிறார்கள் என்று பாருங்கள்." மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்; தேவன் என்ன நினைக்கிறார் என்று எண்ணிப்பாருங்கள் (பார்க்கிறீர்களா?), தேவன் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். கொஞ்சக் காலத்திற்குப் பிறகு, அவன் சரியானவன் இல்லை என்று நிரூபணமாகியது... நிச்சயமாக, அவன் தன் முதல் மனைவியை விட்டுவிடுகிறான் என்றால், அவன் இன்னொருத்தியையும் விட்டுவிடுவான். எனவே அவன் அவளை விட்டுவிட்டான், அவள் மீண்டும் திருமணம் செய்துகொண்டாள். அதன் பிறகு அவள்... அந்த மனிதனும் அவளை விட்டுவிட்டான். அதன் பிறகு அவள் சட்டப்படி திருமணமாகாத ஒரு கணவனுடன் வாழ்ந்து வந்தாள். பின்னர் அது அவளைப் பிடித்துக்கொண்டது. அவளுக்குப் பெண் உறுப்பில் புற்றுநோய் வந்தது. 92 இப்போது, அந்த... ஜெஃபர்சன் வில்லியில் எனக்கு ஒரு பாப்டிஸ்ட் சபை இருக்கிறது. ஆனால் அங்குள்ள போதகர் ஒரு மெத்தடிஸ்ட்- கென்டக்கியில் உள்ள வில்மோரில் உள்ள ஆஸ்பரி கல்லூரியைச் சேர்ந்த பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற ஒரு அருமையான சகோதரர். ஆகையால், இந்தப் பெண் ஒரு மெத்தடிஸ்ட் ஆக இருந்ததால், அவர் அவள் மீது மிகவும் அக்கறை கொண்டிருந்தார். எனவே அவர் அவளைப் பார்க்கச் சென்றார். அங்கே அவள் ஒன்றன்பின் ஒன்றாக சிகரெட் குடித்துக்கொண்டும், மேலும்-மேலும் சட்டப்படி திருமணமாகாத ஒரு கணவனுடன் வாழ்ந்துகொண்டும் இருந்தாள், அவன் படுக்கையில் அவளுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான், உங்களுக்குத் தெரியும்... மருத்துவர் சொல்லியிருந்தார், "அவள் மரிக்கப் போகிறாள்." எனவே அவர்... சகோதரர் நெவில் சொல்கிறார், "நான் அங்கே போய் அவளைப் பார்த்து, அவளிடம் பேசினால், ஒருவேளை நான் அவளை மனந்திரும்பச் செய்ய முடியும்." மேலும் அவர் சொன்னார், "சகோதரர் பிரன்ஹாம் வரும்போது, நான் அவரை அங்கே கூட்டிக்கொண்டு போவேன், ஏனென்றால் அவர் அவளுக்கு அதைத்தான் சொல்வார் என்று எனக்குத் தெரியும். மேலும் நான் அவளை ஒருவேளை சுகமடைவதற்கான நிலையில் கொண்டு வருவேன்." எனவே அவர் முயற்சி செய்தார், ஒரு அருமையான சகோதரர். எனவே அவர் அங்கே சென்று சொன்னார், "இப்போது, சகோதரியே," "நீங்கள் ஒரு மெத்தடிஸ்ட் என்று நான் புரிந்துகொள்கிறேன்" என்றார். அதற்கு அவள், "நான் அப்படித்தான்" என்றாள். அவர் சொன்னார், "நான் உங்களிடம் ஒரே ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன்." "நீங்கள் மரணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறீர்களா?" என்று கேட்டார். அவள் சொன்னாள், "சரி, நிச்சயமாக." 93 அவர் சொன்னார், "அம்மா, நான்... உங்கள் மனதைப் புண்படுத்த நான் விரும்பவில்லை, மேலும் உங்கள் காரியங்களில் நான் தலையிடுகிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்." ஆனால் அவள் சொன்னாள்... "அங்கே கீழே வைக்கப்பட்டிருக்கும் அந்த விஸ்கி, மற்றும் சிகரெட் குடிப்பது, மற்றும் சட்டப்படி திருமணமாகாத கணவனுடன் வாழ்வது-என்று நீங்கள் எனக்குச் சொல்ல வருகிறீர்களா..." அவள் கேட்டாள், "அதைப்பற்றி உங்களுக்கு என்ன?" அவர் சொன்னார், "சரி, ஒரு ஊழியக்காரனாக," "நான்-நான் வந்து உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்தேன், உண்மையாகவே அது ஒரு கிறிஸ்தவனுக்கு அவ்வளவு ஏற்றதல்ல" என்றார். அவள் சொன்னாள், "நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன், அது அதைத் தீர்த்துவிடுகிறது." பாருங்கள்? அவள் சொன்னாள், "நான் சபைக்குப் போகிறேன். என் தந்தை ஒரு உதவிக்காரர். நான் பல ஆண்டுகளாக சபையில் பியானோ வாசித்திருக்கிறேன், நான் எப்போதையும் போலவே இப்போதும் நீதிமானாக்கப்பட்டது போல உணருகிறேன்." 94 அது என்ன? "பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்." ஆத்துமா, அவள் செய்தது தவறு என்று அவளுக்குச் சொன்ன அந்த உள்ளான மனசாட்சி, இன்று இரவு உங்களுக்கும் அதையே சொல்லிக் கொண்டிருக்கலாம், அவள் தனது அறிவுப்பூர்வமான பகுதிகளுக்குச் சென்று, தன்னுடைய-தன்னுடைய மனதினால் விசுவாசித்து, அந்தப் பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தினாள். அது இனி அவளிடம் பேசவில்லை. அவள் நம்புவதற்கு அவளுக்கு இருந்த மனதின் அளவிலே, அவள் தான் சரியாக இருப்பதாக நினைத்துக்கொண்டாள். அதன் பிறகு, சகோதரர் நெவில் வெளியே நடந்தார். அவர் என்னிடம் சொன்னபோது, நான் சொன்னேன், "இப்போது பாதையின் முடிவில் அவளைக் கவனியுங்கள்; கவனித்துக்கொண்டே இருங்கள்." அவர்கள் பாதையின் முடிவில் அங்கு இருக்க நேரிட்டது. அவள் அங்கே உட்கார்ந்துகொண்டு, தன் சிகரெட்டைக் கீழே வைத்தாள். ஆகையால், அவள் மக்களுடன் கேலி செய்துகொண்டும் பேசிக்கொண்டும் இருந்தாள். கொஞ்சக் காலத்திற்குப் பிறகு, அவள் சொன்னாள்... மரணம் அவளை ஆட்கொண்டது; அவளுடைய கண்கள் மங்கலாயின; அவள் சுற்றிலும் பார்த்தாள். என்ன விஷயம்? மூளைத் திறன்கள் உடைந்து கொண்டிருந்தன; உங்கள் மனம் உங்கள் மூளையோடு செல்கிறது, உங்கள் ஆத்துமாவோடு அல்ல, உங்கள் மனமே செல்கிறது. எனவே நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள் என்றால், "சரி, அது கடந்துபோன நாட்களில் நடந்தது. இது-இது இப்படி, அப்படி. அது-அது நமக்கானது அல்ல." கவனமாக இருங்கள். பரிசுத்த ஆவியானவர் வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையோடும் ஒத்துப்போகிறார். அது சரிதான். 95 அது இயேசு நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவர் என்று விசுவாசிக்கிறது. அவர் ஒவ்வொரு சபையிலும் இருக்கிறார் என்று அது விசுவாசிக்கிறது. பாருங்கள்? அவள் அதைத் துக்கப்படுத்தித் தன்னைவிட்டு அகற்றிவிட்டாள். ஆனால் அவள் மரிக்க வந்தபோது, இந்த அறிவுப்பூர்வமான பகுதிகள் உடைந்து கொண்டிருந்தன. அவள் நிமிர்ந்து பார்த்து, "என் தேவனே," என்றாள், "நான் அழிந்துபோனேன்." அவள் சொன்னாள், "எங்கே... சீக்கிரமாக எனக்கு ஒரு பிரசங்கியைக் கொண்டு வாருங்கள்." அவளுடைய போதகர் அங்கே நின்று கொண்டிருந்தார்... அவள் சொன்னாள், "அந்த வஞ்சகன் எனக்கு வேண்டாம்." அந்தப் போதகர் ஓடிச்சென்று, மருத்துவரை அழைத்து வந்து, "அஹெம்! அஹெம்! டாக்டரே," "அவள் தன்னிலையை இழந்துவிட்டாள்" என்றார். "நீங்கள் அவளுக்கு ஒரு ஊசி போடுவது நல்லது" என்றார். அவள் சொன்னாள், "ஊசியும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். நான் அழிந்துபோனேன்! நான் அழிந்துபோனேன்!" அவர்கள் அவளுக்கு ஒரு ஊசி போட்டார்கள். அவள் சொல்லிக்கொண்டே இருந்தாள், "நான்-நான்-நான்..." இன்னொரு ஊசி... "நான் அழிந்துபோ...நான்-நான் அழிந்துபோ...நான்..." அவ்வளவுதான். ஒரு ஊசி அந்த அறிக்கையை நிறுத்தியது, ஆனால் அவள் அந்த ஆத்துமாவோடு நித்திய காலமெல்லாம் வாழ்வாள். அது அவளை வேட்டையாடும். சகோதரனே, உங்கள் மனம் சொல்வதைக் கேட்டுத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். பரிசுத்த ஆவியானவர் இப்போது உங்கள் இருதயத்தில் என்ன சொல்கிறார்? நீங்கள் எவ்வளவு காலமாகச் சபையில் சேர்ந்திருந்தாலும் சரி, இந்த பாவிகளோடு நீங்கள் இங்கேயே இருக்கக் கூடும். அப்படியானால், நாம் இன்னொரு முறை பாடும்போது, இப்போதே வாருங்கள். நான் இருக்கிறபடியே... 96 நீங்கள் வரமாட்டீர்களா? நீங்கள் அவ்வளவு பெரியவர்களா, அது... நீங்கள் இங்கே வெளியே வந்து என்னோடு கை குலுக்கி, என்னோடு பலிபீடத்தின் அருகே நின்று, "சகோதரர் பிரன்ஹாம், எனக்குத் தேவனோடு ஒரு நெருக்கம் வேண்டும்" என்று சொல்வீர்களா? நீங்கள் வருவீர்களா? இது இங்கேயே உடைந்துபோக விடாதீர்கள், பின்பு நீங்கள் தவறாக இருக்கிறீர்கள் என்று மிகத் தாமதமாகக் கண்டுகொள்வீர்கள். இப்போதே செய்யுங்கள். ...எனக்காகவே, என்னையும் உம்மிடம் வர அழைத்தீரே, தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன்! நான் வருகிறேன்! 97 நாம் ஒரு நிமிடம் நம்முடைய தலைகளை வணங்குவோமா. பலிபீடத்தின் அருகே மூன்று பெண்களும், ஆறு ஆண்களும் தலைவணங்கி, மனஸ்தாபப்பட்டு நிற்கிறார்கள். நியாயத்தீர்ப்பு நாளின்போது, நான் அவர்கள் முன்னிலையில் நின்று, இப்போது நான் அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். அது இதுதான், "நான் வெட்கப்பட மாட்டேன், என் அன்பு நண்பரே." உங்கள் சொந்த பெலத்தால் உங்களால் இங்கே வர முடியாது; சாத்தான் உங்களை வரவிட மாட்டான். ஏதோ ஒன்று உங்களிடம் பேசியதால்தான் நீங்கள் வருகிறீர்கள். அது இயேசுதான். அவர் உங்களை இங்கே கொண்டு வந்திருக்கிறார், மேலும் அவர் சொன்னார், "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளமாட்டேன்." உங்கள் கடந்தகால வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்திருந்தாலும் சரி... இப்போது, ஒன்றிணைந்து தாழ்மையான ஜெபத்தில், உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள், அதன்பிறகு தேவன் உங்கள் பாவங்களை மன்னிக்கிறார் என்று விசுவாசியுங்கள். ஏனென்றால் அவர் சொன்னார், "வாருங்கள். உங்கள் பாவங்கள் சிவேரென் றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்." நீங்கள் என்ன செய்திருந்தாலும் சரி, அதற்காக வருந்துகிறீர்கள் என்று தேவனிடம் சொல்லுங்கள். அவர் உங்களை இங்கே அழைத்தார். நீங்களாகவே வரவில்லை; அவர் உங்களை அழைத்தார். "வருகிறவனை, நான் புறம்பே தள்ளமாட்டேன்" என்று சொன்னார். அவர் அதைச் செய்வார். மீதமுள்ள கூட்டத்தாரும் எங்களோடு சேர்ந்து ஒரு வார்த்தை ஜெபிக்கையில், நாங்கள் ஜெபிக்கும்போது விசுவாசமாக இருங்கள். 98 பரம பிதாவே, இன்று இரவு இங்கே மக்களின் மீது கண்ணோக்கி, இவர்களைக் காண்கிறீர், உம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட பிள்ளைகள் எப்படியோ இன்று இரவு வார்த்தையின் மூலமாக உமது சத்தத்தைக் கேட்டு, ஒரு கிறிஸ்தவனாக மாற விரும்பி முன்னே வந்திருக்கிறார்கள். அது எப்பேர்ப்பட்ட வித்தியாசத்தை ஏற்படுத்தப் போகிறது. ஜெபம் என்னவெல்லாம் செய்கிறது. அது மரணத்திலிருந்து ஜீவனுக்கு மாற்றுகிறது. தேவனே, இங்குள்ள ஒவ்வொருவர் மீதும் உமது கரங்களை வைக்கும்படி நான் ஜெபிக்கிறேன். பிதாவே, உமது ஆசீர்வாதங்களால் அவர்களை அபிஷேகம் செய்யும். அவர்கள் தங்கள் ஒவ்வொரு பாவத்தையும் அறிக்கையிடும்போது, அதை அகற்றிப்போடும். "தன் பாவத்தை அறிக்கையிட மனதாயிருக்கிறவனுக்கு, அதை மன்னிக்க தேவன் நீதியுள்ளவராயிருக்கிறார்" என்று அவர் சொன்னார். இப்போதே ஆயக்காரனைப் போல, "தேவனே, என்மேல் கிருபையாயிரும்" என்று அவர்கள் தங்கள் இருதயங்களில் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்; பின்பு அவன் நீதிமானாக்கப்பட்டவனாய் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான். ஆண்டவரே, நீர் அதைச் செய்வீர் என்று நான் ஜெபிக்கிறேன். நீர் வாக்குத்தத்தம் செய்திருப்பதால், நீர் அதைச் செய்வீர். உமது ஆசீர்வாதங்கள் அவர்கள் மேல் தங்குவதாக. 99 ஆண்டவரே, இங்குள்ள இந்தப் பெண்களை, அவர்கள் வாழும் இடங்களில் உள்ள அயலவர்களுக்குப் பெண்மைக்கு ஓர் உதாரணமாக மாற்றும். ஆண்டவரே, இந்த ஆண்களை அபிஷேகம் பண்ணப்பட்ட விளக்குகளாக மாற்றும். பிதாவே, அதைத் தந்தருளும். மேலும் இந்தக் கூட்டத்திலேயே இளைஞர்கள் நிற்கிறார்கள். ஓ தேவனே, ஊழியத்திற்காக உமது கரத்தை அவர்கள் மேல் வையும்; அவர்களுக்கு ஒரு அழைப்பைக் கொடும். பிதாவே, நீர் அவர்களை ஜனங்களிடமிருந்து பிரித்தெடுத்து, அவர்களை நிலைநிறுத்தி, உமது குடும்பத்தில் அவர்களைத் சுவீகரிக்கும் வரைக்கும் அவர்கள் அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வார்களாக. மேலும் உமது ராஜ்யத்தில் அரசாளும்படி அவர்களை ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் அபிஷேகம் செய்யும். மற்றவர்களைக் கிறிஸ்துவிடம் வழிநடத்த அவர்களுக்கு ஊழியங்களையும் செய்யவேண்டிய காரியங்களையும் கொடும். அவர்கள் இங்கே தாழ்மையுடன் தலைவணங்கி நிற்கும்போது, ஆண்டவரே, அதைத் தந்தருளும். 100 ஆண்டவரே, இதோ உமது வாக்குத்தத்தம், "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளமாட்டேன். தன் பாவங்களை அறிக்கையிடுகிறவனுக்கு, நான் அவற்றை மன்னிக்க நீதியுள்ளவராயிருக்கிறேன். என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பி னவரை விசுவாசிக்கிறவனுக்கு (அப்போதே) நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." மேலும், பிதாவே, அவர்கள் உணர்ச்சிவசப்பட்டல்லாமல், நிதானத்துடன் மேலே நகர்ந்து வந்திருக்கிறார்கள், அவர்கள் தெளிவாக வந்து, "சகோதரனே, நான் தேவனோடு உள்ள காரியத்தில் உறுதியாக இருக்கிறேன். எனக்கு ஒரு உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை வேண்டும். என் வாழ்க்கை கிறிஸ்துவுக்காகப் பயன்பட வேண்டும்" என்று சொல்வது போல என் முகத்தை நேராகப் பார்த்து வந்திருக்கிறார்கள். தேவனே, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இப்போதே ஒவ்வொரு பாவமும் இரத்தத்தின் கீழே செல்லும்படி இன்று இரவு கிருபை செய்யும். 101 இப்போது, நம் தலைகள் வணங்கப்பட்டிருக்க, நீங்கள் பலிபீடத்தின் அருகே இருக்கிறீர்கள்... இப்போது என் நண்பரே, இதுதான் முக்கியம்: நீங்கள் எவ்வளவு அதிகமாக ஜெபிக்கிறீர்கள் என்பது அல்ல. உங்கள் பாவங்களை அறிக்கையிட நீங்கள் மனதாயிருந்தால், அவற்றை மன்னிக்க தேவன் நீதியுள்ளவராயிருக்கிறார். நீங்கள் அவற்றை அறிக்கையிட்டிருந்தால், தேவனுடைய வார்த்தை உண்மை என்று நீங்கள் விசுவாசித்தால், அவர் சொன்னார், "நீங்கள் அவற்றை அறிக்கையிட்டால், நான் அவற்றை மன்னிப்பேன்." மேலும் தேவன் உங்களை மன்னித்து விட்டார் என்று நீங்கள் விசுவாசித்து, தேவனுடைய கிருபையினால் இன்று இரவு இங்கே நின்று, தேவனுக்கு உங்கள் அர்ப்பணிப்பைச் செய்து, மரணம் உங்களை விடுவிக்கும் வரை உங்களுக்குத் தெரிந்தவரைக்கும் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கு இங்கிருந்து செல்வீர்கள் என்றால்; நீங்கள் விசுவாசித்து அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அதைச் செய்ய வாக்குறுதி அளித்தால், பலிபீடத்தின் அருகே நிற்கும் நீங்கள் உங்கள் கையை உயர்த்துவீர்களா? தேவனுக்கு ஸ்தோத்திரம். அது நல்லது. அது... கைகளை உயர்த்திய ஒவ்வொருவரும் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். 102 இப்போது, நீங்கள் கூட்டத்தாரைப் பார்த்துத் திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன், பலிபீடத்தின் அருகே இருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டத்தாரைப் பார்த்துத் திரும்புங்கள். இப்போது, கூட்டத்தாரே இந்த வழியே பாருங்கள். என் சகோதர சகோதரிகளே, மக்கள் பார்க்கும் படியாக உங்கள் கைகளை உயர்த்துங்கள்... அதாவது, பலிபீடத்தின் அருகே இருக்கும் இந்தச் சகோதரர்கள், நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டீர்கள் என்பதை மக்கள் பார்க்கும்படி. தேவன் என்ன சொன்னார்? "மனுஷர் முன்பாக என்னை அறிக்கையிடுகிறவன் எவனோ, அவனை நானும் என் பிதாவின் முன்பாகவும், பரிசுத்த தூதர்களின் முன்பாகவும் அறிக்கையிடுவேன்." அதன் அர்த்தம் என்ன? இன்று இரவு ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயர்கள் எழுதப் பட்டிருக்கின்றன. அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. அதுதான் வேதாகமம் என்றும், அதைத்தான் தேவன் சொன்னார் என்றும் இங்கு எத்தனை பேர் சொல்கிறீர்கள்? உங்கள் கையை உயர்த்துங்கள். ஆமென். 103 இப்போது, நீங்கள் ஒவ்வொருவரும் ஐக்கியத்திற்காகச் சிறிது நேரம் ஒதுக்க விரும்புகிறீர்கள் என்பதை நான் அறிவேன். இப்போது, இங்கே இருக்கும் இந்த கனவான்களிடமும், பலிபீடத்தின் அருகே நிற்கும் சகோதரிகளிடமும், என் சகோதர சகோதரிகளிடமும் இன்னொரு வார்த்தை பேச விரும்புகிறேன். தெற்கே... நான் உங்களை அதிக நேரம் காத்திருக்கச் செய்கிறேன் என்று எனக்குத் தெரியும், ஆனால் இதற்காக எனக்கு இன்னும் ஒரு இரவு மட்டுமே இருக்கிறது. தெற்கே... இப்போது, நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன், பலிபீடத்தின் அருகே நின்று அந்த வழியே பார்த்துக்கொண்டிருக்கும் நீங்கள். வெகு காலத்திற்கு முன்பு அவர்களுக்கு அடிமைத்தனம் இருந்தது. அவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து பாவம் அந்த நிறமுள்ள மக்களை (போயர்களை) கொண்டுவந்து, தெற்கே உள்ள விவசாயிகளுக்கு-விவசாயிகளுக்கு விற்பார்கள். அவர்கள் அவர்களை அடிமைகளாக்குவார்கள். மேலும் அந்தப் பரிதாபமான மக்கள் மிகவும் சோர்வடைந்து, வீட்டை விட்டு வெகு தொலைவில், என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார்கள். அவர்கள் தங்கள் மக்களை விட்டு விலகியிருந்தார்கள், இனி ஒருபோதும் திரும்பிப் போக முடியாது என்று அறிந்திருந்தார்கள். மேலும் எஜமானர்கள், வேலை வாங்குபவர்கள், அவர்களை வேலை வாங்கும்படி சவுக்கினால் அடித்து, எல்லாவற்றையும் செய்வார்கள். மேலும் அவர்கள்-ஒரு கடினமான வாழ்க்கையைக் கொண்டிருந்தார்கள். 104 சுமார் நூறு அடிமைகளை வைத்திருந்த ஒரு அடிமை எஜமானனிடம் இருந்தவர்களில்... ஒரு இளைஞனை அவர்கள் கவனிக்க நேரிட்டது. மேலும் இந்த இளைஞன், அவன் மிகவும் தைரியமான ஒருவனாக இருந்தான், எப்போதும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டும், முகவாயை உயர்த்திக்கொண்டும் இருப்பான். அவன் எதையும் செய்யத் தயாராக இருந்தான், எந்த நேரத்திலும் சுறுசுறுப்பாக இருப்பான். சில அடிமை வியாபாரிகள் அந்த வழியே வந்து, "இந்த இளைஞனை இவ்வளவு தைரியசாலியாக மாற்றுவது எது? என்ன... மற்றவர்களுக்கு மேலாக அவனை ஒரு அதிகாரியாக ஆக்கியிருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை, ஐயா. அவன் வெறும் ஒரு அடிமைதான்" என்றார். அவர்கள் கேட்டார்கள், "என்ன... மற்றவர்களுக்குக் கொடுப்பதை விட இவனுக்குச் சற்று சிறப்பான உணவைக் கொடுக்கிறீர்களா?" அதற்கு அவர், "இல்லை, ஐயா. மற்றவர்களுக்குக் கிடைக்கும் அதே உணவுதான் இவனுக்கும் கிடைக்கிறது" என்றார். "சரி," என்று சொல்லி, "அவனை இவ்வளவு தைரியசாலியாக மாற்றுவது எது, அவன் தன்னை எப்படி இப்படி நடத்திக்கொள்கிறான்" என்றார்கள். அவர் சொன்னார், "விஷயம் என்னவென்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். நான் சமீபத்தில்தான் அதைக் கண்டுபிடித்தேன்." அவர் சொன்னார், "அவன் அந்தக் கோத்திரத்தின் ராஜாவினுடைய மகன்." மேலும் சொன்னார், "வீட்டை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும், தான் ஒரு ராஜாவின் மகன் என்று அவனுக்கு இன்னும் தெரியும். மற்றவர்களின் ஒழுக்கத்தை நிலைநிறுத்த அவனுடைய நடத்தை சிறப்பாக இருக்க வேண்டும்." 105 என் நண்பர்களே, இன்று இரவு நீங்கள் இங்கிருந்து செல்லும்போது, நீங்கள் ராஜாவின் குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் இருக்கி றீர்கள். நீங்கள் இங்கே அந்நியர்களாய் இருக்கிறீர்கள்; உங்களை ராஜாவின் குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் நடத்திக் கொள்ளுங்கள்; மீதமுள்ளவர்கள் முன்னே வந்து உங்களோடு கை குலுக்கிக் கொள்வார்கள். சுற்றி நிற்கும் நீங்கள், நாம் இந்தப் பழைய சிறந்த பாடலைப் பாடும்போது, "போர் முடியும் போது, நாம் கிரீடத்தைச் சூடுவோம்." உங்களுக்கு அந்தப் பாடல் தெரியுமா, "போர் முடியும் போது, நாம் கிரீடத்தைச் சூடுவோம்", அந்தப் பாடலை நீங்கள் பாடுவீர்களா? சரி. "போர் முடியும் போது"... "போர் முடியும் போது, நாம் கிரீடத்தைச் சூடுவோம்" என்ற பாடல் எத்தனை பேருக்குத் தெரியும்? உங்களில் முடிந்தவர்கள் அனைவரும், முன்னே நடந்து வந்து இந்த மக்களுடன் கை குலுக்கி, அவர்களுக்கு ஐக்கியத்தின் வலதுகரத்தைக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சரி, இப்போது அனைவரும் சேர்ந்து பாடுவோம். போர் முடியும் போது, நாம் கிரீடத்தைச் சூடுவோம். ஆம்! நாம் கிரீடத்தைச் சூடுவோம், ஆம்! நாம் கிரீடத்தைச் சூடுவோம். போர் முடியும் போது, நாம் கிரீடத்தைச் சூடுவோம், அந்தப் புதிய... இப்போது, திரும்பி எல்லோரும் ஒருவரோடு ஒருவர் கை குலுக்கிக் கொள்ளுங்கள். நாம் பாடும்போது ஒருவரோடு ஒருவர் கை குலுக்கிக் கொள்ளுங்கள். கிரீடம், கிரீடத்தைச் சூடுவோம்... பெந்தெகொஸ்தே எங்கே தவறியது... 2